10,000 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! இவ்வளவு கம்மி டைம்ல இப்படி ஒரு சாதனையா?

சீனாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து புதிய சாதனை மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது. இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீனாவை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனம் பில்டு யூவர் டிரீம்ஸ், பிஒய்டி என அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் ஸீலயன் 7, அட்டோ 3, இமேக்ஸ் 7 மற்றம் சீல் ஆகிய கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர்.

BYD Milestone

இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 44 டீலர்ஷிப்கள் மூலம் இந்நிறுவனம் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பிரிமியம் இவி கார்களை விற்பவனை செய்யும் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் தற்போது 10,000 கார்களை விற்பனை செய்து முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் நம்ப தன்மை வருவது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்நிறுவனம் உலகளவில் 13 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தது மூலம் உலகம் முழுடவதும் 106 பில்லியன் எடை அளவுள்ள கார்மபன் உமிழ்வை மிச்சம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது சுமார் 1.77 பில்லியன் மரங்கள் வாழ்நாளில் உரிஞ்சும் கார்பன் அளவிற்கு ஈடானது எனவும் தெரிவித்துள்ளது.

BYD Milestone

இந்நிறுவனம் உலகின் டாப் 10 எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் 14.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெரிய நிறுவனமாக மாறியள்ளது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் தனது தயாரிப்பில் கவனம் செலுத்துவது தான். இந்நிறுவனம் உலகம் முழுவதும் மிக முக்கியமான நிறுவனமாக மாறி வருகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன பிரிவு தலைவர் ராஜீவ் சவ்ஹான் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது " இந்தியாவில் 10,000 கார்களை விற்பனை செய்து 10,000 வாடிக்கையாளர்களை கவர்ந்தது மிக முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது . இது வாடிக்கையாளர்கள் மத்தியில் எங்கள் நிறுவனம் பெறும் நம்பிக்கையை காட்டுகிறது. எங்கள் நிறவனத்தின் இலக்கு கிளீன், கரீன் மொபிலிட்டி தான்.

BYD Milestone

நாங்கள் சாலைகளில் ஏற்படும் மாசுவைகட்டுப்படுத்துகிறோம். அதே நேரம் நவீன இவி தொழிற்நுட்பத்தையும் எங்கள் தயாரிப்புகளில் பொருத்துகிறோம். இதனால் நடித்து உழைக்கும் ஒரு மொபிலிட்டி சிஸ்டத்தை உருவாக்குகிறோம். இந்த வளர்ச்சிக்கு எங்கள் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களையும் வாங்க வைத்தது முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்பு மீது எவ்வளவு திருப்தியடைந்துள்ளார்கள் என்பதை இது காட்டுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனம் மிக முக்கியமான மைல் கல்லை எப்படியள்ளத. இந்நிறுவனம் தற்போது வளர்ச்சியை சந்தித்து வருவதற்க முக்கியமான காரணம் தயாரிப்பின் தரம் தான். பிஒய்டி கார்கள் மக்களை அதிகம் ஈர்க்கிறது. சீன தயாரிப்பாக இருந்தாலும் இந்த கார்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2025, 18:30 [IST]
English summary
Byd milestone 10000 ev deliveries in india
மேலும்... #byd #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X