BMW காரை கோடி ரூபாயில் தான் வாங்க முடியும் என்பது எல்லாம் அந்த காலம்! 50 லட்ச ரூபாய்க்குள் வந்துள்ள புதிய கார்

பிஎம்டபிள்யூ இந்தியா (BMW India) நிறுவனத்தில் இருந்து புதியதாக 2-சீரிஸ் கிரான் கூபே (2-Series Gran Coupe) என்கிற விலையுயர்ந்த சொகுசு கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

புதிய பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே கார் '218 எம் ஸ்போர்ட்' (218 M Sport) மற்றும் 218 எம் ஸ்போர்ட் புரோ என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.46.90 லட்சம் மற்றும் ரூ.48.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

bmw 2-series gran coupe launched

கம்பீரமான தோற்றம் மற்றும் கூர்மையான டிசைனிலான பாடி பேனல்கள் உடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே கார் அதன் முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும் 20மிமீ கூடுதல் நீளமானது, 15மிமீ அகலமானது மற்றும் 15மிமீ உயரமானது ஆகும். காரின் முன்பக்கத்தில் மெல்லியதான தோற்றத்தில் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹெட்லைட்களுக்கு குறுக்காக, பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய டி.ஆர்.எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹெட்லைட் சிஸ்டத்திற்கு கீழே செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட ஏர் இண்டேக்ஸ் உள்ளது. பிஎம்டபிள்யூ கார்களுக்கே உண்டான 'கிட்னி' வடிவிலான கிரில் பகுதி ஆனது இந்த புதிய 2-சீரிஸ் கிரான் கூபே காரில் இன்னும் மேம்பட்ட டிசைனில் உள்ளது.

காரின் கிட்னி வடிவ கிரில்லில் செங்குத்தாக பொருத்தப்பட்ட ஸ்லாட்கள் உள்ளன. புதிய 2-சீரிஸ் கிரான் கூபே காருக்கு உள்ளே டேஸ்போர்டில் வளைவான இரட்டை-திரை செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று 10.7-இன்ச்சில் பொழுதுப்போக்கிற்கான இன்ஃபோடெயின்மெண்ட் திரையாகவும், மற்றொன்று 10.25-இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரையாகவும் உள்ளது.

டேஸ்போர்டுக்கு கீழே செண்டர் கன்சோல் பகுதியில் பொத்தான்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக தொடுதல் மூலமாக கண்ட்ரோல் செய்யலாம். இவற்றை விட முக்கியமாக, இந்த புதிய பிஎம்டபிள்யூ காரின் உட்புறத்தில் கேபினில் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் கேபினை போட்டோக்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

2025 பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே காரில் 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 156 எச்பி மற்றும் 230 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவான பிஎம்டபிள்யூ காராக புதிய 2-சீரிஸ் கிரான் கூபே விளங்குகிறது. ஆதலால், பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்க விரும்புபவர்கள் இந்த லேட்டஸ்ட் காரை வாங்கலாம். விற்பனையில் இந்த காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஏ-கிளாஸ் கார் போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 18, 2025, 19:47 [IST]
English summary
Bmw india launches 2 series gran coupe check price features all details here
மேலும்... #bmw #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+