டூவீலர் விலையில் இந்த கார்கள் விற்பனைக்கு வரப்போகுது? இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தா போதும்!
இந்தியாவில் என்ட்ரி லெவல் கார்களை மிக குறைவான விலையில் விற்பனை செய்ய சாத்தியம் இருப்பதாக மாருதி நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதுபடி பாரத்தால் இந்தியாவில் டூவீலர் விலையில் ஒரு காரை விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். சிறிய ரக கார்களுக்கு இந்தியா பெரிய மார்கெட்டாக இருந்து தற்பேது மாறி வருகிறது. இந்நிலையில் மீண்டும் சிறிய ரக கார்கள் இந்திய மார்கெட்டில் ஆதிக்கம் செலுத்துமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் என்ட்ரி லெவல் கார்கள் ரூ5 லட்சம்த்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார்கள் கடந்த 2015-16 நிதியாண்டில் 10 லட்சத்திற்கும் அதகிமான கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த 2024-25ம் நிதியாண்டில் 25,402 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. விற்பனை மிக மோசமான அளவில் சரிவடைந்துள்ளது. விலை குறைவாக இருந்தாலும் இந்த ரக கார்களை மக்கள் அதிகம் விரும்பவில்லை என்பது இதனால் தெளிவாக தெரிகிறது.

ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் மார்கெட்டை சிறிய ரக கார்கள் தான் ஆக்கிரமித்து வைத்திருந்தன. ஆனால் இன்று சிறிய ரக கார்களின் பங்கு 3 0 சதவீதத்திற்கும் குறைவாக மாறிவிட்டது. கடந்த மே மாதம் மாருதி ஆல்டோ மற்றும் எக்ஸ் பிரெஸ்ஸோ ஆகிய கார்களின் விற்னை 6776 ஆக குறைந்துவிட்டது. இந்த கார்கள் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 9902 வாகனங்களாக இருந்தன.
இது மட்டுமல்ல காம்பேக்ட் கார்களான பலேனோ, செலிரியா, டிசையர், எக்ஸ்பிரஸ்ஸோ, இக்னீஷ், ஸ்விஃப்ட் மற்றம் வேகன் ஆர் ஆகிய கார்களின் விற்பனையும் சரிவடைந்துள்ளது. இந்த கார்கள் எல்லாம் சேர்த்து 61502 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 68206 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளது.

சமீபகாலமாக வாகனங்கள் மீதான ஓழுங்காமைப்புகளை அரசு அதிகரித்துள்ளது. இதனால் சிறிய ரக கார்கள் அதிக விலையில் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டூவீலர் பயன்படுத்தி வரும் ஒரு குடும்பம் காருக்கு நகர வேண்டும் என்றால் அதிகம் யோசித்து வருகிறது. சிறிய ரக கார்களுக்கும் காம்பேக்ட் ரக கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. காம்பேக்ட் ரக கார்களை வாங்க மக்களிடம் போதுமான பொருளாதார வசதி இல்லை.
இதனால் மாருதி நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறும் போது சிறிய ரக கார்களுக்கு அரசு மானியங்களை வழங்க வேண்டும். இப்படியாக வழங்கினால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவு வளர்ச்சியை பெறும் என கூறினார். வாகனங்களின் விலை காரணமாக தான் சிறிய ரக கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகவில்லை. மானியம் வழங்கப்பட்டால் டூவீலர் விலையில் கார்களை விற்க முடியும் என அவர் கூறினார்.

அவர் சொன்னதுபடி தற்போது சுமார் ரூ4 லட்சம் செலவு செய்தால் தான் வாகனங்களை ஒருவரால் வாங்க முடியும். சிறிய ரக வாகனங்களை வாங்கும் பலர் இன்னும் கொஞ்சம் செலவு செய்தால் நல்ல காரை வாங்கலாம் என எண்ணி இன்னும் சில காலம் காத்திருந்து காம்பேக்ட் அல்லது எஸ்யூவி ரக கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் இந்த ரக கார்களின் விற்பனை குறைகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த விலை காரை வாங்கி பயன்படுத்துவது ஸ்டேட்டஸ் குறைபாடான விஷயமாக பார்க்கப்படுகிறது. டாடாவின் நானோ கார் இதன் காரணமாக பெரிய அளவில் விற்பனையாகவில்லை. ்ந்த டிரெண்ட் இப்பொழுதும் தொடர்கிறது. குறைந்த விலையில் கார்கள் இருந்தால் தான் அதை விட சற்று அதிகமான விலையில் இருக்கும் கார்கள் விற்பனையாகும்.


Click it and Unblock the Notifications









