"உங்க கார் நடுவழியில் நிற்கப்போகுது"ன்னு இனி உங்க காரே உங்ககிட்ட சொல்லும்! எப்படி தெரியுமா?

இன்று வாகனங்களில் தொழிற்நுட்பம் என்பது அதிகமாகிவிட்டது. அடாஸ் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு வாகனம் ஓட்டுவதை எளிமைகாக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது.இந்நிலையில் கார்களில் செயற்கை நுண்ணறிவு உட்புக துவங்கிவிட்டது. இந்நிலையில் வருங்காலங்களில் உங்கள் கார் அடுத்து பிரேக்டவுன் நடக்கப்போவதை முன்பே இந்த ஏஐ தொழிற்நுட்பத்தால் கண்டுபிடிக்க முடியுமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது உள்ள பெரும்பாலான கார்களில் அடாஸ் தொழிற்நுட்பம் உட்புகுத்தப்படுகிறது. இந்தியாவில் லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் வரை பயன்படுத்த அனுமதி இருக்கிறது. இந்த லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பத்திற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சென்சார்களை வாகனங்களில் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இது போக கேமராக்கள் மூலமும் காரை சுற்றி நடப்பது கண்காணிக்கப்படுகிறது.

AI Predict Car Breakdown

இந்த தரவுகள் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்பட்டு காரின் ஓட்டுநருக்கு எச்சரிக்கையை விடுக்கிறது. சில தொழிற்நுட்பங்கள் டிரைவர் இன்புட் தரவில்லை என்றால் சில விஷயங்களை தானாக செய்து விபத்தை தவிர்க்கின்றது. இந்நிலையில் இந்த தரவுகளை எல்லாம் செயற்கை நுண்ணறிவு சிறப்பாக கையாள துவங்கிவிட்டது.

இந்நிலையில் இதன் அடுத்தகட்டம் வாகனம் பயணிக்கும் போது அடுத்து என்ன நடக்கம் என்பதையும் ஏஐ தொழிற்நுட்பம் கணிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலையில் பயணிக்கும் போது திடீரென கார் பிரேக்டவுணாகி நடுவழியில் நிற்பது வாடிக்கை தான். தற்போது கார் எப்பொழுது சர்வீஸ் செய்யப்ப்டடுள்ளது. இந்த முறையில் கார் ஓட்டப்படுகிறது. இதனால் தேய்மானம் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்காணித்து எதிர்காலத்தில் கார் எப்பொழுது பிரேக்டவுனாகும் என்பதை ஏஐ கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AI Predict Car Breakdown

தற்போது இந்த தொழிற்நுட்பம் வரவில்லை என கூற முடியாது. இந்த தொழிற்நுட்பத்திற்கான ஆரம்ப கட்ட டெக்னாலஜி எல்லாம் தற்போது பயன்பாட்டிற்கு வருகிறது. வாகனத்தின் சர்வீஸ், வேகம், வாகனத்தின் உதிரி பாகங்களின் திறன் எல்லாம் கண்காணிக்கப்படுகிறது. இதை எல்லாம் சேர்த்து ஏஐ தொழிற்நுட்பம் அடுத்த கார் பிரேக்டவுன் தகவலை கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதற்காக தொழிற்நுட்ப வல்லுநர்கள் ஏற்கனவே பணியில் இறங்கவிட்டனர். அமெரிக்காவை சேர்ந்த Kinsey நிறுவனம் சில இந்தியர்கள் துணையுடன் இது குறித்த தொழிற்நுட்பத்தை உருவாக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் இதை வாகனத்தின் இன்சூரன்ஸ் செலவுடன் இணைக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த தொழிற்நுட்பம் வாகனம் எப்படி ஓட்டப்படுகிறது. இதனால் விபத்தில் சிக்கும் வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது? இந்த கார் ரிப்பேர் ஆக எவ்வளவு வாய்ப்புள்ளது என்பதை கணித்து சொல்லும்.

AI Predict Car Breakdown

இதனால் நீங்கள் காரை சிறப்பாக இயங்க்கினால் உங்கள் இன்சூரன்ஸ் பிரிமியம் செலவு குறையும். இந்த ஏஐ தரும் தரவுகளின் அடிப்படியில் இன்சூரன்ஸ் பிரிமியத்தை செலுத்த முடியும். அதே நேரம் ரேஸ் டிரைவிங், அதிக விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை இந்த ஏஐ கண்டறிந்தால் அவர்களுக்கு பிரிமியம் தொகையை அதிகம் விதிக்கவும் இந்த தொழிற்நுட்பம் மூலம் முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உங்கள் கார் அடுத்து எப்பொழுது பிரேக்டவுன் ஆகும் என்பதை ஏஐ தொழிற்நுட்பம் கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இது நேரடியாக இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையுடன் இணைக்கப்படுவதால் சிறந்த ஓட்டுநர்களுக்கு இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 21, 2025, 7:00 [IST]
English summary
Can ai predict your next car breakdown one developer is making sure it does
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X