செகண்ட் ஹேண்ட் கார் விலையில் புதிய பிஎம்டபிள்யூ இவி காரா! சிங்கிள் சார்ஜ்ல 531 கிமீ போகும்!
BMW iX1 நீண்ட வீல் பேஸ் கொண்ட எலெக்ட்ரிக் SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது BMW இந்தியாவிற்கு ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். இது இந்தியாவில் நேரடியாக தயாரிக்கப்படும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்தியா மொபிலிட்டி எக்ஸ்போவில் இந்த எலெக்ட்ரிக் SUV அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த SUV இன் விலை ரூ.49 இலட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.
BMWயின் சென்னை உற்பத்தி நிலையத்தில் iX1 தயாரிக்க முடிவு செய்திருப்பது , இந்திய மார்கெட் மீதான BMWயின் நம்பிக்கையை காட்டுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் SUV யை ஓட்டுவதற்கு ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் BMW விற்பனையாளரை தொடர்பு கொண்டு அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். வாகனங்கள் டெலிவரி விரைவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BMW iX1 LWB, eDrive20L M ஸ்போர்ட் வேரியன்டில் மட்டுமே இது கிடைக்கிறது. இது 66.4 kWh கொள்ளளவு எலெக்ட்ரிக் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரி PMSM எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 204 hp பவர் மற்றும் 250 nm டார்க் திறனை உருவாக்குகிறது. இந்த எலெக்ட்ரிக் SUV ன் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் பெரிய வீல் பேஸ் தான்.
முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியுடன் iX1 531 km தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட. விரைவாக சார்ஜ் செய்ய வேண்டும் என்பவர்களுக்கு 130 kW DC சார்ஜர் உள்ளது. 10 % லிருந்து 80 % சார்ஜ் செய்ய 29 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 10 நிமிடங்களில் 120 km வரை தூரத்தை இயக்கூடிய சார்ஜை ஏற்றிவிடும். மாற்று முறையாக, 11 kW AC சார்ஜர் மூலம் 6.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும். வாகனத்தில் 11 kW வால் பாக்ஸ் சார்ஜர் உள்ளது.

iX1 ன் வடிவமைப்பை பார்க்கும் போது, அதன் பெரிய BMW கிட்னி கிரில் eye-catching ஆக இருக்கிறது. 'I' என்ற குறியீடு அதன் எலெக்ட்ரிக் தன்மையை குறிக்கிறது. வாகனத்தின் ஸ்லீக் அடாப்டிவ் LED ஹெட்லைட்கள் மற்றும் கிரில் மேல் குரோம் பட்டைகள் அதன் நவீன அழகை வைத்திருக்கின்றன. இதன் சில்ஹவுட் மற்றும் வடிவமைப்பு தற்போதைய X1 மாடலுடன் ஒத்திருக்கிறது.
18-inch M லைட் அலாய் வீல்கள் மின் வாகனங்களுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்பக்கம் L- வடிவ LED லைட் பேனல்கள், கனெக்டெட் ஸ்பாய்லர் மற்றும் ஸ்கிட் பிளேட் இணைக்கப்பட்டுள்ளன. அளவுகள் பார்க்கும் போது, iX1 1,845 mm அகலத்தை கொண்டுள்ளது. வீல்பேஸ் 112 mm அதிகரித்து 2,800 mm ஆகியுள்ளது. மொத்த நீளம் 116 mm அதிகரித்து 4,616 mm ஆகியுள்ளது.

விசாலமான இடத்தையும் குறிப்பாக பின்ன சீட் பயணிகளுக்கு இடவசதியையும் வழங்குகிறது. iX1 LWB பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. மினரல் வைட், ஸ்கைஸ்க்ரேப்பர் கிரே, M கார்பன் பிளாக், M போர்டிமாவோ பளு, ஸ்பார்க்ளிங் காப்பர் கிரே. ஆகிய கலர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது
BMW iX1 LWB ன் உட்புறம் X1 ன் வடிவமைப்பு போல இருக்கும். அதில் "Widescreen Curved Display" போன்ற மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த டிஸ்ப்ளே 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை 10.7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரையுடன் இணைக்கிறது. இது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
வாகனத்தில் பனோரமிக் சன்ரூஃப், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், 205W 12 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற மேம்பட்ட சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சே்களை பொருத்தவரை iX1 LWB ல் 2 வது நிலை மேம்பட்ட டிரைவர் அசிஸ்ட் அம்சங்கள், பார்க் அசிஸ்டன்ட் அம்சம், 8 ஏர் பேக்குகள், ISOFIX அங்கர்கள் குழந்தைகள் சீட்டுக்கான இணைப்புகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்றவை சேர்க்கப்பட்டு சகல பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இறுதியாக, BMW iX1 நீண்ட வீல் பேஸ் கொண்ட எலெக்ட்ரிக் SUV, BMW இந்தியாவின் தயாரிப்புகளில் ஒரு முக்கியமான வைத்திருக்கிறது. இது பெரிய வீல் பேஸ், மேம்பட்ட வடிவமைப்பு அம்சங்கள், சௌகரியமான உட்புறம் போன்றவற்றை கொண்டுள்ளது. சென்னை உற்பத்தி நிலையத்தில் தயாராக இருப்பது BMW ன் இந்திய சந்தை மீதான அர்ப்பணிப்பை காட்டுகிறது. மேலும் இந்த நவீன எலெக்ட்ரிக் வாகனத்தை வாடிக்கையாளர்கள் எளிதாக பெற முடியும். முன்பதிவுகள் தொடங்கி விட்டன. வாகனங்கள் விரைவில் டெலிவரிக்கு வந்து சேரும்.


Click it and Unblock the Notifications









