ஒரு சல்லி பைசா எக்ஸ்ட்ரா குடுக்க வேணாம்! புதிய விலை திட்டத்தை அறிவித்த பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் காரான ஐ7 காருக்கான புதிய விலை திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் இனி இந்த வாங்கும் வாடிக்கையளர்கள் இந்தியா முழுவதும் ஒரே விலையில் வாங்க முடியும். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விலை என்ற பேச்சுக்கு இடம் இல்லாத வகையில் இந்த விலை திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பலன் பெறப்போகிறார்கள். இந்த புதிய விலை திட்டம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் காஸ்ட்லியான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகள் சொகுசு அம்சம் நிறைந்த காராகவும் அதே நேரம் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும் காராகவும் இருக்கும். இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகயுள்ள நிலையில் அந்த செக்மெண்டையும் பிடிக்க அந்நிறுவனம் இந்த யுக்தியை கையாண்டுள்ளது.

BMW i7 Pricing

இந்நிலையில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் காரான ஐ7 காருக்கான புதிய விலை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் எக்ஸ் ஷோரூம் விலை போக எந்த மாநிலத்தில் பதிவு செய்கிறார்களோ அதற்கான கட்டணம் வரி அனைத்தையும் தனியாக செலுத்த வேண்டும். ஆனால் தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் இதை மாற்றியமைத்துள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது இந்த காரை வாங்கினால் ஒரே விலை என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இனி இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கார் விலைக்கு பிறகான செலவுகளை இனி பிஎம்டபிள்யூ நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இந்தியா முழவதும் உள்ள பிஎம்டபிள்யூ ஷோரூம்களில் கிடைக்கும் வகையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

BMW i7 Pricing

தற்போது பிஎம்டபிள்யூ ஐ7 கார் ரூ2.05 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தற்போது இந்த விலைக்கே ஜிஎஸ்டி, காம்பென்ஷேஷன் வரி அடங்கும் வகையில் விலையை மாற்றியமைத்துள்ளது. இது போக வாடிக்கையாளர்கள் டிசிஎஸ், இன்சூரன்ஸ் மற்றும் கூடுதல் உள்ளூர் வரிகளை மட்டுமே செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்த காருக்கான பதிவு கட்டணத்தை அந்நிறுவனமே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ7 கார் என்பது முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் கார் ஆகும். இந் காரில் ஸ்பிளிட் ஹெட்லைட், டே டைம் ரன்னிங் லைட் ஆகிய அம்சங்கள் உள்ளது. இந்த காரில் உள்பகுதியில் கர்வ்டு டிஸ்பிளே, லைவ் காக்பிட் புரோபஷனல் செட்டப், பின்பக்க பயணிகளுக்காக எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ் அமினிட்டிஸ் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. பின்பக்க சீட்டுகளை 42.5 டிகிரி வரை சாய்த்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது போக மசாஜ் சீட்டுகள், தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்கும் என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன் ஆகிய அம்சங்கள் இதில் இருக்கிறது.

இந்த காரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5ம் தலைமுறை இ-டிரைவ் செட்டப் வழங்கப்பட்டுள்ளுது. இது 449 எச்பி பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.5 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக வடிவமைத்துள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 603 கி.மீ பயணிக்கும் தின் கொண்டாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் காருக்கான விலையை அதிக குழப்பம் இல்லாமல் இது தான் விலை என மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கியது நிச்சயம் பாராட்டதக்கது தான். இந்த விலை திட்டத்தை மற்ற கார்களுக்கும், அதே நேரம் மற்ற நிறுவனங்களும் இது போன்ற விலை திட்டத்தை அறிமுகப்படுத்தினால் இது நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2025, 12:00 [IST]
English summary
Bmw i7 pricing registration cost included india
மேலும்... #bmw #india #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+