கம்மி விலையில் இவியை களம் இறக்கும் சீன நிறுவனம்! இனி டெஸ்லா எல்லாம் ஓரமா போக வேண்டியது தான்!

உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனத்தை களம் இறக்கியுள்ள நிலையில் அதற்க ஆப்பு வைக்கும் வகையில் புதிய காரை களம் இறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீனாவை தலைமையிடமாக கொண்ட பிஒய்டி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் அட்டோ 3 என்ற காரை சிறப்பாக விற்பனை செய்து வரும் நிலையில் அதை விட குறைந்த விலையில் அட்டோ 2 என்ற காரை இந்தியாவில் களம் இறக்க திட்டமிட்டுளளது. இந்த காரை அந்நிறுவனம் இந்திய சாலைகளில் சோதனை செய்து வருவதை காண முடிகிறது.

BYD Atto 2

இந்த அட்டோ 2 வாகனம் பல்வேறு பெயர்களில் சர்வதேச மார்கெட்களில் விற்பனையாகி வருகிறது. சீனாவில் யூவான் அப் என்ற பெயரிலும், பிரேஸிலில் யூவான் ப்ரோ என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் பிஒய்டி நிறுவனத்தின் இ-பிளாட்ஃபார்ம் 3.0 என்ற தளத்தில் கட்டமைக்கப்பட்ட கார் ஆகும்.

இந்த கார் 4310 மிமீ நீளமும், 1830 மிமீ அகலமும், 1675 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்திய மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் எம்ஜி இசட் எஸ் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BYD Atto 2

இந்த காரின் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கார் முழுவதுமாக மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. இதனால் இந்த காரில் விஷூவலாக என்ன இருக்கிறது என்பதை தெளிவாக செலால் முடியவில்லை. ஆனால் சர்வதேச அளவில் விற்பனையாகும் காரை போல தான் இதுவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் ஒட்டு மொத்த வடிவமைப்பு பாக்ஸி லுக்கில் அட்டோ 3 போன்ற வடிவமைப்பையே பெறும் என தெளிவாக சொல்லிவிட முடியும். அந்த காரை போலவே எல்இடி ஹெட்லைட், கனெக்டெட் எல்இடி டெயில் லைட் மற்றும் பின்பக்கம் ஸ்பாயிலர்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன.

BYD Atto 2

இந்த அட்டோ 2 காரின் உட்புறம் வழக்கமாக பிஒய்டி நிறுவன கார்களின் உள்ள உட்புறம் போல மினிமலான வடிவமைப்பு தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 12.8 இன்ச் சுற்றக்கூடிய இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் இதில் 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் உட்புறம் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக பானரோமிக் சன்ரூஃப், டைப் சி சார்ஜிங் போர்ட்கள், ஆம்பியன்ஸ் லைட்டிங், முன்பக்கம் ஹீட்டட் சீட்டுகள், லெதர் சீட்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் சிங்கிள் மோட்டாரில் முன்பக்க டிரைவ் ஆப்ஷன் உடன் வரும் எதிர்பார்க்கலாம். இதில் 45.1kWh பிளேடு செல் பேட்டரி பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 380 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது. அத போல லாங்க் ரேஞ்ச் வெர்ஷன் சிங்கிள் சார்ஜில் 402 கி.மீ வரை கூட ரேஞ்ச் தரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன்ஙகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் டெஸ்லா நிறுவனமும் களம் இறங்கியுள்ளது. அதற்கு போட்டியாக பிஒய்டி நிறுவனம் குறைந்த விலையில் வாகனத்தை களம் இறக்குவது மார்கெட்டில் பெரிய போட்டியை ஏற்படுத்துவது நிச்சயம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 29, 2025, 16:25 [IST]
English summary
Byd atto 2 cheapest electric suv india launch
மேலும்... #byd #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X