கடல் சிங்கத்தை இந்தியாவில் களமிறக்கும் சீன நிறுவனம்.. இத நேருல பாக்கணும்ன்ற ஆச இப்பவே வந்திருச்சு!
இந்தியாவில் சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD), அதன் ஐந்தாவது கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் தீவிராகக் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சீ-லையன் 7 (Sealion 7) எனும் கார் மாடலையே பிஒய்டி இந்தியாவில் அதன் ஐந்தாவது கார் மாடலாக விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. தமிழில் இந்த பெயருக்கு கடல் சிங்கம் என்று அர்த்தமாகும். இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) நடைபெற இருக்கின்றது.
இது ஓர் உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி இதுவாகும். இங்கு முன்னணி நிறுவனங்கள் பல கலந்துக் கொண்டு தங்களின் புதிய மற்றும் வரவிருக்கும் கார் மாடல்களை காட்சிப்படுத்த இருக்கின்றன. அந்தவகையில் பிஒய்டி நிறுவனமும் தன்னுடைய இந்தியாவிற்கான ஐந்தாவது கார் மாடலாந சீ-லையனையும் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த காரின் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக இது அமையும். சீ-லையன் ஓர் கூபே வகை எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலும் இப்போது விற்பனையில் இருக்கும் நிறுவனத்தின் மற்ற கார் மாடல்களைப் போலவே அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
அந்தவகையில், மிகவும் அட்வான்ஸ்டு சிறப்பம்சமான லெவல் 2 அடாஸ்-கூட இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, பன்முக ஜோன்களைக் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஒன்பது ஏர்பேக்குகள், பனோரமிக் சன்ரூஃப், லெதர்போர்த்தப்பட்ட சொகுசு இருக்கைகள் மற்றும் செல்போனை மிர்ரரிங் செய்யும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த காரையே விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கும் வாகன கண்காட்சியில் வைத்து சீன நிறுவனம் காட்சிப்படுத்த இருக்கின்றது. இதன் வருகை விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கே ஆட்டம் கொடுக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல, இந்த காரில் பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமான மற்றும் பயணத்தை பன்மடங்கு எளிமையானதாக மாற்றக் கூடிய அம்சங்களை அதிகளவில் எதிர்பார்க்கலாம்.
அந்தவகையில், இரண்டாவது வரிசையை மடித்துக் கொள்ளும் வசதி கூடுதல் லக்கேஜ்களை ஏற்றிக் கொள்ளும் விதமாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், ரேஞ்ச் தருவதிலும் இந்த கார் அசத்தலானதாக இருக்கும். உலக சந்தையில் இந்த கார் பன்முக பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்று.
இந்தியாவில் 82.5kWh மற்றும் 91.3kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஓர் முழு சார்ஜில் 630 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சையே இந்த கார் வழங்கும். விரைவில் இந்த கார் பற்றிய இன்னும் பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இப்போதே இது மின்சார கார் ஆர்வலர்களின் கவனத்தைக் கவர தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே இந்த காருக்கு, போட்டி கார் மாடல்களுக்கு சவால் விடும் விதமாக ரூ. 45 லட்சம் அல்லது இதற்கும் குறைவான ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிஒய்டி சீலையன் கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதற்கும் இந்திய பணக்காரர்கள் நல்ல வரவேற்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








