இந்தியா வருகிறது சீன தேசத்து கடல் சிங்கம்! நடுக்கத்தில் போட்டி நிறுவனங்கள்! காலண்டர்ல தேதியை குறிச்சு வையுங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று பிஒய்டி சீலயன் 7 (BYD Sealion 7). இது சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். ஜனவரி மாதம் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போவில், பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கப்பட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 70 ஆயிரம் ரூபாயை செலுத்தி பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த காரின் அறிமுக தேதியும் ஏற்கனவே வெளியாகி விட்டது. இதன்படி பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் கார் வரும் பிப்ரவரி 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

BYD Sealion 7 Side Design

இந்த சூழலில் பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி இந்த எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் மார்ச் 7ம் தேதி தொடங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக இந்த எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்யும் 70 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

அதன் பிறகு படிப்படியாக டெலிவரி பணிகள் வேகம் எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் காரில் 82.56 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் சிங்கிள் மற்றும் ட்யூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக 567 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என பிஒய்டி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BYD Sealion 7

பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். அவை பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஆகியவை ஆகும். இதில் பிரீமியம் வேரியண்ட், ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகும். இதன் டிரைவிங் ரேஞ்ச்தான் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள 567 கிலோ மீட்டர்கள்.

மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் காரின் பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகும். இதன் டிரைவிங் ரேஞ்ச் சற்று குறைவு. அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 542 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி 2 வேரியண்ட்களிலுமே 82.56 kWh பேட்டரி தொகுப்புதான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில் அதிநவீன வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை. 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 12 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் அடாஸ் போன்றவை எல்லாம் இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 45 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) மற்றும் கியா இவி6 (Kia EV6) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் இது போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 18:46 [IST]
English summary
Byd sealion 7 electric car delivery details expected price features and more
மேலும்... #byd #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+