இந்திய சாலையில் வலம் வந்த விற்பனைக்கே வராத கார்.. இது பெட்ரோல்-மின்சாரம் ரெண்டிலும் ஓடும்..

இன்னும் விற்பனைக்கே வராத கார் மாடல் ஒன்று இந்திய சாலையில் வலம் வந்த நிகழ்வு கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. உலக புகழ்பெற்ற சீன கார் உற்பத்தி நிறுவனம் பிஒய்டி (BYD). இதன் தயாரிப்பே அந்த கார் மாடல் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் பலதரப்பட்ட கார் மாடல்களை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இப்போது கேமிராவில் சிக்கி இருக்கும் அந்த குறிப்பிட்ட கார் மாடல் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக நம்பப்படும் சீ-லையன் 6 (Sealion 6) கார் மாடலே தற்போது சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஏற்கனவே இந்த காரின் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் சீ-லையன் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Byd sealion 6 car spotted in india

இந்த நிலையிலேயே தற்போது சோதனையோட்ட பணிகளை அது தொடங்கி இருக்கின்றது. நிறுவனம் இப்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மற்ற தயாரிப்புகளில் இருந்து பல நிலைகளில் மாறுபட்டதே இந்த சீ-லையன் ஆகும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இப்போதைய நிலவரப்படி பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனகை்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆனால், இந்த சீ-லையன் என்பது பிளக்-இன் வசதிக் கொண்ட ஹைபிரிட் கார் மாடல் ஆகும். அதாவது, இது பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 92 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இதுமட்டுமல்ல பெட்ரோலிலும் இந்த காரை இயக்கிக் கொள்ள முடியும்.

Byd sealion 6 car rear

அந்தவகையில் முழுமையாக பெட்ரோலை நிரப்பி, அத்துடன், முழுமையாக சார்ஜ்-ம் செய்து பயன்படுத்தினால் இந்த காரில் சுமார் 1,000 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த தகவல் அதிகம் மைலேஜை விரும்புபவர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது.

இந்த காரையே அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் சீன நிறுவனம் பிஒய்டி களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே இந்த நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மின்சார கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் இந்திய பணக்காரர்களின் மனம் கவர்ந்த பிராண்டாக பிஒய்டி மாறியிருக்கின்றது.

Byd sealion 6 car side view

Source: 91wheels இந்த நிலையிலேயே சீ-லையன் வாயிலாகவும் அது இந்திய செல்வந்தர்களை தன் பக்கம் வளைத்துப் போட உள்ளது. இந்த காரின் அறிமுகம் எப்போது அரங்கேறும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவிலேயே இதன் அதிகாரப்பூர்வ அறிமுக நாள் பற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் செல்ஃப் சார்ஜிங் ஹைபிரிட் கார்களில் இருந்து மாறுபட்டதே இந்த பிளக்-இன் ஹைபிரிட் கார் மாடல் ஆகும். வழக்கமான மின்சார கார்களை சார்ஜ் செய்வதைப் போலவே இதையும் நாம் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கின்றது. அவ்வாறு சார்ஜ் செய்யும்பட்சத்திலேயே 92 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக பிரத்யேக 18.3 kWh திறன் கொணட் பேட்டரி பேக் இந்த சீ-லையன் காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2025, 19:41 [IST]
English summary
Byd sealion 6 plug in hybrid spotted testing in india specs and launch insights
மேலும்... #byd #electric car #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X