புதியதாக கார் வாங்கும்போது இது இருக்கானு பார்த்து வாங்குங்க! 10 லட்ச ரூபாய் கார்களில் கூட கிடைக்குது!

பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், தானாகவே ஒளி மங்கும் உட்புறக் கண்ணாடியுடன் (IRVM) கார்களை வாங்கலாம். ஆனால், இந்த அம்சம் பெரும்பாலும் இந்த விலைப்பிரிவில் உள்ள கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. தானாக ஒளி மங்கும் IRVM-க்கும், மேனுவலாக பகல்/ இரவுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய IRVM-க்கும் வித்தியாசம் உள்ளது.

மேனுவல் ஆப்ஷனில் கண்ணாடியில் வெளிச்சத்தைக் குறைக்க கியரை பயன்படுத்த வேண்டும். எனவே, நீங்கள் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை தான் வாங்குகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த காரின் அம்சங்கள் பட்டியலை கவனமாகப் பார்க்க வேண்டும். இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் தானாக ஒளி மங்கும் IRVM கொண்ட கார்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10 lakhs rupees cars with auto-dimming irvm

ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட் (Hyundai Exter SX (O) Connect): ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ-எஸ்யூவி காரின் உயர் ரக வேரியண்ட்டான எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட், தானாக ஒளி மங்கும் IRVM உடன் வருகிறது. எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட் வேரியண்ட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜினை மேனுவல் அல்லது ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் வாங்கலாம்.

ஆறு ஏர்பேக்குகள், குரல் மூலம் இயங்கும் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப் (Electric Sunroof) மற்றும் இரட்டை கேமரா டாஷ்கேம் (Dual Camera Dashcam) ஆகியவை எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் (ஆப்ஷனல்) காரின் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த ஹூண்டாய் காரில் பாதுகாப்பு அம்சங்களாக எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM) மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HAC) போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

10 lakhs rupees cars with auto-dimming irvm

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) (Hyundai i20 Sports (O)): ஹூண்டாய் ஐ20 காரின் ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) காரிலும் தானாக ஒளி மங்கும் IRVM வசதி உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஐ20 ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் பொத்தானை அழுத்துவதன் மூலம் காரை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்யும் வசதிகளை கொண்ட ஐ20 ஸ்போர்ட்ஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலே கண்ட ஹூண்டாய் எக்ஸ்டர் காரை காட்டிலும், ஐ20 ஸ்போர்ட்ஸ் சற்று விலைமிக்கது ஆகும்.

10 lakhs rupees cars with auto-dimming irvm

டாடா அல்ட்ராஸ் பியூர்/ கிரியேட்டிவ் (Tata Altroz Pure/ Creative): கடந்த 2024ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் பியூர், பியூர் எஸ், கிரியேட்டிவ் மற்றும் அதற்கு மேலான வேரியண்ட்களில் "ஆன்டிகிளேர் IRVM" என்கிற பெயரில் ஆட்டோ-டிம்மிங் IRVM வசதி வழங்கப்படுகிறது.

இந்த டாடா ஹேட்ச்பேக் காரின் மேற்கூறப்பட்ட வேரியண்ட்களில் 10.25 இன்ச் தொடுதிரை, 360-டிகிரி கேமரா மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் செயல்படும் சன்ரூஃப் போன்ற உயர் ரக அம்சங்கள் இடம்பெறுகின்றன. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர குளோபல் என்சிஏபி (Global NCAP) மதிப்பீட்டை அல்ட்ராஸ் பெற்றுள்ளது. மேலும், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆகியவை இதில் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோ-டிம்மிங் வசதி ஆனது காருக்கு ஸ்டைலான அம்சமாக இருப்பது மட்டுமின்றி, பாதுகாப்பான அம்சமாகவும் விளங்குகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இவற்றின் அவசியம் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க வசதி உடன் காரை ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம் என்பதை உங்களில் சிலர் இப்போதுதான் அறிந்திருக்கலாம். ஆதலால், புதியதாக கார் வாங்கும்போது காரில் இந்த அம்சம் உள்ளதா என்பதை அறியவும்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 28, 2025, 5:00 [IST]
English summary
Cars with auto dimming irvm priced under 10 lakhs rupees hyundai exter and i20
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X