பேருந்தில் அடைச்சி கொண்டு போறது எல்லாம் அந்த காலம்! ஏர்போர்ட்டுக்கு வந்துட்டாலே எல்லாத்தையும் அனுபவிக்கலாம்

பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா (BMW Group India), சொகுசு கார்களை விற்பனை செய்வதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்துக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் பிஎம்டபிள்யூ ஆகும். இந்த நிலையில், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் விஐபி முனையத்தின் லக்சரி மொபிலிட்டி பார்ட்னர் (Luxury Mobility partner)-ஆக பிஎம்டபிள்யூ தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு விமான நிலையத்திலும் பயணிகளை விமானத்திற்கு அருகே அழைத்து செல்வதற்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் இந்த போக்குவரத்துக்கு பேருந்துகளையும், வேன்களையும் பயன்படுத்துவதை தான் பரவலாக பார்த்திருக்கிறோம். ஆனால், விலையுயர்ந்த சொகுசு கார்களும் பயன்படுத்தப்படுகின்றன என சொன்னால் நம்ப முடிகிறதா?

bmw electric cars at airport

ஆம்... செல்வாக்கு மிகுந்த பயணிகளை விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பிற்கு அழைத்து செல்ல சொகுசு கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில வெளிநாடுகளில் இந்த போக்குவரத்துக்கு ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனது விவிஐபி (VVIP) பயணிகளுக்காக ஓர் அதிரடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதுதான், பிஎம்டபிள்யூ க்ரூப் உடன் கூட்டணி ஏற்படுத்தி கொள்வது ஆகும். இந்த கூட்டணியின்படி, பிஎம்டபிள்யூ க்ரூப் தனது ஐ7 எலக்ட்ரிக் கார் (i7 Electric Car)-ஐயும், மினி கண்ட்ரிமேன் (MINI Countryman) எலக்ட்ரிக் காரையும் பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (Kempegowda International Airport)-க்கு அனுப்பி வைக்க உள்ளது.

மினி ஆனது பிஎம்டபிள்யூ க்ரூப்பின் கீழ் செயல்படும் துணை கார் நிறுவனம் ஆகும். பெயருக்கேறப் மினி நிறுவனத்தில் இருந்து அளவில் சிறியதான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய கார்களுள் மினி கண்ட்ரிமேன் ஒன்றாகும். இது ஒரு எலக்ட்ரிக் கார் ஆகும். கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கு வேண்டுமாயின் சிறியதாக இருந்தாலும், உட்புறத்தில் போதுமான இடவசதியை கொண்டதாக விளங்குகிறது.

அதேபோல், மினி கார்கள் அளவில் சிறியவை ஆக இருந்தாலும், அவற்றின் விலைகள் பல இலட்ச ரூபாய்களாக உள்ளன. பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், இது பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கும் விலையுயர்ந்த லக்சரி செடான் கார் ஆகும். அந்த அளவிற்கு, தாழ்வான உடலமைப்பை கொண்ட இந்த காரினுள் சவுகரியமான அம்சங்களும், தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்படுகின்றன.

bmw electric cars at airport

இந்த விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ மற்றும் மினி எலக்ட்ரிக் கார்கள் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் விஐபி முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. இதுகுறித்து பிஎம்டபிள்யூ க்ரூப்பின் தலைவரும், சிஇஓ-வுமான விக்ரம் பாவா கூறுகையில், "பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தில் புதுமை, ஆடம்பரம் மற்றும் பொறுப்புடன் நிலையான இயக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் விஐபி முனையத்தில் விஐபி-களின் போக்குவரத்துக்கான அதிகாரப்பூர்வ தேர்வாக இருக்கும் பிஎம்டபிள்யூ ஐ7 மற்றும் மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் கார்கள் பிரீமியம் தரத்திலான பயணத்தை அவற்றின் ஒப்பிட முடியாத நேர்த்தியுடன் மற்றும் பூஜ்ஜிய-மாசு உமிழ்வு செயல்திறன் உடன் மறுவரையறை செய்கின்றன.

பிரமுகர்கள், வணிக தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்கள் பெங்களூரு வழியாக பயணிக்கும்போது அவர்கள் மின்சார ஆடம்பரம் மற்றும் அதிநவீன தொழிற்நுட்பத்தின் சுருக்கத்தை அனுபவிப்பார்கள். இந்தியாவில் பொறுப்பான இயக்கத்திற்கான புதிய அளவுகோல்களை அமைப்பார்கள்" என தெரிவித்துள்ளார். பிஎம்டபிள்யூ க்ரூப்பிற்கு நமது சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2007ஆம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள கடந்த காலங்களில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றாகவே இதனை பார்க்கிறோம். இதன் மூலமாக இதுவரையில் பிஎம்டபிள்யூ காரில் பயணம் செய்திராத செல்வந்தர்கள் பிஎம்டபிள்யூ காரின் சொகுசான பயண அனுபவத்தை பெற முடியும். அதன் மூலம் ஈர்க்கப்பட்டு புதியதாக பிஎம்டபிள்யூ காரை வாங்க கூடும்.

FAQs
மினி பிராண்ட் எப்போதில் இருந்து இந்தியாவில் செயல்பட துவங்கியது?

2012 ஜனவரியில் இருந்து.

இந்தியாவில் எத்தனை பிஎம்டபிள்யூ கார் மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன?

10 கார் மாடல்கள்.

பிஎம்டபிள்யூ க்ரூப்பின் கீழ் இந்தியாவில் என்னென்ன நிறுவனங்கள் செயல்படுகின்றன?

பிஎம்டபிள்யூ, மினி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2025, 19:57 [IST]
English summary
Bmw i7 and mini countryman electric cars at bengaluru kempegowda international airport
மேலும்... #bmw #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+