டெஸ்லாவிற்கு வில்லன் இவங்க தான்! 1.3 கோடி பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!
உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக பார்க்கப்படும் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி 1.3 கோடி கார்களை ஒரு நிறுவனம் மிக குறுகிய காலத்தில் தயாரித்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படியான சாதனையை ஒரு சீன நிறுவனம் செய்துள்ளது. இது குறித்த விரிவா ன விபரங்களை காணலாம் வாருங்கள்.
சீனாவை சேர்ந்த நிறுவனம் பில் யூவர் டிரீம்ஸ் (பிஒய்டி) இந்நிறுவனம் சீனாவை தலைமயிடமாக கொண்டு உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையல் இந்நிறுவனம் சமீபத்தில் மகத்தான சாதனை ஒன்றை செய்துள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில் தனது 1.3 கோடி கார்களை தயாரித்து நுதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை அந்நிறுவனம் யங்வாங் யூ7 மாடல் வாகனத்தை தயாரித்து இந்த சாதனையை செய்துள்ளது. இந்த கார் அந்நிறுவனம் சென்ஷைன்-ஷான்வாய் மண்டலத்தில் நடத்தி வரும் ஆலையில் தான் இந்நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளது.
உலகிலேயே 1.3 கோடி எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை தயாரித்த முதல் நிறுவனம் இதுதான். டெஸ்லா நிறுவனம் உலகில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பெரிய நிறுவனம் என பேசப்பட்டாலும் டெஸ்லாவால் இந்த சாதனையை பெற முடியவில்லை. டெஸ்லா நிறுவனம் கடந்த 6 மாதத்தில் 21.3 லட்சம் கார்களை சீனாவில் தயாரித்துள்ளது. இது கடந்தாண்டை விட 31.5 சதவீதம் அதிகம் தான். இது போக 4.72 லட்சம் வாகனங்களை வெளிநாட்டில் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை 128.5 சதவீதம் அதிகமாகியுள்ளது.

பிஒய்டி நிறுவனத்தின் பிரிமியம் சப் பிராண்டான யங்வாங் நிறுவம் யூ7 என்ற காரை தயாரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளுது. இந்த கார் லுக்கில் மட்டுமல்ல தொழிற்நுட்பம் மற்றும் ஃபெர்பார்மென்ஸ் ஆகிய விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிஒய்டி நிறுவனம் பட்ஜெட் கார்கள் மட்டுமல்லாமல் பிரிமியம் மற்றும் சொகுசு செக்மெண்டில் கூட வாகனங்களை தயாரித்து வருகிறது.
பிஒய்டி நிறுவனம் சிறப்பாக விற்பனை செய்து வரும் காராக அட்டோ 3 கார் தான் இருக்கிறது. இந்த காரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாங்கிவிட்டனர். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி தான் அறிமுகப்படுத்தியது. வெறும் 31 மாதத்திலேய 10 லட்சம் பேர் இந்த வானகத்தை வாங்கியது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த கார் முதல் 14 மாதத்தில் 3 லட்சம் கார்களும், அடுத்த 6 மாதத்தில் 2 லட்சம் கார்கள் என்ற இலக்கையும், பெற்றுள்ளது. இந்த கார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெறும் 1391 நாளில் 719 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்த சாதனையை அந்நிறுவனம் படைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் என பேசப்பட்டு வரும் நிலையில் சைலெண்டாக பிஒய்டி நிறுவனம் மிகப்பெரிய சாதனையை மிக குறுகிய காலத்தில் படைத்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









