கடன் வாங்கினாலும் இந்த காஸ்டலியான காரை மக்கள் வாங்குவாங்க ஏன் தெரியுமா?

இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களுக்கான புயலே அடித்து வருகிறது என்று சொல்லலாம். பெரிய காராக இருக்க வேண்டும் என புதிதாக கார் வாங்கும் பலர் நினைப்பதால் இந்த ரக கார்கள் தான் அதிகம் விற்பனையாகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்யூவி கார்களில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அதற்கு தகுந்தார் போல விலைகளில் கார்களை தயாரிக்கிறார்கள். கம்மி விலை முதல் அதிக விலை வரை எஸ்யூவி ரக கார்கள் விற்பனையாகின்றன.

ஆனால் இன்ற மக்கள் விரும்பு ரக எஸ்யூவி கார்கள் எல்லாம் அவர்களது பட்ஜெட்டில் வேண்டும் என்ற மன நிலை மக்களுக்கு இருக்கிறது. அதே நேரம் குறைந்த விலையில் வாகனம் வாங்கினால் அதிகமான வசதிகளை எதிர்பார்க்க முடியாது. அதனால் ரூ10 லட்சம் முதல் ரூ20 லட்சம் என்ற விலையில் இந்திய மார்கெட்டில் விற்பனையாகும் கார்கள் குறித்த விபரங்களை இங்கே காணலாம். இந்த பட்டியலில் காம்பேக்ட், மிட்சைஸ் மற்றும் எம்பிவி ரக கார்கள் இருக்கிறது.

Cars Between 10 to 20 Lakhs

கியா சைரோஸ் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த கார் ரூ9 லட்சம் முதல் ரூ17.80 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. மக்கியமாக எல்இடி லைட்டுகள், 17 இன்ச் அலாய் வீல்கள், 30 இன்ச் கொண்ட டிரினிட்ட பானரோமிக் டிஸ்பிளே இருக்கிறது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 8 ஸ்பீக்கர் கொண்ட கார்டன் ஸ்பீக்கர்கள், உள்ளன.

இந்த காரில் 2வது வரிசை சீட்டில் வென்டிலேட்டட் சீட்டகள், டுயல் பேன் சன் ரூஃப், லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டடுள்ளது. இது மட்டுமல்ல இந்த காரின் இன்ஜின் அம்சங்களும் சிறப்பாக உள்ளன. இதில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. ஸ்மார்ட் ஸ்டிரீம் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மறஅறம் 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் உள்ளிட்ட ஆப்ஷன்கள் உள்ளன.

Cars Between 10 to 20 Lakhs

இதில் பெட்ரல் இன்ஜின் 120 பிஎஸ் பவரையும், 172என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தினற் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 116 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. பெட்ரோல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. டீசல் இன்ஜினை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

அடுத்ததாக ஹூண்டாய் கிரெட்டா கார் இருக்கிறது. இந்த காருக்கு அறிமுகமே தேவையில்லை. கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்தியாவில் சிறப்பாகவிற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருகு்கிறது. இந்த கார் மிட்சைஸ் எஸ்யூவி காராக விற்பனையாகிறது. இந்த கார் தற்போது ரூ11.11 லட்சம் முதல் ரூ20.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Cars Between 10 to 20 Lakhs

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் எம்பிடு பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 115 பிஎஸ் பவரையும், 144என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 1.5 லிட்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல் இருக்கிறது. இந்த கார் 160 பிஎஸ் பவரையும் 253 என்எம் டார்க் திறன் கொண்டதாக விவமைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 1.5 லிட்டர் யூ2 சிஆர்டிஐ இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இதன் கியர் பாக்ஸ் ஆப்ஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் இன்ஜினில் உள்ளன. அடுத்தாக 1.5 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜினில் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ்கள் உள்ளன. 1.5 லடி்டர் யூ2சிஆர்டிஐ டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

Cars Between 10 to 20 Lakhs

இதில் எம்பிவி செக்மெண்டில் இருந்து இந்த பட்டியலில் இருகு்கும் கார் மாருதி சுஸூகி எர்டிகா கார் தான் இந்த கார் கடந்த நிதியாண்டில் மட்டும் 1,90,974 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் விலை தான் இவ்வளவு அதிகமான விற்பனைக்கு முக்கியமான காரணம். இந்த கார் ரூ8.84 லட்சம் முதல் ரூ13.13 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை கே15சி ஹைபிரிட் ஸ்மார்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக உள்ளது. இந்த இன்ஜின் 103 பிஎஸ் பவரையும், 137என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் இயங்குகிறது.

இந்த இன்ஜின் சிஎன்ஜி ஆப்ஷனிலும் இயங்கும். அதன் மூலம் இயங்கும் போது 88 பிஎஸ்பவரையும் 121 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜியில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. இந்த காரின் மைலேஜ் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இது பெட்ரோலில் 20 கி.மீ மைலேஜூம், சிஎன்ஜியில் 26 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 7 சீட்டர் காரில் அதிக அம்சங்கள் கொண்ட காராக இருகு்கிறது. இதில் ஸ்மார்ட் பிளே ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆட்டோமெட்டிக் ஏசி, 2வது வரிசை சீட்டிற்காக ரூஃப்பில் பொருத்தப்பட்ட ஏசி, மற்றும் எம்ஐடி கலர் டிஎஃப்டி டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. நிச்சயம் வாடிக்கையாளர்களை அதிகம் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று புதிய கார் வாங்கும் போது மக்கள் பட்ஜெட்டை விட வசதி மற்றும் பவர்ஃபுல்லான கார் மற்றும் சமூகத்தில் தங்களுக்கு ஒரு அந்தஸ்தைதரும் கார் காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கி வருகின்றனர். இதனால் குறைந்த விலையை விட ரூ10- ரூ20 லட்சம் என்ற விலையில் உள்ள கார்களை அதிகம் தேர்வு செய்கிறார். இந்த பட்டிலில் உள்ள கார்கள் நிச்சயம் புதிதாக கார் வாங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 22:40 [IST]
English summary
Car between rs 10 lakh and rs 20 lakh all you need to know
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X