1.5 கோடி வாகனத்தை தயாரித்தது இந்த கம்பெனியா? இப்பதான் வந்துச்சு அதுக்குள்ள இப்படியா?
பிஒய்டி நிறுவனம் தனது 1.5 கோடியாவது வாகனத்தை தற்போது தயாரித்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளது. மிக வேகமாக இந்நிறுவனம் வளர்ந்து வருவதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சாதனை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சீனாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் பிஒய்டி, பில்டு யூவர் டிரீம்ஸ் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமே பிஒய்டி நிறுவனம் இந்நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. விற்பனையாகி வருகிறது. சீனாவில் உள்ள ஜினான் என்ற பகுதியில் ஆலை அமைத்து இந்நிறுவனம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆலையில் சமீபத்தில் தனது 1.5 கோடியாவது காராக டென்ஸா என்8எல் என்ற காரை தயாரித்துள்ளது. இது கார் ஒட்டு மொத்த கம்பெனியின் 1.5 கோடியாவது கார் மட்டுமல்ல அந்த குறிப்பிட்ட மாடலின் 15 ஆயிரமாவது காராகவும் இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதவம் வரை 4.182 மில்லியன் கார்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 11.3 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இதில் சீனாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. சுமார் 9.17 லட்சம் கார்கள் ஏற்றுமதியாகி வருகிறது. இது கடந்த 2024ம் ஆண்டு நடந்த ஏற்றுமதியை விட அதிகம் ஆகும்.

தற்போது பிஒய்டி நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் 6 கண்டங்களில் உள்ள 119 நாடுகளுக்கு தனது தயாரிப்பை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் ஒரளவிற்கு விற்பனை இருக்கத்தான் செய்கறிது.கடந்த நவம்பர் மாதம் முழுவதும் இந்நிறுவனம் 425 கார்களை விற்பனை செய்துள்ளது. இது அக்டோர் மாதம் நடந்த 570 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 425 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 25.44 சதவீத விற்பனை சரிவு தான்.
இருந்தாலும் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாத விற்பனையை ஒப்பிட்டால் 367 கார்கள் மட்டுமே அப்பொழுது விற்பனையாகியிருந்தது. இது தற்போது 15.80 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அக்டோபர் மாதம் பண்டிகை காலங்கள் நிறைந்த மாதம் என்பதால் பலர் அந்த மாதத்தில் வாகனம் வாங்கியிருப்பார்கள்.

பிஒய்டி நிறுவனம் 4 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதன்படி ஸீலயன்7, இமேக்ஸ் 7, அட்டோ 3, சீல் ஆகிய கார்களை இந்தியாவில் விற்பனைச செய்து வருகிறது. இந்நிறுவனம் இமேக்ஸ் 7 காருக்கு ரூ2.6 லட்சம் சேமிக்கும் அளவிற்கு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ3 லட்சம் வரை மிதிப்பிலான நீட்டிக்கூடிய வாரண்டி வழங்கப்படுகிறது. இதனால் இதன் விற்பனை அதிகாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்வதேச அளவில் டெஸ்லாவிற்கு நிகராக பிஒய்டி நிறுவனம் வளர்ச்சியடந்து வருகிறது. தற்போது முக்கிய மைல் கல்லை எட்டி பிடிக்கும் இந்நிறுவனம் வளர்ந்து வரும் வேகத்தறி்கு 3 கோடி என்ற மைல் கல்லை இன்னும் விரைவாக எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









