ரெனால்ட் கார் தானேனு சாதாரணமா நெனைக்குறோம்... நிறைய பொருட்களை கொண்டு செல்ல ஏற்ற கார்!

கார் ஒன்றை வாங்கும்போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களுள் ஒன்று, காரின் பின்பக்க பூட் ஸ்பேஸ் (Boot Space) எவ்வளவு பெரியதாக உள்ளது என்பதாகும். பூட் ஸ்பேஸ் என்றதும் குழப்பமான வார்த்தை என நினைத்துவிட வேண்டாம்; காரின் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியை தான் ஆங்கிலத்தில் பூட் ஸ்பேஸ் என அழைக்கின்றனர். காரின் ஒட்டுமொத்த அளவு பெரியதாக, பெரியதாக அதற்கேற்ப காரின் பூட் ஸ்பேஸ் அளவும் பெரியதாக இருக்கும்.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், காரின் அளவு பெரியதாக பெரியதாக அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகமாக உள்ளன. ஆனால், கொஞ்சம் உன்னிப்பாக ஆராய்ந்தால், இந்திய மார்க்கெட்டில் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே பெரிய அளவிலான பூட் ஸ்பேஸ் உடன் கார்கள் கிடைக்கின்றன என்பதை அறியலாம். அத்தகைய கார்களுள் சிலவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

cars with biggest boot space

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் எம்பிவி (MPV) ரக கார், டிரைபர் ஆகும். ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில்தான் மேம்படுத்தப்பட்ட புதிய டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) கார் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.6.25 லட்சத்தில் விலை குறைவான எம்பிவி காராக இருப்பினும், டிரைபர் நன்கு அளவில் பெரியதாக, அதற்கு இணையாக நன்கு பெரியதான பூட் ஸ்பேஸ் உடன் உருவாக்கப்படுகிறது. டிரைபரின் பூட் ஸ்பேஸ் மொத்தம் 625 லிட்டர்கள் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.

cars with biggest boot space

மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz): மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த செடான் (Sedan) ரக கார், டிசைர் ஆகும். அதற்காக மிகவும் விலையுயர்ந்த கார் என நினைத்துவிட வேண்டாம். 510 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் உடன் ரூ.9.3 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) இருந்து சியாஸ் கிடைக்கிறது.

cars with biggest boot space

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்கும் மற்றொரு செடான் ரக கார் இதுவாகும். ஹோண்டாவில் இருந்து இந்தியாவில் ஓரளவிற்கு சுமாராக விற்பனையாகும் காரான அமேஸில் 420 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. அமேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.2 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

cars with biggest boot space

டாடா டிகோர் (Tata Tigor): இந்த வரிசையில் மற்றுமொரு செடான் ரக கார். டார்க் (Torque) திறன் மிக்க என்ஜினை பெறும் டிகோர் காரின் பின்பக்கத்தில் 419 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸின் காம்பெக்ட்டான செடான் ரக காராக விளங்கும் டிகோரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.3 லட்சமாக உள்ளது.

cars with biggest boot space

ரெனால்ட் கைகர் (Renault Kiger): நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய எஸ்யூவி கார் கைகர் ஆகும். பின்பக்கத்தில் 405 லிட்டர் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் உடன் உருவாக்கப்படும் கைகர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

cars with biggest boot space

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): இந்த தொகுப்பில் பார்க்கும் மற்றொரு செடான் ரக காரான அவ்ரா ஆனது விற்பனையில் அமேஸ் மற்றும் டிகோர் கார்களுக்கு போட்டியாக உள்ளது. 402 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் பகுதியை பெறும் இந்த ஹூண்டாய் செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.5 லட்சத்தில் இருந்து உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில், ரெனால்ட் டிரைபரின் பூட் ஸ்பேஸ் அளவு நன்கு பெரியதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், டிரைபர் ஓர் எம்பிவி கார் என்பதால். இருப்பினும், இந்த வரிசையில் ஆச்சிரியப்படுத்தும் விதமாக செடான் ரக கார்கள் அதிகமாக உள்ளன. தாழ்வான உடலமைப்பை கொண்டவை என்றாலும், செடான் கார்களின் பின்பக்கத்தில் பெரிய பூட் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 22, 2025, 5:00 [IST]
English summary
Cars with biggest boot space in india under 10 lakhs renault triber and maruti suzuki ciaz
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X