சீன பொருட்களுக்கு தடைனு சொல்றது எல்லாம் சும்மாவா! ஷோரூமுக்கு மேல ஷோரூம் வந்துகிட்டே இருக்கு!
பில்டு யுவர் ட்ரீம்ஸ் (Build Your Dreams), சுருக்கமாக பிஒய்டி (BYD) என அழைக்கப்படும் சீன எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். பொதுவாகவே, சீன கார் நிறுவனங்கள் இந்தியாவில் பெரியதாக சோபிப்பதில்லை. இத்தனைக்கும் ஹூண்டாய், கியா, டொயோட்டா போன்ற கொரியன், ஜப்பானிய கார் நிறுவனங்கள் கூட இந்தியாவில் நல்லாவே வளர்ச்சியை கண்டுள்ளன. ஆனால், அவ்வளவு பெரிய சீனாவில் இருந்து பெரியதாக எந்தவொரு கார் நிறுவனமும் இந்தியாவில் வெற்றி பெற்றது இல்லை என்பது சற்று ஆச்சிரியமாகவே உள்ளது.
ஆனால் இந்த நிலை இன்னும் சில காலத்திற்கு மட்டுமே. ஏனெனில், சீனாவின் முன்னணி எலக்ட்ரிக் நிறுவனங்களுள் ஒன்றான பிஒய்டி இந்தியாவில் தனது ஆதிக்கத்தை மேலும் மேலும் வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms)-இன் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்தியாவை காட்டிலும் சீனாவில் கார் மார்க்கெட் பலத்த போட்டி மிகுந்தது ஆகும். இதனாலேயே, மெர்சிடிஸ்-பென்ஸ், டெஸ்லா போன்ற மிகவும் சில கார் நிறுவனங்களால் மட்டுமே அங்கு ஆதிக்கத்தை செலுத்த முடிந்துள்ளது. அத்தகைய கலவரமான பூமியில் இருந்து இந்தியா வந்துள்ள பிஒய்டி நிறுவனம், இந்தியாவில் கால் பதிக்க ஆரம்பத்தில் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் இல்லாமல் இல்லை.
2021ஆம் ஆண்டிலேயே இந்திய கார் மார்க்கெட்டில் நுழைந்துவிட்டாலும், பிஒய்டி நிறுவனத்தின் வெற்றி பயணம் 2022ஆம் ஆண்டில்தான் துவங்கியது. சீனாவில் வெற்றிநடை போட்ட எலக்ட்ரிக் காரை கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து இந்தியாவில் அட்டோ 3 (Atto 3) என்கிற பெயரில் பிஒய்டி அறிமுகம் செய்தது. தற்சமயம் இ6, அட்டோ 3 மற்றும் சீல் இவி என 3 விதமான எலக்ட்ரிக் கார்களை பிஒய்டி இந்தியாவில் விற்பனை செய்கிறது.

இந்த எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு பிஒய்டி நிறுவனத்திடம் தற்சமயம் 27 டீலர்ஷிப் ஷோரூம்கள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கையை இந்த 2025 ஜனவரி மாதம் முடிவதற்குள் 40 ஆக அதிகரிக்க பிஒய்டி திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த மாதம் முடிவதற்குள் மேலும் 13 டீலர்ஷிப் ஷோரூம்களை புதியதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிஒய்டி திறக்க உள்ளது.
இந்தியாவில் தனது 4வது எலக்ட்ரிக் காராக சீ லயன் 7 (SeaLion 7)-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக சமீபத்தில்தான் பிஒய்டி நிறுவனம் அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது, புதிய டீலர்ஷிப் ஷோரூம்களை திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. சீ லயன் என்பதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்தால், கடல் சிங்கம் ஆகும்.

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிஒய்டி சீல் இவி எலக்ட்ரிக் காரின் அடிப்படையிலானது புதிய சீ லயன் 7 எலக்ட்ரிக் கார் ஆகும். அதாவது, சீல் இவி ஆனது எலக்ட்ரிக் செடான் ரக கார் ஆகும். அதுவே, சீ லயன் 7 ஆனது எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். சீ லயன் 7 எலக்ட்ரிக் காரை வருகிற 2025 பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் பிஒய்டி நிறுவனம் வெளியீடு செய்ய உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல மார்க்கெட் விரிவடைந்து வருகிறது. இதனை எம்ஜி மோட்டாரை போன்று நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வெளிநாட்டு கார் நிறுவனம், பிஒய்டி ஆகும். கடந்த 3 வருடங்களாக அமைத்துவந்த டீலர்ஷிப் ஷோரூம்களில் பாதி எண்ணிக்கையை பிஒய்டி நிறுவனம் இன்னும் 1 மாதத்திற்குள் நிறுவ உள்ளது, இந்தியாவில் இந்த சீன நிறுவனத்துக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









