ஒரு தடவை சார்ஜ் போட்டா சென்னை டூ மதுரை போயிடலாம்! பிஒய்டியின் இந்த கார் விலை  என்ன தெரியுமா

BYD இந்தியா தனது வரிசையில் ஒரு புதிய எலெக்ட்ரிக் சொகுசு SUV காரான, Sealion 7- காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான Seal எலெக்ட்ரிக் செடான் போன்றே, e-Platform 3.0 இல் இந்த வாகனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. Sealion 7 இன் தொடக்க விலை Premium RWD வேரியன்ட்க்கு ரூ. 48.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), மற்றும் Performance AWD வேரியன்ட்க்கு ரூ. 54.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரின் அளவு, செயல்திறன், பவர் டிரெய்ன்கள் மற்றும் அம்சங்களை கருத்தில் கொண்டு Sealion 7 எனது விலை போட்டித்தன்மை வாய்ந்தாக உள்ளது. 82.56 kWh பேட்டரி பேக் கொண்ட Seal செடானின் தொடக்க விலை ரூ. 45.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), அதன் டாப்-ஸ்பெக் Performance வகை, டூயல்-மோட்டார் AWD கொண்ட ரூ. 53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது Sealion 7 காரை பிளாக்ஷிப் காராகவும் அதிகமான விலை கொண்ட காராகவும் மாற்றுகிறது.

BYD Sealion 7

அட்லாண்டிஸ் கிரே, காஸ்மோஸ் பிளாக், ஆரோரா வெள்ளை, மற்றும் ஷார்க் கிரே ஆகிய நான்கு கலர்களில் கிடைக்கும் Sealion 7 கார், Seal செடான் போன்ற நவீன Ocean வடிவமைப்பு மொழியை கொண்டுள்ளது. உட்புறத்தில், அனைத்து வேரியன்ட்களிலும் மென்மையான நப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி போன்ற பிரீமியம் பொருட்கள் இருப்பதால் அனைத்து வேரியன்ட்களிலும் கருப்பு நிற உட்புறம் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சொகுசு SUV வாடிக்கையாளர்களிடையே BYD இன் இந்த கார் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கள் பிரச்சார புக்கிங் சலுகையின் கீழ், 1,000 கார்களுக்கும் மேலாக புக்கிங்குகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் BYD இன் 40 அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் எதிலிருந்தும் Sealion 7 ஐ வாங்கலாம் அல்லது ரிசர்வ் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

BYD Sealion 7

Sealion 7 BYD இன் நம்பகமான Blade பேட்டரி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட Seal செடான், சிறிய பேட்டரி ஆப்ஷனை வழங்கும் அதேசமயம், Sealion 7கார் 82.56 kWh பேட்டரி பேக்கை ஒரே அம்சமாக கொண்டுள்ளது. Premium வேரியன்டில் ஒரு சின்ஹிள்-மோட்டார் RWD செட்டப்பைக் கொண்டுள்ளது, Performance வேரியன்ட் டூயல்-மோட்டார் AWD செட்டப்பைக் கொண்டுள்ளது.

இந்த வகைகளுக்கான ரேஞ்ச் சிறப்பாக உள்ளது: Premium வேரியன்ட்க்கு 567 km வரை, Performance வேரியன்ட்க்கு 542 km வரை ரேஞ்ச் கிடைக்கிறது. ரியல் வேல்டு சோதனையில், ஒரு சார்ஜில், சுமார் 460 km வரை ரேஞ்ச் கிடைக்கும் என தெரிகிறது. இது மிகப்பெரிய சாதனை ஆகும்.

BYD Sealion 7

Premium வேரியன்ட் கார் மணிக்கு 100 km வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் பக்கப் செய்கிறது, Performance வேரியன்ட் இதை இன்னும் விரைவான 4.5 வினாடிகளில் பிக்கப் செய்கிறது. இரண்டு வேரியன்ட்களும் மணிக்கு 215 km எலெக்ட்ரானிஸாக கண்ட்ரோல் செய்யப்பட்ட அதிகபட்ச வேகத்தையும், 23,000 RPM வரை சுழலக்கூடிய மோட்டார்களையும் கொண்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: BYD இன் Sealion 7 இன் அறிமுகம் இந்திய சொகுசு மார்கெட்டில்ல் தங்கள் எலெக்ட்ரிக் வாகன வரிசையை விரிவுபடுத்தும் மற்றொரு படியாகும். போட்டி விலை மற்றும் வலுவான அம்சங்களுடன், இது பிரீமியம் எலெக்ட்ரிக் SUVs ஐத் தேடும் சாத்தியமான வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்க விரும்புகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 17, 2025, 15:28 [IST]
English summary
BYD India has introduced the Sealion 7, a new electric luxury SUV, starting at Rs 48.9 lakh. With impressive features and performance, it aims to attract luxury SUV buyers.
மேலும்... #byd #new launches #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X