விலை ரொம்ப கம்மி! ஆனா செம சேஃப்டியாக உள்ள கார்கள் இவ்வளவு இருக்குதா?
இந்தியாவில் பாதுகாப்பான கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றனர். புதிதாக கார் வாங்குபவர்கள் பலர் அதிக பாதுகாப்பு நிறைந்த காரை தேர்வு செய்கின்றனர். பாதுகாப்பான கார் என்றால் காரில் ஏர்பேக் மிகவும் முக்கியம் விபத்து நடந்தால் இது பயணிகளின் உயிரை பாதுகாக்கும். அதன்படி இந்தியாவில் ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் 6 ஏர்பேக் கொண்ட கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனத்தின் சமீபத்திய காரான சைரோஸ் கார் 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது. இந்த காரின் எச்டிகே வேரியன்ட் மட்டுமே ரூ10 லட்சத்திற்கு கறைவான விலையில் விற்பனையாகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 120 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை வழங்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது. இதன் டாப் வேரியன்டில் மட்டுமே 6 ஏர்பேக் இருக்கிறது. பேஸ் வேரியன்டில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே விற்பனையாகி வருகுிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்களுடன் வருகிறது. டெல்டாப +,ஸெட்டா முற்றம் ஆல்ஃபா வேரியன்டகளில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது. இது 100 எச்பி பவரை வெளிப்படுத்தும்.
டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸா கா காரிலும் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியன்டான ஜி வேரியன்டில் இந்த ஆப்ஷன் இருக்கிறது. இந்த வேரியன்ட் ரூ8.82 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. இது ஏஎம்பி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் கூட விற்பனையாகி வருகிறது. இதன் ஏஎம்டி வேரியன்ட் ரூ10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

மாருதி நிறுவனத்தின் பரெஸ்ஸா காரிலும் இந்த ஆப்ஷன் இருக்கிறது. இந்த கார் ரூ8.69 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் மொத்தம் 10 வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இதில் எல்எக்ஸ் ஐ, எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி, விஎக்ஸ்ஐ ஆகிய வேரியன்ட்கள் மட்டுமே ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகி வருகிறது.
சிட்ரோன் ஏர்கிராஸ் காரிலும் 6 ஏர்பேக் ஆப்ஷன் உள்ளது. இந்த கார் 5+2 என்ற நிலையில் 7 சீட்டர் ஆப்ஷனும் இருக்கிறது. ஆனால் டாப் வேரியன்டில் மட்டுமே இந்த ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 84 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூ 8.62 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

மாருதி நிறுவனத்தின் பலேனோ காரும் இந்த பட்டியலில் இரக்கிறது. இந்த கார் 6 பேக்குகளுடன் விற்பனையாகிறது. இதன் ஸெட்டா வேரியன்ட் ரூ8.47 லட்சம் என்ற விலையில் அதன் ஏஎம்டி எடிசன் ரூ8.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஆல்ஃபா வேரியன்டை பொருத்தவரை ரூ9.42 லட்சம் என்ற விலையிலும், அதன் ஏஎம்டி வேரியன்டை பொருத்தவரை ரூ9.92 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
சிட்ரோன் பசால்ட் கூபே கார்6 ஏர்பேக்குகளுடன் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. அதன்படி 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கார் ரூ8.32 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ14.10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் யூ மற்றும் பிளஸ் வேரியன்ட் மட்டுமே ரூ10 லட்சத்திற்குள் குறைவான விலையில் விற்பனையாகி வருகிறது.
அடுத்ததாக ஹோண்டா அமேஸ் கார் இருக்கிறது. இந்த காரின் விஎம்டி, விஎக்ஸ் எம்டி, வி சிவிடி, இசட் எக்ஸ் எம்டி ஆகிய வேரியன்ட்கள் ரூ10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது.
டாடா நெக்ஸான் காரிலும் ஆறு ஏர்பேக் இருக்கிறது. இந்த கார் ரூ8 லட்சம் முதல் ரூ15.6 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் ட்ரபோ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இது 5 ஸ்பீடு, 6 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி, டுயல் கிளட்ச் ஆட்டோ ஆகிய ஆப்ஷன்கள் பெட்ரோல் ஆப்ஷனிலும், டீசல் இன்ஜினில் ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது.
கியா நிறுவனத்தின் சோனட் காரும் 6 ஏர்பேக்குகள் ஆப்ஷன் உடன் விற்பனையாகி வருகுிறது. இந்த கார் ரூ7.99 லட்சம் முதல் ரூ15.74 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இஎஸ்சி, விஎஸ்எம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல், டிபிஎம்எஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரிலும் இந்த ஆப்ஷன் இருக்கிறது. 6 ஏர்பேக்குகள் இந்த காரின் அனைத்து வேரியன்ட்களிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூ7.99 லட்சம் முதல் ரூ15.56 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. இந்த காரில் 1.2 டர்போ பெட்ரோல் இன்ஜின் ,1.2 லிட்டர் டைரக்ட் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. 5 ஸ்டார் பாரத் என்கேப் ரேட்டிங்கை பெற்ற கார் இது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரில் 6 ஏர்பேக்குகள் உடன் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் விற்பனையாகி வருகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் விற்பனையாகி வருகிறது இந்த கார் ரூ7.94 லட்சம் முதல் ரூ13.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பட்டியலில் உள்ள கார்கள் எல்லாம் குறைவான பட்ஜெட்டில் அதிக பாதுகாப்பு நிறைந்த கார்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு இந்த கார்கள் நிச்சயம் நல்ல ஆப்ஷனாக இருக்கும். இன்று வாகனம் வாங்க விரும்புபவர்கள் வாகனம் குறித்த தெளிவான விபரங்களை கேட்டறிந்து இந்த கார்களை வாங்கிக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









