ஒரே மாசத்துல உலக சாதனையை முறியடித்த பிஒய்டி கார்! மணிக்கு 472.41 கி.மீ வேகத்துல போகும்!

பிஒய்டி நிறுவனம் ரேஸ் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட யங்வாங் யூ9 கார் உலகின் வேகமான எலெக்ட்ரிக் காராக மாறியுள்ளது. இதற்கு மன்னர் ரிமேக் நிறுவனத்தின் ரிமேக் நிவேரா ஆர் கார் மணிக்கு 431.45 கி.மீ வேகத்தில் பயணித்தத நிலையில் இந்த கார் அதையும் தாண்டி 472.41 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஒய்டி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரி்பபில் ஒவ்வொரு உச்சத்தையும் தொட்டு வருகிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ள நிலையில் தற்போது உலகின் வேகமான எலெக்ட்ரிக் காரையும் தயாரித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

BYD Yangwang U9 World Fastest ev

இந்நிறுவனம் கார் ரேஸ் பயன்பாட்டிற்காக யங்வாங் யூ9 என்ற காரை தயாரித்துள்ளது. இந்த கார் ஜெர்மனியில் உள்ள ஆட்டோமோட்டிவ் டெஸ்டிங் பப்பென்பெர்க் என்ற ரேஸ் டிராக்கில் சோதனை செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கார் மணிக்கு 472.41 கி.மீ வேகத்தில் பயணித்ததது. இது உலக சாதனை வேகம் ஆகும். இதற்கு முன்னர் ரிமேக் நிறுவனத்தின் நிவேரா ஆர் என்ற கார் கடந்த ஜூலை மாதம் தான் வேகமான எலெக்ட்ரிக் கார் என பல சாதனைகளை படைத்தது.

அதன்டி 0-60 கி.மீ வேகம், 0-100 கி.மீ வேகம், 0-400 கி.மீ வேகம் உள்ளிட்ட பல செக்மெண்ட்களில் உலக சாதனை படைத்து உலகின் வேகமான காராக அறியப்பட்டது. ஆனால் ஒரே மாதத்தில் அதை தூக்கி சாப்பிடும் விதமாக பிஒய்டி நிறுவனத்தின் யங்வாங் யூ9 கார் உருவாகியுள்ளது. ரிமேக் நிவேரா ஆர் கார் மணிக்கு 431.45 கிமீ வேகத்தில் பயணித்திருந்தது. ஆனால் பிஒய்டி யங்வாங் யூ9 கார் மணிக்கு 472.41 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது.

BYD Yangwang U9 World Fastest ev

இந்த யங்வாங் காரின் ஸ்டாண்ட்ர்ட் வெர்ஷன் ஏற்கனவே விற்பனையாகி வருகிறது. அதன் டிராக் வெர்ஷன் காரில் சில அப்டேட்கள் செய்யப்பட்டு ரேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் காரை விட ரேஸ் டிராக் கார் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதே கார் கடந்தாண்டு நவம்பர் மாதம் டிராக்கில் ஓட்டப்பட்ட போது மணிக்கு 391.94 கி.மீ வேகத்தில் தான் ஓட்டப்பட்டது.

தற்போது இந்த பிஒய்டி யங்வாங் யூ9 காரை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டிரைவர் மார்க் பெசங்க் என்பவர் தான் ஓட்டினார். இந்த கார் குவாட் எலெக்ட்ரிக் மோட்டார் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மோட்டாரும் 755 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். மொத்தமாக சேர்ந்து 3000 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

BYD Yangwang U9 World Fastest ev

இந்த வேகத்தை பெற இந்த காரில் பல அட்வாஸ்டான தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது.இந்த காரில் டார்க் வெக்டாரிங் தொழிற்நுட்பம் உடனடி பவருக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் பிஒய்டி இ4 பிளாட்ஃபார்மின் DiSus-X Intelligent பாடி கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ரியல் டைமில் சஸ்பென்சஸில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யும். இதனால் ஆப்டிமல் டிராக்ஷனவ் கிடைக்கிறது. உதாரணமாக திரும்பும்போது வேகம் குறையாமல் இருக்க கார் தானாக வாகனத்தை உயரத்தையே ரியல் டைமில் அட்ஜெஸ்ட் செய்யும்.

இந்த காரில் சிறந்த தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இந்த கார் எக்ஸ்ட்ரீம் கண்டிஷனிலும் கூலிங் திறன் சிறப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் 1200V அல்ட்ரா ஹை வால்டேஜ் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட முதல் கார் இருக்கிறது. இந்த காரின் பாடி பனேலில் உள்ள சிறிய சிறிய கேப் கூட டக்டேப் கொண்டு ஓட்டப்பட்டுள்ளது. இதனால் ஏரோ டைமிக்ஸ் சிறப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இந்த காரில் உள்ள அட்வான்ஸ் தொழிற்நுட்பங்களில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் அதிகமாக செலுத்துகின்றனர். அடுத்து ரிமாக் நிவேரா கார் மீண்டும் இதை விட வேகமாக சென்று இந்த சாதனையை முறியடிக்க கூட வாய்ப்புள்ளது. இது வியாபார போட்டியின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2025, 8:30 [IST]
English summary
Byd yangwang u9 world fastest ev sets 472 kmph top speed
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X