ரூ30 ஆயிரம் சம்பளம் வாங்குனாலே கார் வாங்க முடியுமா? யார் யார் எந்தெந்த காரை வாங்கலாம்?

இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்கள் பலர் மாத சம்பளம் வாங்குபவர்கள் தான். இவர்கள் தங்கள் மாத சம்பளத்தை வைத்து என்ன காரை வாங்குவது என தெரியாமல் அதிகம் திண்டாடி வருகின்றனர். பெரும்பாலும் மாதம் ரூ30 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். இதில் யார் யார் தங்களது சம்பளத்திற்கு ஏற்ப என்ன காரை வாங்கலாம். என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

புதிதாக கார் வாங்கும் மாத சம்பளதாரர்கள் பெரும்பாலும் கடன் மூலமே காரை வாங்கி வருகின்றனர். அவர்கள் கடன் மூலம் காரை வாங்கும்போது சரியாக திட்டமிட வேண்டும் என்றால் 20/4/10 என்ற விதியை பின்பற்ற வேண்டும். அப்படி என்றால் நீங்கள் வாங்கும் காரில் தொகையில் 20 சதவீதத்தை முன்பணமாக வழங்க வேண்டும். மீதம் உள்ள தொகையை கடன் மூலம் 4 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில் பெற வேண்டும். இப்படியாக செலுத்தும் போது உங்கள் வருமானத்தில் 10 சதவீதம் தான். மாத இஎம்ஐயாக வழங்க வேண்டும்.

Budget Cars for Salaried People

இப்படியாக கணக்கிட்டு பார்க்கும் போது ரூ30,000 சம்பளம் வாங்குபவர்கள், ரூ50,000 சம்பளம் வாங்குபவர்கள், ரூ75,000 முதல் 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் என பிரித்து அவர்கள் பழைய கார் மார்கெட்டில் என்னென்ன கார்களை வாங்கலாம் புதிய கார் வாங்கும் போது என்னென்ன கார்களை வாங்கலாம் என்ற விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.

ரூ30,000 சம்பளம்:

ரூ30,000 சம்பளம் வாங்குபவர்கள் பழைய வாகனங்களை வாங்க முடிவு செய்தால் ஆல்டோ 800, மாருதி வேகன் ஆர் அல்லது ஹூண்டாய் இயான் போன்ற கார்களை தேர்வு செய்யலாம். புதிய வாகனங்களை வாங்க நினைத்தால் அவர்களுக்கு ஆல்டோ கே10, ரெனால்ட் க்விட் ஆகிய கார்கள் ஆப்ஷனாக இருக்கிறது.

Budget Cars for Salaried People

ரூ50,000 சம்பளம்:

மாதம் ரூ50,000 சம்பளம் வாங்குபவர்கள் பழைய வாகன மார்கெட்டில் வாகனம் வாங்க முடிவு செய்தால் பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி, பழைய மாடல் மாருதி ஸ்விஃப்ட் ஆகியன உள்ளன. இவை கண்டிஷன்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆகிய விபரங்களை பொறுத்து உள்ளது. புதிய வாகனங்களை தேர்வு செய்ய நினைத்தால் மாருதி ஸ்விஃப்ட், மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய கார்கள் உள்ளன.

சம்பளம் பயன்படுத்தப்பட் கார்கள் புதிய கார்கள்
ரூ 30,000 ஆல்டோ 800, வேகன் ஆர், இயான்

ஆல்டோ கே10, ரெனால்ட் க்விட்

ரூ 50,000 ஹோண்டா சிட்டி, மாருதி ஸ்விஃப்ட் மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, கிராண்ட் ஐ10 நியோஸ்
ரூ75,000-ரூ1 லட்சம் கிரெட்டா, கிராண்ட் விட்டாரா, எக்ஸ்யூவி 300, பலேனோ, ஹூண்டாய் ஐ20,அல்ட்ராஸ், எக்ஸ்டர், பஞ்ச், ஆரா, டிசையர், அமேஸ்

ரூ75,000-ரூ1 லட்சம் சம்பளம்:

மாதம் ரூ75,000 - ரூ1 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் பைழய மார்கெட்டில் வாகனம் வாங்க நினைத்தால் அவர்களுக்கு காம்பேக்ஸ் எஸ்யூவியில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகிய கார்கள் ஆப்ஷனாக உள்ளன. புதிய காரில் ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்பினால்
மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ் அல்லது ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களையும், உள்ளிட்ட கார்களை தேர்வு செய்யலாம்.

Budget Cars for Salaried People

புதிய கார்களில் காம்பேக்ட் செடான் செக்மெண்டில் ஹூண்டாய் ஆரா, மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் ஆகிய கார்கள் ஆப்ஷனாக உள்ளன.மைக்ரோ எஸ்யூவியில் ஹூண்டாய் எக்ஸ்டர், டாடா பஞ்ச் கார்களை அவர்கள் தேர்வு செய்யலாம். காரின் வேரியன்ட்களை அம்சங்களை பொருத்து அதன் விலையை பொருத்து நாம் முன்னர் சொன்ன 20/4/10 என்ற விதியின் கீழ் பொருத்தினால் நீங்கள் அதை நிச்சயம் வாங்கலாம். அது உங்களது அன்றாட பெருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்காது.

நீங்கள் பயன்படுத்தப்பட்ட வாகன மார்கெட்டில் வாகனங்களை தேர்வு செய்யும் போது அதன் கண்டிஷன், விலை உள்ளிட்ட விபரங்களை நன்கு விசாரித்து தெரிந்த பிறகு வாகனத்தை வாங்க முயற்சி செய்யுங்கள்.இந்த துறையில் பலர் அதிக தேய்மானமான கார்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு பெரிய பெருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதில் கவனமாக இருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பலர் வாகனம் வாங்கும் ஆசையில் இருக்கின்றனர். அவர்களது வருமானத்திற்கு ஏற்ற கார்களை தேர்வு செய்வதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் இந்த தகவல் உதவியாக இருக்கும். சம்பத்தை மீறி வாகனத்தை வாங்கி சிக்கிலில் மாட்டால் இருக்கவும் அது உதவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 16, 2025, 12:10 [IST]
English summary
Budget cars for salaried people who earns 30k to 1 lakh per month
மேலும்... #auto tips #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X