பெரிய மரமே கார் மேல விழுந்தும் ஒரு சின்ன கீறல் கூட இல்ல! அப்படி என்ன காருப்பா இது?

இன்று வாகனம் வாங்கும் பலர் அந்த கார் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய நினைக்கிறார்கள். இதனால் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கிராஷ் டெஸ்ட் சோதனைகளை செய்து அதன் ஸ்டார் ரேட்டிங்கை விளம்பரம் செய்து வருகின்றனர்.

என்னதான் கிராஷ் டெஸ்ட் சோதனையில் நல்ல பெயர் வாங்கினாலும் அதையும் தாண்டி வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை பெற சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களுக்குள்ளேய்ே சில சோதனைகளை செய்து அதில் எவ்வளவு ஸ்டிராங்காக இந்த வாகனம் இருக்கிறது என்பதை டெஸ்ட் செய்வார்கள். இப்படியான சோதனைக்கு வால்வோ நிறுவனம்தான் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது.

BYD YangWang U8L

இந்நிலையில் பிஒய்டிநிறுவனம் தற்போது தனது புதிய காருக்க இப்படியான ஒரு சோதனையை செய்துள்ளது. இதன்படி பிஒய்டி நிறுவனம் தனது YangWang U8L என்ற காருக்க இந்த சோதனையை செய்து அதன் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த YangWang U8L காரில் மீது ஒரு பாம் மரத்தை வெட்டி விழ வைத்து இதில் இந்த கார் சேதமாகிறதா என சோதனை செய்தனர். அதுவும் ஒரு முறை அல்ல 3 முறை இந்த சோதனைகளை செய்தனர். ஆனால் இப்படி சோதனை செய்தும் எந்த விதமான சோதாரமும் ஏற்படவில்லை.

சமூகவலைத்தளங்களில் YangWang U8L கார் பல்வேறு வித்தியாமான பயன்பாடுகளில் ஈடுபடுவதை காணமுடியும். இப்படியாக இந்த கார் இருந்த இடத்தில் இருந்தே 360 டிகிரி சுற்றும், இதற்கு அந்த காரில் பொருத்தப்பட்ட குவாட் மோட்டார் செட்டப் முக்கியமான காரணம். இது மட்டுமல்ல இந்த கார் கிராப் வாக்கிங் செய்யும் தண்ணிரில் மிதக்கும். மேலும் இந்த காருடன் ட்ரோன் சிஸ்டத்தை இணைக்கும் விஷயத்தையும் வழங்கியுள்ளது.

BYD YangWang U8L

இந்நிலையில்இந்த கார் தற்போது பாம் மர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி 3 விதமாக மரம் ஒரு காரின் மீது விழ வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் சேதம் குறித்து சோதனை செய்து பார்க்க முடிவு செய்யப்பட்டது. இப்படியாக முதல் சோதனையில் இந்த YangWang U8L காரிலிருந்து சுமார் 300 செ.மீ அதாவது 10 அடி உயரத்திலிருந்து மரம் கார் மீது போடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

2வது சோதனையில் சுமார் 400 செ.மீ உயரத்திலிருந்து அதே மரம் போட்ப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 3வது சோதனையில் சுமார் 500 செ.மீ உயரத்திலிருந்து மரம் போட்ப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த 3 சோதனையில் காரில் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. சொல்லப்போனதால் கடைசி சோதனையில் மரத்தின் பாகத்தில் கூட சேதம் ஏற்பட்டது. ஆனால் காருக்கு சின்ன கீரல் கூட ஏற்படவில்லை.

BYD YangWang U8L

இந்த சோதனையில் பாடி ஸ்டெக்ஷரில் மாற்றங்கள் எதுவும் இல்லை. எந்த பகுதி ஒரு பக்கத்தில் வெயிட் ஏறியதால் மற்றொரு பக்கத்திஎந்த பாகமும் தூக்கவில்லை. காலம் பகுதியில் எந்த பெண்ட்களும் விழவில்லை. இந்த சோதனைக்கு பிறகு காரின் கதவுகள் சாதாரணமாக திறந்தது. வாகனத்தையும் வழக்கம் போல இயக்க முடிந்தது. இதில் ஆச்சரியபட வேண்டிய விஷயம் என்னவென்றால் காரின் கீது மரம் விழும் போது எடையை சமாக கார் பரித்ததால் காரில் உள்ள சன்ரூஃப் கண்ணாடி, முன்பக்க விண்ட் ஷீலல்வடு பகுதிகளில் கூட எந்தவிதமான சேதாரமும் ஏற்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி நிறுவனத்தின் YangWang U8L கார் உலகின் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருகு்கிறது. இந்த காரை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இந்நிறுவனம் அட்டோ 3, இமேக்ஸ் 7, சீல், ஸீலயன்7 ஆகிய கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துள்ளுது. இந்நிறுவனம் ஸீலயன் 6 என்ற ஹைபிரிட் காரை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 2, 2025, 14:30 [IST]
English summary
Byd yangwang u8l tree drop test structure strength
மேலும்... #byd #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X