சீன கார் எல்லாம் இந்தியாவுக்கு வராதுனு யாருங்க சொன்னது? சரியான விலையில் விற்பனைக்கு வந்தாச்சு

பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். சீன கார் கம்பெனி பெரும்பாலும் வெளிநாடுகளில் கால் பதிப்பது கிடையாது. ஏனெனில், உலகின் மிக பெரும் கார் சந்தையான சீனாவில் மற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்கே அவற்றிற்கு நேரம் சரியாக இருக்கும். ஆனால், பிஒய்டி நிறுவனம் ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது. இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார், சீ லயன் 7 (SeaLion 7) ஆகும்.

இந்தியாவில் விற்பனையில் இந்த பிஒய்டி எலக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்கும் விதமாக ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5), கியா இவி6 (Kia EV6), வால்வோ இ.எக்ஸ்40 (Volvo EX40), பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்1 (BMW iX1) உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. இந்த எலக்ட்ரிக் கார்களுக்கு இடையே விலைகளில் உள்ள வித்தியாசங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

byd sealion 7 price comparison

புதிய பிஒய்டி சீலயன் 7 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.48.90 லட்சத்தில் இருந்து ரூ.54.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட மற்ற எலக்ட்ரிக் கார்களில் ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆனது விலை குறைவானதாக உள்ளது. புதிய சீ லயன் 7 எலக்ட்ரிக் காரின் விலை குறைவான வேரியண்ட் கூட ஐயோனிக் 5 காரை காட்டிலும் ரூ.3 லட்சம் அளவில் விலை அதிகமானதாக உள்ளது.

அதுவே, சீ லயன் 7 எலக்ட்ரிக் காரின் விலைமிக்க பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் விலை சுமார் ரூ.9 லட்சம் அளவில் அதிகமாக உள்ளது. இதை வைத்து, பிஒய்டி சீ லயன் 7 எலக்ட்ரிக் கார் தான் இருப்பதிலேயே விலை அதிகமானது என நினைத்துவிட வேண்டாம்.

byd sealion 7 price comparison

ஏனெனில், மேலே குறிப்பிடப்பட்ட எலக்ட்ரிக் கார்களிலேயே விலைமிக்கதாக கியா இவி6 விளங்குகிறது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.60.97 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இந்த விலை ஆனது சீ லயன் 7 காரின் விலைமிக்க பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டை காட்டிலும் சுமார் ரூ.6 லட்சம் அதிகம் ஆகும்.

கியா இவி6 எலக்ட்ரிக் காரின் ஆல்-வீல்-டிரைவ் வெர்சனின் விலை ஆனது பிஒய்டி சீ லயன் 7 எலக்ட்ரிக் காரின் ஆல்-வீல்-டிரைவ் வெர்சனின் விலையை விட சுமார் ரூ.11 லட்சம் அதிகமாகும். அதேபோல், வால்வோ இ.எக்ஸ்40 எலக்ட்ரிக் காரின் ரியர்-வீல்-டிரைவ் வெர்சனின் விலை ஆனது சீ லயன் 7 எலக்ட்ரிக் காரின் ரியர்-வீல்-டிரைவ் வெர்சனின் விலையை காட்டிலும் ரூ.7 லட்சம் அதிகமாகும்.

byd sealion 7 price comparison

அதேபோல், இந்த வால்வோ மற்றும் பிஒய்டி எலக்ட்ரிக் கார்களின் ஆல்-வீல்-டிரைவ் வெர்சன்களின் விலைகளுக்கு இடையே ரூ.3 லட்சம் வித்தியாசம் உள்ளது. சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்1 லாங்-வீல்பேஸ் காரின் விலை ஆனது சீ லயன் 7 எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையை காட்டிலும் வெறும் ரூ.10,000 அதிகமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். பிஒய்டி நிறுவனம் அதன் புதிய சீ லயன் 7 எலக்ட்ரிக் காரை மிகவும் அதிகப்படியான விலையிலும் இல்லாமல், அதேநேரம் மிகவும் குறைவான விலையிலும் இல்லாமல் நடுத்தர அளவிலான விலைகள் உடன் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 8:00 [IST]
English summary
Byd sealion 7 price comparison with other electric cars rivals
மேலும்... #car comparison #byd #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X