3கோடி ரூபா இருந்தா வீட்டை வாங்காதீங்க.. இந்த காரை வாங்குங்க.. அரண்மனையே உங்களுக்காக பயணிக்கிற மாதிரி இருக்கும்

இந்தியாவில் சொகுசு பங்களாக்களுக்கு இணையான வசதிக் கொண்ட கார் மாடல் ஒன்று புதிதாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. லெக்சஸ் எல்எக்ஸ் 500டி (Lexus LX 500d) மாடலே அது ஆகும். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த லக்சூரி காருக்கு அறிமுகமாக ரூ. 3 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அறிமுகத்தை தொடர்ந்து புக்கிங் பணிகளும் தொடங்கி இருக்கின்றன. இவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்ய அப்படி இந்த காரில் என்ன இருக்கின்றது என நீங்கள் கேட்கலாம்?.. இந்த காரில் அல்ட்ரா லக்சூரி அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. அவையே இந்த காரின் மிக அதிக விலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

2025 lexus lx 500d interior

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த காரில் அமர்ந்து பயணிக்கின்ற போது அரண்மனையே உங்களுக்காக சாலையில் மிதந்துச் செல்கின்ற மாதிரியான ஓர் ஃபீல் கிடைக்கும். ஆமாங்க, சொகுசு பங்களாவிற்கே டஃப் கொடுக்கக் கூடிய அம்சங்கள் பலவற்றை இந்த காரில் லெக்சஸ் நிறுவனம் வழங்கி உள்ளது.

உதாரணமாக அதிக மிருதுவான இருக்கைகள், விரைந்து கேபினை குளிர்விக்கும் திறன் கொண்ட ஏசி சிஸ்டம், கோப்பை தாங்கிகள், வயர் லெஸ் மற்றும் யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் பாயிண்டுகள், ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட கைகளுக்கு ஓய்வளிக்கும் பேட்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

2025 lexus lx 500d launched

இவற்றால் மட்டுமே உங்களுக்கு சொகுசான பயண அனுபவம் கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. அட்வான்ஸ்டு சஸ்பென்ஷன் செட்-அப்பும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே நீங்கள் மிகவும் சௌகரியமான டிராவல் அனுபவத்தைப் பெற காரணமாக உள்ளது. இதுதவிர, 12.3 அங்குல தொடுதிரை சிஸ்டம், 8 அங்குல அளவில் டிரைவருக்கான திரை மற்றும் 7 அங்குல வாகனத்தைக் கன்ட்ரோல் செய்வதற்கான திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, ஹெட்ஸ்-அப் திரை, பின் பக்க பயணிகளுக்காக 11.6 அங்குல அளவிலான பொழுதுபோக்கு திரை மற்றும் 25 ஸ்பீக்கர்கள் அடங்கிய சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், பயணிகளின் பாதுகாப்பிற்காக 10 ஏர் பேக்குகள், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்ட இருக்கின்றன.

2025 lexus lx 500d side design

இவற்றுடன் சேர்த்து அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டமும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 3.3 லிட்டர் டீசல் வி6 எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 309 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

4 வீல்களும் இயங்கும் வசதிக் கொண்டதே இந்த கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது. புதிய லெக்சஸ் எல்எக்ஸ் 500டி மொத்தமாகவே இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அர்பன் (LX 500d Urban) மற்றும் ஓவர்டெயில் (LX 500d Overtrail) ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரண்மனை மாதிரியான ஓர் அனுபவத்தை இந்த கார் வழங்கிவிடும் என கூறிவிட முடியாது. ஆனால், இதில் பயணிக்கும்போது மன்னர்களுக்கான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற ஓர் பிரீமியம் ஃபீல் நிச்சயம் இந்த காரில் கிடைக்கும். இதனால்தான் உலக அளவில் பணக்காரர்களின் மனம் கவர்ந்த மாடலாக லெக்சஸ் எல்எக்ஸ் 500டி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 18:29 [IST]
English summary
Bookings for the 2025 lexus lx 500d open new off road variant launched at rs 3 12 crore
மேலும்... #lexus #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X