வெறும் ரூ70,000 இருந்தா இந்த காரை புக் பண்ணலாம்! கடல் சிங்கம் பெயருல வரும் காருல என்னலாம் இருக்குது?

இந்தியாவில் நடந்துவரும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025ல், BYD தனது புதிய எலெக்ட்ரிக் கூப்-SUV, சீலயன் 7 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சீல் செடானை விட மேம்பட்டதாக உள்ள இந்த புதிய மாடல், ரூ. 70,000 முன்பதிவு தொகையுடன் முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், மார்ச் 2025 க்குள் ரூ. 45 லட்சம் முதல் ரூ. 55 லட்சம் வரை விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் ஐயானிக் 5, கியா EV6 மற்றும் வால்வோ EX40 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீலயன் 7 இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: RWD மற்றும் AWD. இரண்டுமே 82.56 kWh பேட்டரி பேக்கால் இயக்கப்படுகின்றன. இருப்பினும் சர்வதேச எடிசனில் 91.3 kWh பெரிய பேட்டரியை வழங்குகிறது. RWD வேரியன்ட் 308 hp பவர் மற்றும் 380 Nm டார்க் திறனை வழங்குகிறது, அதே நேரத்தில் AWD வேரியன்ட் 523 hp பவர் மற்றும் 690 Nm டார்க் திறனை வழங்குகிறது. RWD மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 567 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. அதேசமயம் AWD வேரியன்ட் 542 கிமீ வரை ரேஞ்ச் தருகிறது.

BYD Sealion 7

சீலயன் 7 காரின் நீளம் 4,830 மிமீ, அகலம் 1,925 மிமீ மற்றும் உயரம் 1,620 மிமீ அளவுகளை கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2,930 மிமீ அளவில் உள்ளது. இது 520 லிட்டர் பூட் இடத்தைக் கொண்டுள்ளது. இதனால் அதிகமான பொருட்களை எடுத்து செல்ல முடியும். இது 1,789 லிட்டர் வரை பெரியதாக்கிக்கொள்ள முடியும். கூடுதலாக, 58 லிட்டர் frunk இட வசதியும் உள்ளது. இதிலும் பொருட்களை எடுத்து செல்ல முடியும்.

வாகனத்தின் உள்ளே டூயல் டோன் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது, இதில் 10 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 15.6 இன்ச் சுழலும் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்ட டேஷ்போர்டு உள்ளது. மற்ற அம்சங்களில் முன் பக்க சீட்களில் ஹீட்டிங் மற்றும் வென்டிலேட்டட் ஆப்ஷன்கள் கொண்ட லெதரெட் சீட்டுகள், டூயல்-ஸோன் ஆட்டோமெட்டிக் ஏசி, அட்ஜெஸ்ட் செய்க்கூடிய லம்பர் சப்போர்ட் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன.

BYD Sealion 7

சீல்யான் 7 காரில் 9 ஏர்பேக்குகளுடன் TPMS, ISOFIX குழந்தை சீட் மவுண்ட், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல செயல்பாடுகளைக் கொண்ட விரிவான ADAS அமைப்பு போன்ற அம்சங்கள் இருப்பதால் இது பாதுகாப்பு முக்கியமானதாக உள்ளது. பாதுகாப்பு தொழிற்நுட்பங்களின் முழு தொகுப்பு டிரைவர்களுக்கு நிம்மதியை அளிக்கிறது.

வெளிப்புறமாக, இது ஸ்லீக் ஹெட்லைட்டுகள் மற்றும் ஏரோடைனமிக் பம்பர்கள் போன்ற வடிவமைப்பு கூறுகளில் அதன் சிஸ்டர் காரான சீல் செடானை ஒத்திருக்கிறது. இது கூப்-SUV ஸ்டைலிங்கால் குறிக்கப்பட்ட ஸ்லோப்பான ரூஃப் லைன்கள் மற்றும் தனித்துவமான அலாய் வீல்களையும் கொண்டுள்ளது. சீல்-EV மாடல்களில் உள்ளவற்றைப் போன்ற கனெக்டெட் LED டெயில் லைட்கள் அதன் லுக்கை மேலும் மேம்படுத்துகின்றன.

BYD Sealion 7

இரண்டு எடிசன்களும் 230 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இது வெறும் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை 24 நிமிடங்களுக்குள் வேகவமாக சார்ஜ் ஏறுகிறது. இது டிரைவர்களால் அடிக்கடி பயணிக்கப்படும் வழிகளில் நீண்ட பயணங்களை இன்று உலகளாவிய அளவில் கூறப்படுவதை விட எளிதாக்குகிறது!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: BYD சீலயன்7, இந்தியாவில் BYD இன் எலெக்ட்ரிக் வாகன அணிவகுப்பை வரிவாக்குகிறது. இது சில முக்கிய அம்சங்களை இணைத்து, சக்திவாய்ந்த செயல்திறன், தனித்துவமான வடிவமைப்புகளுடன் வளர்ந்து வரும் மார்கெட் தேவைகளை பூர்த்தி செய்கிறது. குறிப்பாக ஸ்டெபிளிட்டி டிரைவிங்கை தேடும் SUV ஆர்வலர்களை இலக்காகக் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறமையான தீர்வுகளை வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 13:34 [IST]
English summary
The BYD Sealion 7, an electric Coupe-SUV, has been launched at the Bharat Mobility Expo 2025 in India. This model offers powerful performance, innovative design, and advanced safety features, catering to the growing demand for sustainable electric vehicles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X