புகாட்டி சாதனையை முறியடித்த சீன தயாரிப்பு! வீடியோவை பார்த்த மெய்சிலிர்த்து போயிடுவீங்க!

இந்தியாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் யூ9 எக்ஸ்ட்ரீம் என்ற ஹைப்பர் எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. இந்த கார் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் காராக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் யூ9 எக்ஸ்ட்ரீம் என்ற ஹைப்பர் எலெக்ரிக் காரை தயாரித்து இது. வரலாற்று சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த வாகனம் மணிக்கு 496.22 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. இந்த வாகனம் இதற்கு முன்னர் உலகின் வேகமான கார் என பெயர் எடுத்த புகாட்சி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் என்ற காரின் சாதனையை முறியடித்துள்ளது.

Byd U9 Extreme World Fastest Car

புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் 2019ம் ஆண்டு 490கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தது.இது தான் உலகிலேயே அதிவேகத்தில் பயணிக்கும் காராக இருந்தது. இந்த சாதனையை தற்போது பிஒய்டி யூ9 மாடல் கார் முறியடித்துள்ளது.

இந்த சாதனை குறித்த வீடியோவை அந்நிறுவனம் வெளியட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்க் பாஸ்யெங் என்பவர் இந்த காரை அதிக வேகத்தில ஓட்டி சோதனை செய்தார். இதற்காக டயர்களை வார்ம்அப் செய்கிறார். பின்னர் இவர் டிராக்கில் அதிக வேகத்தில பயணிக்கிறார். இந்த சோதனை முழுவதும் கேமரா குழுவால் படமாக்கப்பட்டது.

Byd U9 Extreme World Fastest Car

இதன் மூலம் இந்த வாகனம் மணிக்கு 496 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த வாகனம் செயல்பட்டது பதிவாகியுள்ளது. இதன் மூலம் உலக சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் யூ9 எக்ஸ் காரை லிமிட்டட் எடிசனாக அதிகாரப்பூர்வமில்லாத வகையில் உருவாக்கியுள்ளது. உலகிலேயே 30 கார்களை மட்டுமே அந்நிறுவனம்உருவாக்குகிறது.

பிஒய்டி நிறுவனம் உருவாக்கி இந்த கார் மொத்தம் 3027 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் 4 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்களில் அல்ட்ரா தின் சூப்பர் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 0.1 மிமீ அளவில் உள்ளது. இந்த பொருளை பயன்படுத்தி மோட்டாரை தயாரிப்பது இது தான் முதல் முறை.

Byd U9 Extreme World Fastest Car

இதன் ஸ்டாண்டர்ட் எடிசன் காரில் 1287 எச்பி பவரை வெளிப்படுத்தும், மேலும் இதில் ஒவ்வொரு மோட்டாரும், 30,000 ஆர்பிஎம் வரை செயல்படும். இது 757 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் இந்த காரில் உலகிலேயே முதன் முறையாக 1200 வோல்ட் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இவி காரில் 800 வோல்ட் சிஸ்டம் தான் உள்ளது. இதை விட இது 170 சதவீதம் அதிக பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

அதே நேரம் 800 வோல்ட் இவி சிஸ்டம் வெளிப்படுத்தும் வெப்பத்தை விட 67 சதவீதம் குறைவான வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த காரில் 80kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜராக 500kW சார்ஜரை வழங்கியுள்ளது. இதன் மூலம் பேட்டரி சில நிமிடங்களிலேயே சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீன நிறுவனம் பிஒய்டி காரை இப்படியாக உலகின் அதிகவேகமான காராக உருவாக்கியுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த வாகனம் குறித்த வீடியோ நம்ம மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2025, 16:20 [IST]
English summary
Byd u9 extreme world fastest car beats bugatti chiron
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X