ஆட்டோமேட்டிக் கார் கேள்விப்பட்டு இருக்கோம்... 10 லட்ச ரூபாய்க்குள் அது என்ன ஆட்டோமேட்டட்-மேனுவல் கார்?

இன்றைய கால மாடர்ன் கார்களில் பலரும் எதிர்பார்க்கும் அம்சங்களுள் ஒன்றாக மாறி இருப்பது, ஏஎம்டி கியர்பாக்ஸ் (AMT Gearbox) ஆப்ஷன் ஆகும். ஆட்டோமேட்டட்-மேனுவல் (Automated-Manual) என்பதன் சுருக்கம் தான், ஏஎம்டி ஆகும். அதாவது, மேனுவல் கியர்பாக்ஸ் போலவும், அதேநேரம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போலவும் செயல்படக்கூடியதாக விளங்கும் ஆட்டோமேட்டட்-மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா பஞ்ச் (Tata Punch): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய கார்களுள் ஒன்று, டாடா பஞ்ச் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுவரும் எஸ்யூவி (SUV) ரக கார், பஞ்ச் ஆகும். அளவில் சிறியதாக, அதற்கேற்ப விலை குறைவானதாக விளங்கும் பஞ்ச் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

cars with automated-manual gearbox

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): ஸ்விஃப்ட் ஆனது இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த விலை குறைவான மாருதி ஹேட்ச்பேக் காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

cars with automated-manual gearbox

டாடா நெக்ஸான் (Tata Nexon): பஞ்ச் காருக்கு அடுத்து டாடா மோட்டார்ஸில் இருந்து குறைந்த விலையில் கிடைக்கும் எஸ்யூவி கார், நெக்ஸான் ஆகும். பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) என பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் நெக்ஸான் காரில் அதேபோல் பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் ஒன்றாகும்.

cars with automated-manual gearbox

மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஒரேயொரு செடான் (Sedan) ரக கார், டிசைர் ஆகும். பிரபலமான ஸ்விஃப்ட் காரின் செடான் வெர்சனாக டிசைர் விற்பனை செய்யப்படுகிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் போன்ற பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் விற்பனை செய்யப்படுவதினாலேயே டிசைர் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

cars with automated-manual gearbox

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் எம்பிவி (MPV) ரக காராக விளங்கும் டிரைபரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது. இதனால், குறைந்த விலையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன், அளவில் பெரியதான எம்பிவி காரை வாங்க விரும்புவோருக்கு டிரைபர் ஏற்றதாக இருக்கும்.

cars with automated-manual gearbox

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): ஸ்விஃப்ட் காரை போன்று குறைந்த விலையில் ஸ்டைலிஷான ஹேட்ச்பேக் ரக காராக கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிரது. ஸ்டைலிஷான காராக விளங்குவது மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் உடனும் இந்த ஹூண்டாய் கார் விற்பனை செய்யப்படுகிறது.

cars with automated-manual gearbox

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக உருவாக்கப்பட்டாலும், பலேனோவின் விலை குறைவானதாக உள்ளது. இதனாலேயே இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்றாக விளங்கும் பலேனோவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமின்றி, சிவிடி (CVT) கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

cars with automated-manual gearbox

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார்களை போன்று, க்ளட்ச் பெடல் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதாக விளங்குவதினாலேயே சமீப காலத்தில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கே உண்டான எலக்ட்ரானிக் கண்ட்ரோல் (Electronic Control) உடன் க்ளட்ச் பெடல் இல்லாமல் சென்சார்கள் உடன் இயங்கக்கூடிய காரை வாங்க விரும்புபவர்கள் மேலே கூறப்பட்டுள்ள கார்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 23, 2025, 23:27 [IST]
English summary
Cars with automated manual gearbox priced under 10 lakhs tata punch and maruti suzuki swift
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X