வீட்டுக்கு 2பேர் கார் வாங்கிட்டாங்க போல! 30 நாளில் 7 லட்சம் கார்கள் வித்துடுச்சு!

இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0க்கு பிறகு கார் வாங்கும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்களாக அதிகரிக்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்களின் விலை கணிசமாக குறைந்ததால் இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கடந்த செப் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது. முன்னர் 28 சதவீதமாக இருந்த வாகன வரி தற்போது 18 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் வாகனங்களின்விலை கணிமாக குறைந்துள்ளது. சொல்லப்போனால் சில வாகனங்களின் விலை லட்சகணக்கான ரூபாய் குறைந்தது. இதனால் பலர் தங்கள் கனவு வாகனத்தை வாங்கும் முடிவை எடுத்தனர்.

Car sales After GST

இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வந்தநிலையில் இந்தியாவில் செப் 22ம் தேதி முதல் கடந்த அக்டோபர் 18ம் தேதி வரை பண்டிகை காலம் என்பதால் அதிக கார்கள் விற்பனையானது. இந்த காலகட்டத்தில் மட்டும் 6.5 லட்சம் முதல் 7 லட்சம் கார்கள் விற்பனையாகியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது வழக்கமாக நடக்கும் விற்பனையை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

இந்த காலகட்டத்தில் இருப்பதிலேயே அதிக கார்களை விற்பனை செய்தது மாருதி நிறுவனம் தான் மொத்தம் 3.5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது தினமும் சராசரியாக 13,500 கார்கள் விற்பனையை பெற்றள்ளது. ஆதே நேரம் இந்த காலகடத்தில் புக்கிங் மட்டும் 4.50 லட்சத்தை தாண்டியுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

Car sales After GST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த 30 நாட்களில் மட்டும் 1 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக பதிவு செய்துள்ளது. இந்த வாகனம் 33 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதில் நெக்ஸான் கார் மட்டும் 38,000 கார்கள் விற்பனையாகியுள்ளன. பஞ்ச் காரை பொருத்தவரை 32,000 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 29 சதவீத வளர்ச்சியாகும். எலெக்ட்ரிக் வாகனங்களும் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் 10,000 கார்கள் விற்பனையாகியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த செப் 22ம் தேதிக்கு பிறகு தினமும் சராசரியாக 2500 கார்களை விற்பனை செய்கிறது. 3500 கார்களுக்கான புக்கிங்கை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனம் கடந்த 30 நாட்களில் மொத்தம் 75,000 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் நவராத்திரி முதல் நாளில் 11,000 கார்களை டெலிவரி செய்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரி செய்யப்பட்டது அன்று தான்.

Car sales After GST

அதே நேரம் மஹிந்திரா, கியா, டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் 20 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியை சந்தித்துள்ளன. செப்டம்பர் மாதம் முதலிலேயே ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த அறிவிப்புவெளியானதால் பலர் தங்கள் கார் வாங்கும் முடிவை தள்ளிப்போட்டனர். இதனால் செப்டம்பர் மாத இறுதியில் சிறப்பான விற்பனை நடந்தது.அதை தொடர்ந்து தீபாவளியும் நெருங்கியதால் விற்பனை அமோகமாக இருந்தது. இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனை வளர்ந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிஎஸ்டி வரிகுறைப்பு வந்த போதே வாகன விற்பனை கணிசமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விற்பனை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இது இந்திய பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கத்தைஏற்படுத்தியுள்ளுது.இதனால் மார்கெட் விரிவடைந்துள்ளது. விரைவில் இந்தியா உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்கெட்டாக மாறும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 23, 2025, 16:30 [IST]
English summary
Car sales after gst 2 0 cross 5 lakh in one month
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X