10 லட்ச ரூபாய்க்குள் இப்படிப்பட்ட கார்களை கூட வாங்கலாமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

என்னதான் இன்றைய காலத்தில் புது, புது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic gearbox) கார்கள் வந்தாலும், மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox) உடன் காரில் மேனுவலாக கியர்களை மாற்றிக் கொண்டு செல்லும் சுகம் எதிலிலும் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, நீண்ட வருடங்களாக கார்களை ஓட்டுபவர்களுக்கு கியர்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டு காரை ஓட்டுவது சுகமான சுமையாகவே இருக்கும்.

இன்றைய காலத்தில் 5-ஸ்பீடு அல்லது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் தான் பெரும்பாலான பட்ஜெட் விலை கொண்ட கார்களில் வழங்கப்படுகின்றன. அதிலிலும், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தான் நிறைய கார்களில் ஆப்ஷனாக வழங்கப்படும் நிலையில், ரூ.10 லட்சத்திற்குள் சில கார்களில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

cars prices under 10 lakhs with 6-speed manual gearbox option

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, நெக்ஸான் ஆகும். டாடாவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக காரான நெக்ஸானில் பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின், சிஎன்ஜி (CNG) உள்பட எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன் கூட வழங்கப்படுகிறது.

இவ்வாறு பவர்டிரெயின் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, நெக்ஸானில் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன. அந்த வகையில், நெக்ஸான் காரின் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, பியூர் மற்றும் கிரியேட்டீவ் வேரியண்ட்களில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் நெக்ஸானின் மேற்கூறப்பட்ட வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.9 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

cars prices under 10 lakhs with 6-speed manual gearbox option

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): வென்யூ காரில் கொஞ்சம் அட்வான்ஸான 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் (iMT) ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் இந்த ஐஎம்டி கியர்பாக்ஸ் உடன் வென்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்குள் உள்ளன.

cars prices under 10 lakhs with 6-speed manual gearbox option

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): வென்யூ காரை போன்று ஐ20 காரிலும் 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஐஎம்டி கியர்பாக்ஸ் உடன் ஐ20 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.80 லட்சம் - ரூ.9.90 லட்சமாக உள்ளன. ஐ20 காரிலும் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் தான் ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது.

cars prices under 10 lakhs with 6-speed manual gearbox option

டாடா பஞ்ச் (Tata Punch): டாடா நெக்ஸானை காட்டிலும் அளவில் சிறியதான எஸ்யூவி காராக இருப்பதினாலேயே நெக்ஸானை காட்டிலும் பஞ்ச் காரை அதிக பேர் வாங்குகின்றனர். ஆனால், நெக்ஸானை போல் பெட்ரோல், டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்காமல், பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே பஞ்ச் கிடைக்கிறது.

அதேபோல், டாடா பஞ்ச் காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படாமல், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. பஞ்ச் காரின் பியூர், அட்வென்ச்சர் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு வேரியண்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6 லட்சத்தில் இருந்தே துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை காட்டிலும், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் காரில் ஜாலியான பயண அனுபவத்தை பெற முடியும். இதனால்தான், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் காரின் விலைகள் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றன. ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் 6-ஸ்பீடு மேனுவல் கார்களை மட்டும் தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இதனை தாண்டிய விலைகளில் இன்னும் பல கார்கள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2025, 5:00 [IST]
English summary
Cars with 6 speed manual gearbox option in india under 10 lakhs tata nexon and hyundai venue
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X