சென்னையில் தொழிற்சாலை வெச்சவங்க தோற்று போனதா சரித்தரமே இல்ல! BMW இந்த அளவுக்கு எதிர்பார்த்து இருக்காது!
சென்னை, இந்தியாவின் தொழில்துறை தலைநகரம் என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு சென்னையிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது தலைமையகத்தையும், தொழிற்சாலைகளையும் கொண்டுள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்களை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ (BMW), ஹூண்டாய் (Hyundai), யமஹா (Yamaha) என பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சென்னையில் தங்களது வாகன உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ளன. இவ்வளவு ஏன், சீனாவில் இருந்து சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் நுழைந்த எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD) நிறுவனத்திற்கு கூட சென்னைக்கு அருகே திருவள்ளூரில் தான் அசெம்பிள் தொழிற்சாலை உள்ளது.
இதில், பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலையில் வெற்றிக்கரமாக 1 லட்சமாவது கார் என்ஜினை உற்பத்தி செய்து வெளியேற்றி உள்ளனர். அதாவது, சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் மட்டும் 1 லட்சம் கார் என்ஜின்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் கார் என்ஜின்களை இந்தியாவின் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (Force Motors) நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்கிறது.

இதனாலேயே, கார் என்ஜின் உற்பத்தியில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அடைந்திருக்கும் 1 லட்சம் என்கிற இமாலய மைல்கல் சாதனையில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பும் உள்ளது. மேலும் இதனால்தான், பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் நடைபெற்ற 1 லட்சமாவது கார் என்ஜினை கார் அசெம்பிள் லைனுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சியில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசான் ஃபிரோடியாவும் கலந்துக் கொண்டார்.
மேலும், பிஎம்டபிள்யூ ஏஜி நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ-உற்பத்தி நெட்வொர்க்-2 பிரிவின் துணை தலைவர் மார்கஸ் வோலென்ஸ் மற்றும் சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் தாமஸ் தோஸ் அவர்களும் பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்குள் நடத்தப்பட்ட இந்த சிறிய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். பிஎம்டபிள்யூ நிறுவனமும், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக கூட்டணியில் உள்ளன.

பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை தொழிற்சாலை ஆனது கடந்த 2015ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இங்கு பல பிஎம்டபிள்யூ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், சென்னை தொழிற்சாலையை முக்கியமாக என்ஜின் உற்பத்திக்கு அதிகமாக பிஎம்டபிள்யூ க்ரூப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிஎம்டபிள்யூ கார்களுக்கும் இந்த தொழிற்சாலையில் இருந்துதான் என்ஜின்கள் செல்கின்றன.
இத்தகைய தொழிற்சாலையில் இருந்து வெளிவந்துள்ள 1 லட்சமாவது என்ஜின் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (X5) கார் ஒன்றில் பொருத்தப்பட உள்ளது. சென்னையில் உள்ள இந்த பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் மிகவும் அட்வான்ஸான தானாக இயங்கக்கூடிய புரோடெக்ஷன் லைன் (Production Line) செயல்படுகிறது. அதுமட்டுமின்றி, தொழிற்சாலையின் செயல்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டல் மூலமாக ஒருங்கிணைத்து உள்ளனர்.
மற்ற வெளிநாடுகளில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலைகளுக்கு இணையாக, சர்வதேச தரத்தில் இருக்கும் இந்த சென்னை தொழிற்சாலை ஆனது இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தற்போதைய நிலைமைக்கு முக்கியமான காரணமாகும். இந்தியாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்துக்கு அடுத்து 2வது இடத்தில் தற்சமயம் பிஎம்டபிள்யூ உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தரத்தில் இருந்தாலும், இந்த தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுள் பெரும்பாலானவை முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படுபவை ஆகும். இதன் மூலமாக இந்தியாவின் வளர்ச்சிக்கும் பிஎம்டபிள்யூ க்ரூப் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலிலும் குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கும் பிஎம்டபிள்யூ க்ரூப் தன்னால் ஆன உதவிகளை வழங்கி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முக்கியமான சாதனையாக இதனை சொல்லலாம். ஏனெனில், 10 வருடங்களில் 1 லட்சம் கார் என்ஜின்கள் உற்பத்தி என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதனை இந்தியாவின் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உதவியில்லாமல், பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் நிகழ்த்தி காட்டியிருக்க முடியுமா என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications








