இந்த கலருக்காகவே எத்தனை பேர் இந்த காரை வாங்க போறாங்களோ!! பிஎம்டபிள்யூ உருவாக்கினாலே தனி ஸ்பெஷல் தானே!

பிஎம்டபிள்யூ இந்தியா (BMW India) நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிள் (SAV), 'ஐஎக்ஸ்1' லாங் வீல்பேஸ் (iX1 Long Wheelbase), தற்போது புதிய வண்ணம் மற்றும் ஆடம்பரமான உட்புற அலங்கார ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மேலும், இந்த கார் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதும் ஓர் சிறப்பாகும்.

இந்த புதிய மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அனைத்து பிஎம்டபிள்யூ இந்தியா டீலர்ஷிப் ஷோரூம்களிலும் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். மெட்டாலிக் ஷேடில் புதிய 'நைட் டஸ்க் ப்ளூ' (Night Dusk Blue) பெயிண்ட் ஆப்ஷன், ஏற்கனவே உள்ள பெயிண்ட் ஆப்ஷன்கள் உடன் இணைந்து, ஐஎக்ஸ்1 லாங் வீல்பேஸ் காருக்கு ஒரு ஆழமான, அதிநவீன அழகியலை வழங்குகின்றன.

bmw ix1 electric car gets night dusk blue paint option

கார்பன் பிளாக், மினரல் ஒயிட் மற்றும் ஸ்கைஸ்கிராப்பர் கிரே ஆகியவற்றுடன் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 இப்போது மொத்தம் நான்கு கவர்ச்சிகரமான வெளிப்புற வண்ணங்களில் வழங்கப்படுகிறது. உட்புறம், புத்தம் புதிய 'வேகன்ஸா ஸ்மோக் ஒயிட் + அட்லஸ் கிரே டூவல் டோன்' (Veganza Smoke White + Atlas Grey Dual Tone) மற்றும் 'வேகன்ஸா காஸ்டானியா' (Veganza Castanea) ஆகிய உயர்தர உட்புற அலங்கார ஆப்ஷன்களுடன் ஆடம்பரமான புதிய தோற்றத்தைப் பெறுகிறது.

கேபின் முழுவதும் 'விலங்கு/பறவைகளில் இருந்து பெறப்படாத லெதரில்' அலங்கரிக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் தனித்துவமான 3D தையல் முறை கேபினின் பிரீமியம் உணர்வை அதிகரிக்கிறது. 'கோகூனிங் எஃபெக்ட்' (Cocooning Effect) என்கிற வடிவமைப்புத் தத்துவம், தேர்ந்தெடுக்கும் உட்புற அலங்காரத்தின் வண்ணத்தை இருக்கைகளுக்கு அப்பால் கதவு பேனல்கள், டாஷ்போர்டு மற்றும் ஸ்பீக்கர் மெஷ் வரை விரிவுபடுத்துகிறது.

bmw ix1 electric car gets night dusk blue paint option

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 லாங் வீல்பேஸ் ஆனது நடைமுறைத்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை ஒரே தொகுப்பில் வழங்கும் ஒரு பிரீமியம் காராகும். 4,616 மிமீ நீளம் மற்றும் 2,800 மிமீ வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) கொண்ட இந்த கார் அதன் பிரிவில் மிகப்பெரிய காராக மட்டுமல்லாமல், இந்தியாவில் வழங்கப்படும் மிக நீண்ட 5 இருக்கைகள் கொண்ட எஸ்யூவிகளில் ஒன்றாகவும் உள்ளது.

ஐஎக்ஸ்1 லாங் வீல்பேஸ் காரின் மையத்தில் ஐந்தாம் தலைமுறை பிஎம்டபிள்யூ இ-டிரைவ் (eDrive) தொழில்நுட்பம் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெயின் யூனிட் அதிகப்பட்சமாக 204 hp ஆற்றலையும், 250 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. காரின் அடித்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கச்சிதமான உயர் மின்னழுத்த லித்தியம்-இரும்பு பேட்டரி 66.4 kWh மொத்த திறனைக் கொண்டுள்ளது. இது 531 கிமீ வரை (MIDC) ஓட்டும் வரம்பை வழங்குகிறது.

bmw ix1 electric car gets night dusk blue paint option

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள், இது பிராண்டின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராகவும், சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் பிஎம்டபிள்யூவின் தலைமைக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாகவும் மாறியுள்ளது.

இத்தகைய காருக்கு சரவுண்ட் வியூ கேமரா போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் தற்போது மேம்படுத்தப்பட்ட வண்ண மற்றும் உட்புற அலங்காரத் தேர்வுகளை வழங்குவது என, வாடிக்கையாளர்களின் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப ஐஎக்ஸ்1 லாங் வீல்பேஸ் காரின் மதிப்பை மேம்படுத்துவதில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய அப்டேட்கள் ஐஎக்ஸ்1 காரில் நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடம்பர உணர்வை வழங்குகின்றன. குறிப்பாக, காரின் உட்பகுதி முழுவதும் ஒரு மென்மையான உணர்வைத் தருகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 6, 2025, 15:58 [IST]
English summary
Bmw india introduces new night dusk blue paint option on its ix1 electric car
மேலும்... #bmw #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X