மாருதியே நினைச்சாலும் முதல் இடத்தை விட முடியாது போல! டாப் 10 லிஸ்ட் இதான்!

டிசம்பர் மாதம் துவங்கியுள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் கடந்த நவம் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதன்படி இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த வரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வழக்கம் போல கடந்த நவம்பர் மாதமும் மாருதி நிறுவனம் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 1,70,971 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 1,41,312 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 29659 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 20.99 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 1,76,318 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது தற்போது 5347 வாகனங்கள் குறைந்து 3.03 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Car Sales Nov 2025
இரண்டாவது இடத்தில் டாடா நிறுவனம் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 57436 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 47,063வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 10373 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி22.04 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 61,134 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது தற்போது 3698 வாகனங்கள் குறைந்து 6.05 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 56,336 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 71264 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது10,114 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 21.88 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 71264 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது தற்போது 14928 வாகனங்கள் குறைந்து 20.95 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Car Sales Nov 2025

4வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 50,340 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 48246 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 2094 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 4.34 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 53792 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது தற்போது 3452 வாகனங்கள் குறைந்து 6.42 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

5வது இடத்தில் டொயோட்டா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 30,085 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 25183 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 4902 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 19.47 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 40257 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது தற்போது 4067வாகனங்கள் குறைந்து 13.76 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Car Sales Nov 2025

6வது இடத்தில் கியா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 25,489 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 20,600 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 4889 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 23.73 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 29559 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது தற்போது 4067 வாகனங்கள் குறைந்து 13.76 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

7வது இடத்தி்ல ஸ்கோடா நிறுவனம் 5941 வாகனங்களை விற்பனை செய்து 90 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளுது. 8வது இடத்தில் எம்ஜி நிறுவனம் 5754 வானகங்களை விற்பனை செய்து 32 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. 9வது இடத்தில் ஹோண்டா நிறுவனம் 5204 வாகனங்களை விற்பனை செய்து 4 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. 10வது இடத்தில் ரெனால்ட் நிறுவனம் 3662 வாகனங்களை வறி்பனை செய்து 30 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து : கடந்த நவம்பர் மாதம் முந்தைய ஆண்டை விட வாகன விற்பனையை அனைத்து நிறுவனங்களும் அதிகமாக செய்துள்ளது. அக்டோர் மாதத்தை விட குறைவாக விற்பனையாகியுள்ளதற்கு காரணம் தீபாவளி போன்ற பண்டிகைகள் அக்டோபரில் வந்தது தான். இந்த டிசம்பரில் மேலும் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 3, 2025, 22:30 [IST]
English summary
Car sales nov 2025 maruti tata mahindra hyundai toyota kia
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X