தினமும் 700 பேர் இந்த காரை தேடி தேடி வாங்குறாங்க! அப்படி இந்த கார்ல என்னதாங்க இருக்குது?
பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 கார் 10 லட்சம் கார்கள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவும் மிக குறுகிய காலத்தில் இந்த சாதனையை அந்நிறவனம் படைத்துள்ளது. மக்கள் அதிகமாக இந்த காரை தேர்வு செய்ய என்ன காரணம்? இந்த காரில் அப்படி என்ன இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சீனாவை சேர்ந்த பிஓய்டி நிறுவனம் இந்தியாவில் அட்டோ 3 எனெற பெயரில் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு இந்த கார் சீனாவில் யூவான் பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் அறிமுகமாகி 31 மாதங்களில் 10 லட்சம் என்ற இமாலய இலக்கை கடந்துள்ளது.

இந்த கார் அறிமுகமான முதல் 14 மாதங்களிலேயே 3 லட்சம் என்ற இலக்கை எட்டியது. அடுத்த 6 மாதத்தில் அடுத்த 2 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. அடுத்த 25 மாதத்தில் 5 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இது மட்டுமல்ல இந்த கார் சீனாவில் மட்டும் விற்பனையாகாமல் இந்தியா உள்ளிட்ட 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன்படி கணக்கு பார்த்தால் இந்த கார் விற்பனைக்கு வந்ததில் இருந்து 1391 நாட்களில் இந்த 10 லட்சம் என்ற மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது சரியாக கணக்கு பார்த்தால் தினமும் 719 கார்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளது. ஒவ்வொர நாட்டிலும் எவ்வளவு கார்கள் விற்பனையாகியுள்ளது என்ற தகவலை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

சீனாவில் யூவான் பிளஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டள்ள இந்த கார் இந்திய மதிப்பில் ரூ13.97 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் இந்த கார் கடந்த 2022ம் ஆண்டு நம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த கார் இந்தியாவில் ரூ24.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தற்போது இந்த கார் சீனாவில் இருந்து தான் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே இந்த காரை அந்நிறுவனம் தயாரித்தால் விலை இன்னும் குறைவாக இருக்கும்.
இந்தியாவில் இதன் என்ட்ரிலெவல் வேரியன்டான அட்டோ 3 டைனமிக் வேரியன்ட் ரூ24.99 லட்சம் என்ற விலையிலும், மிட் வேரியன்டான அட்டோ 3 பிரிமியம் வேரியன்ட் ரூ29.85 லட்சம் என்ற விலையிலும், டாப் வேரியன்டான அட்டோ 3 சூப்பிரியர் வேரியன்ட் ரூ33.99 லட்சம் என்ற விலையிலும் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.

இந்த பிஒய்டி அட்டோ 3 காரில் 49.92 kWh மற்றும் 60.48 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பேட்டரிகள் லித்தியம் அயான் பாஸ்பேஸ்ட் ரக பேட்டரிகளாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு முறை சார்ஜ் போட்டால் 468 கி.மீ சிறிய பேட்டரி பேக்கில் பயணிக்கும் எனவும், இதுவே பெரிய பேட்டரி பேக் என்றால் 521 கி.மீ பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி நிறுவனம் இந்த அட்டோ 3 காரை உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது. இந்த காரின் வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் திறன் காரணமாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றதாக இருக்கிறது. இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை அதிகமாக உள்ளது. இந்த கார் இந்தியாவிலேயே உற்பத்தியானால் விலைஇன்னும் குறையும். ஆனால் அந்நிறுவனம் இது குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications









