மாசம் 30 ஆயிரம் சம்பளம் வாங்குனா கூட இந்த கார்களை ஈஸியா வாங்கலாம்! எப்படி தெரியுமா?
உங்களுக்கு கார் வாங்கும் கனவு இருக்கிறதா? ஆனா, ₹30,000 சம்பளத்துல பட்ஜெட் டைட்டா? கவலைப்படாதீங்க! இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்ல பணத்தை வீணாக்காத வகையில நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கிறது. குறைவான விலை, ஸ்டைல், மற்றும் மைலேஜ் - இதையெல்லாம் கவனத்துல வெச்சு ₹5 லட்சத்துக்கு கீழே உள்ள விலையில் நிறைய கார்கள் இருக்கிறது. இதனால், சாதாரண வருமானம் உள்ளவங்களும் பெரிய செலவில்லாமல், கட்டுப்படுத்த முடியாத EMIகள் இல்லாமல் தங்களுடைய காரை வாங்கிக்கலாம்.
₹30,000 மாத வருமானம் இருக்கிறவங்களுக்கு, பட்ஜெட்டை ஸ்மார்ட்டாப்ளான் செய்தால் கார் வாங்கும் கனவு நினைவாகும். ₹1-2 லட்சம் முன்பணம் செலு்த்தினால் போதும், மாத EMI ரொம்ப குறைவாக, சம்பளத்துக்குள்ள வரும்படி கார் வாங்கலாம். அதனால, ₹6,000-₹8,000 EMI ஃபிக்ஸ் பண்ணி, ஃபைனான்ஷியல் பிளானை ஸ்மூத்தா செய்தால் காரை வாங்கலாம். எரிபொருள் செலவில், காசு மிச்சம் செய்ய வேண்டும் என்றால், CNG வேரியன்ட் காரை தேர்ந்தெடுக்கலாம்.

குறைவான விலையில், நம்பகமான கார் தேடுறவங்களுக்கு மாருதி சுஸுகி ஆல்டோ K10 ஒரு சூப்பர் ஆப்ஷன். ₹4.5 லட்சம்ல இருந்து விலை ஆரம்பிச்சு 24-25 kmpl மைலேஜ் வழங்குகிறது. சிறிய குடும்பங்களுக்கும் சிட்டி பயணங்களுக்கு இது ஏற்ற காராகஇருக்கும். அதே நேரம் குறைவான பராமரிப்பு செலவு தான் இந்த காருக்கு இருக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
ரெனால்ட் KWID இன்னொரு கவர்ச்சிகரமான ஆப்ஷன். ஸ்டைலிஷ் அப்பியரன்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் - இதெல்லாம் இந்த காரோ ஸ்பெஷல் அம்சங்கள். இந்த காரின் விலை வெறும் ₹5.2 லட்சம் தான், இந்த கார் 22-24 kmpl மைலேஜ் கொடுக்கிறது. எண்ட்ரி-லெவல் கேட்டகிரியில் இது ஒரு தனித்துவமான காராக இருக்கிறது.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை பொருத்தவரை ₹5.3 லட்சத்திலிருந்து விற்பனையாகி வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 24-26 kmpl மைலேஜ் கொடுக்கிறது. மினி SUV லுக், ஹை கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரின் ஹைலைட்ஸ். ரஃப் டெரெயின்ல பயணிக்க இது இந்த கார் பயனுள்ளதாக இருக்கும் இருக்கும்.
பட்ஜெட்லயே பாதுகாப்பு முக்கியம்னா, டாடா டியாகோ ஒரு நல்ல ஆப்ஷன். 4-ஸ்டார் GNCAP ரேட்டிங் இதோட பிளஸ். ₹5.6 லட்சம்ல இருந்து விலை ஆரம்பிச்சு 20-23 kmpl மைலேஜ் கொடுக்குது. பாதுகாப்பும் பெர்ஃபார்மென்ஸும் இந்த காரில் சேர்ந்து இருக்கிறது.

₹4.5 லட்சம் ஆன்-ரோடு விலை இருக்கிற காரை வாங்கி, ₹1 லட்சம் முன்பணம் செலுத்தினால், ₹3,55,254 லோன் வாங்க வேண்டியது வரும். இந்த லோனை 7 வருஷத்துக்கு 9% வட்டி விகிதத்தில் வாங்கினால், மாதம் EMI சுமார் ₹5,176 வரும். ₹30,000 சம்பளத்துல கார் வாங்கும் கனவு இப்போ எளிமையாக நிறைவேறும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஆட்டோமொபைல் மார்க்ட்டில் பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புறவங்களுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கிறது. பட்ஜெட்டை சிறப்பாக ப்ளான் செய்து, தேவைகளுக்குத் தகுந்த காரை தேர்ந்தெடுத்தால், கம்மி பணத்துக்குள்ள கார் வாங்க முடியும். மைலேஜ், பாதுகாப்பு, சொகுசு - எது முக்கியம்னாலும், அனைவருக்கும் ஏற்ற கார்கள் கம்மி பட்ஜெட்டிலேயே இந்தியம மார்கெட்டில் இருக்கிறது


Click it and Unblock the Notifications









