காரே இல்லன்னாலும் பார்க்கிங் வச்சு தான் வீடு கட்டனும்! வந்தது புதிய ரூல்ஸ்!

தமிழகத்தில் தனி வீடு கட்டுவதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி இனி தனி வீடு கட்டுபவர்கள் கட்டாயம் கார் நிறுத்த பார்கிங் வசதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகம் முழுவதும் ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்றால் அவர் தமிழக அரசின் அனுமதியை பெற்று தான் வீடு கட்ட வேண்டும். இப்படியாக வீடு கட்டும் போது அது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலோ அல்லத வணிக கட்டடங்கள், நிறுவன கட்டடங்கள் போன்ற கட்டடங்களை கட்ட வேண்டும் என்றால் வாகன பார்க்கிங் வசதியை செய்யும் அளவிற்கு திட்டமிட்டு கட்ட வேண்டும் அப்படியாக பார்க்கிங் வசதி இல்லை என்றால் அந்த கட்டடத்தை கட்ட அனுமதி வழங்கப்படாது. ஆனால் தனி வீடு கட்ட அப்படியானவ விதிகள் இதுவரை இல்லை.

Car Parking For New Build House

இந்நிலையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை தற்போது புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 3300 சதுரடி வரையிலான பரபரபளவில் ஒரு தனி வீடு கட்டப்படுமானால் அந்த வீட்டில் 2 கார்கள் மற்றும் 2 டூவீலர்களை நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. அதே நேரம் 3300 சதுரடிக்கு மேல் வீடு கட்டஅனுமதி கோரப்படும் ப்டசத்தில் 4 கார்கள் மற்றும் 4 டூவீலர்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரு நகரங்களில் சாலைகளில் பார்க்கிங் செய்யப்படுவது அதிகமாக உள்ளது. இதனால் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பெரிய சாலைகளில் இல்லை என்றால் சிறிய வீதிகள், தெருக்களில் சாலையோரம் காரை பார்க்கிங் செய்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சரியான சாலை வசதி இல்லாமல் விபத்து ஏற்படுகிறது.

Car Parking For New Build House

இதனால் பொதுசொத்துகளுக்கும் பிரச்சனை வருகிறது. இதை கருத்தில் கொண்டு தற்போது பெரு நகரங்களில் கார் வாங்கும் போது அதை சரியாக பார்க் செய்ய இடத்தை காட்ட வேண்டும் என்ற சட்டம் எல்லாம் இருக்கிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் தான் இந்த பிரச்சனை இருக்கிறது. இதனால் இனி தனி வீடு கட்டும் போது காரை பார்க் செய்ய வசதி வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மாற்றத்தை செய்துள்ளது.

அதுவும் எதிர்காலத்தில் வீட்டில் இரண்டு கார்கள் கட்டாயம் இருக்கும் என்பதால் சிறிய வீடு என்றால் 2 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கார் பார்க்கிங்கும், பெரிய வீடு என்றால் 4 கார்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியை செய்து தர வேண்டும் என தற்போது விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. பொது கட்டட விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம் எதிர்காலத்தில் பார்க்கிங் பிரச்சனையை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட விதிமுறை ஆகும்.

Car Parking For New Build House

இது மட்டுமல்ல எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களின்பயன்பாடு அதிகம் வரும் என கணிக்கப்படுகிறது. இதனால் தனியாக பா்க்கிங் இருந்தால் தான் சார்ஜிங் வசதிகளை ஏற்படுத்த முடியும். இதனால் நீங்கள் சொந்தமாக கார் இல்லை என்றாலும் புதிதாக வீடு கட்டினால் கார் பார்க்கிங் வைத்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் நிச்சயம் கார் வாங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் இப்படியான அறிவிப்பை அரசு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பார்க்கிங் பிரச்சனை நீண்ட ஆண்டுகளாக மிகபெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பார்க் செய்ய இடவசதியுடன் தான் இனி வீடு கட்டுபவர்கள் வீட்டை திட்டமிட வேண்டும் . அப்பொழுது தான் எதிர்காலத்தில் பார்க்கிங் பிரச்சனை வராது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 16:55 [IST]
English summary
Car parking for new build homes two space regulation 3300 sqft
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X