கடைசியா எப்போ சார்ஜ் போட்டோம் என்பதையே மறந்துடுவோம்! சீன பொருட்களுக்கு தடை எல்லாம் சீன கார்களுக்கு வராதா?

பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். இந்தியாவின் கார் மார்க்கெட்டில் எப்படியாவது தனக்கான இடத்தை பிடிக்க போராடி வரும் பிஒய்டி, இந்தியாவில் விற்பனை செய்துவரும் எலக்ட்ரிக் கார் ஒன்றை 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அப்டேட் செய்துள்ளது.

தற்போது அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் பிஒய்டி எலக்ட்ரிக் கார், சீல் (Seal) ஆகும். பிஒய்டி நிறுவனத்தின் எலக்ட்ரிக் செடான் ரக காரான சீல் கடந்த 2024ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2025ஆம் ஆண்டை முன்னிட்டு சீல் எலக்ட்ரிக் கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2025 byd seal electric car

2025 பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.41 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டைனாமிக், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் புதிய சீல் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.41 லட்சத்தில் டைனாமிக் வேரியண்ட் கிடைக்கும். அளவில் பெரியதான 61.44kWh பேட்டரி உடன் வழங்கப்படும் டைனாமிக் வேரியண்ட்டில் எலக்ட்ரிக் மோட்டாரின் இயக்க ஆற்றல் ஆனது காரின் பின் சக்கரங்களுக்கு செல்லும்.

பிரீமியம் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.45.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் பெரிய 82.56kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பிரீமியம் வேரியண்ட்டிலும் எலக்ட்ரிக் மோட்டாரின் இயக்க ஆற்றல் ஆனது காரின் பின் சக்கரங்களுக்கு செல்கிறது. விலைமிக்க பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.53.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2025 byd seal electric car

பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டிலும் 82.56kWh திறன் கொண்ட பேட்டரி தான் பொருத்தப்படுகிறது என்றாலும், இந்த டாப் வேரியண்ட்டில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. இதனால், இந்த பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டில் அதிவேகமான பயணத்தை எதிர்பார்க்கலாம்; ஆனால் அதேநேரம் காரின் ரேஞ்ச் குறைவாகவே கிடைக்கும். எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக இயங்கக்கூடிய தொலைவு ரேஞ்ச் (Range) ஆகும்.

2025 சீல் எலக்ட்ரிக் காரின் தோற்றத்தை மட்டும் அப்டேட் செய்யாமல், காரின் செயல்படுதிறனையும் பிஒய்டி நிருவனம் மேம்படுத்தி உள்ளது. புதிய சீல் எலக்ட்ரிக் காரில் முக்கியமான மெக்கானிக்கல் அப்கிரேடாக FSD எனப்படும் ஃப்ரீக்யுயன்சி செலக்டீவ் டேம்பர்ஸ் (Frequency Selective Dampers) வழங்கப்பட்டுள்ளது. இது கரடு முரடான பாதைகளில் காரை கொண்டு சென்றாலும், சவுகரியமான பயணத்தை வழங்குவதுடன், எளிதான கார் ஹேண்ட்லிங்கை வழங்கும்.

இதுமட்டுமின்றி, பிஒய்டி நிறுவனத்தின் டிசஸ்-சி இண்டெலிஜண்ட் டேம்பிங் சிஸ்டம் (Disus-C Intelligent Damping System) புதிய 2025 சீல் காரில் வழங்கப்பட்டுள்ளது. இது, காருக்குள் குலுக்கல்களையும், அதிர்வுகளையும் குறைக்கும். இந்த இரு புதிய தொழிற்நுட்பங்களும் காரின் ஹேண்ட்லிங்கை மேம்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இந்த சீன எலக்ட்ரிக் காரில் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடலாம்.

முற்றிலுமாக மாசு உமிழ்வை ஏற்படுத்தாத பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரில் குறைந்த மின்னழுத்தத்தை கொண்ட லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்படுகிறது. இது வழக்கமான லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரியை காட்டிலும் ஆறு மடங்கு எடை குறைவானது. மேலும், தானாக சார்ஜ் குறையும் விகிதமும் மற்ற பேட்டரிகளை காட்டிலும் ஐந்து மடங்கு குறைவாக உள்ளது.

இத்தகைய எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி சிஸ்டத்தின் ஆயுட்காலம் அதிகப்பட்சமாக 15 வருடங்கள் வரையில் இருக்கும் என பிஒய்டி தெரிவித்துள்ளது. புதிய சீல் காருக்கு உள்ளே சில்வர் நிறத்திலான தகடு பொருத்தப்பட்ட டிம்மிங் கனாபி (Dimming Canopy) புதியதாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏசி சிஸ்டத்திலும் பெரிய கம்பிரெசர் மற்றும் புதிய காற்று சுத்திகரிப்பான் சேர்க்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமாக உலகளவில் பிரபலமான பிஒய்டி நிறுவனத்திற்கு இந்தியாவில் கார்களை விற்பனை செய்ய யாரும் சொல்லி தர தேவையில்லை. சுமார் 650கிமீ தொலைவு வரையில் ஒருமுறை 100% சார்ஜ் நிரப்பினால் இயங்கக்கூடிய சீல் எலக்ட்ரிக் காரின் 2025ஆம் ஆண்டிற்கான வெர்சனில் மிகவும் தேவையான தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 21:33 [IST]
English summary
Byd launches 2025 seal electric car in india price features all details here
மேலும்... #byd #electric car #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+