காரில் போய்கிட்டு இருக்கோம் என்றதையே மறந்துடுவீங்க! 10 லட்ச ரூபாய்க்குள் கிடைப்பது தான் ஆச்சிரியம்!
இன்றைய கால மாடர்ன் கார்களில் பொழுதுப்போக்கிற்கான அம்சங்கள் ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் அதிகமான பின்பு, காருக்கு உள்ளேயே திரை போன்றதான அமைப்பை வழங்க கார் கம்பெனிகள் முயற்சிக்கின்றன. ஆரம்பத்தில் கார் ஓட்டும் டிரைவருக்கு தேவையான விபரங்களை திரையில் காண்பிக்க ஆரம்பித்தவர்கள், அதன்பின் மற்ற பயணிகளுக்கும் பொழுதுப்போக்கிற்காக திரைகளை வழங்க ஆரம்பித்தார்கள்.
இந்த திரைகள் பொழுதுப்போக்கிற்காக மட்டுமில்லாமல், காரை பற்றிய விபரங்களையும் வழங்கக் கூடியவைகளாக இருப்பதால், இவை இன்ஃபோடெயின்மெண்ட் (Infotainment) என அழைக்கப்படுகின்றன. ரூ.10 லட்சம் விலைக்குள் விற்கப்படும் கார்களில் அதிகப்பட்சமாக 10.25 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது. 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா டியாகோ (Tata Tiago): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் கார், டியாகோ ஆகும். ரூ.7 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனை செய்யப்படும் டியாகோ காரில் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது எக்ஸ்.இசட் (XZ) வேரியண்ட்டில் இருந்து வழங்கப்படுகிறது.

சிட்ரோன் சி3 (Citroen C3): டாடா டியாகோ காரை போன்று இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக் காராக சிட்ரோன் சி3 விளங்குகிறது. பிரெஞ்சு-ஸ்டைலில் உருவாக்கப்படும் சி3 காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்டை தவிர்த்து மற்ற வேரியண்ட்கள் அனைத்திலும் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது.

எம்ஜி கோமெட் (MG Comet): டாடா எலக்ட்ரிக் கார்களுக்கே போட்டியாக எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்த விலை குறைவான எலக்ட்ரிக் கார், கோமெட் ஆகும். மிகவும் சிம்பிளான டிசைனில், பெட்டகம் வடிவிலான உருவத்தில் வடிவமைக்கப்படும் கோமெட் இவி எலக்ட்ரிக் காரில் எக்ஸ்சைட் (Excite) வேரியண்ட்டில் இருந்து 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது.

டாடா பஞ்ச் (Tata Punch): காம்பெக்ட்டான உடலமைப்பில் மிடில்-கிளாஸ் (Middle-Class) மக்களுக்கான டாடா உருவாக்கும் பஞ்ச் காரின் அக்கம்ப்ளீஷ்டு பிளஸ் (Accomplished Plus) வேரியண்ட்டில் இருந்து 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது. பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.5 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் சற்று விலைமிக்க கார் இதுவாகும். ஆனால் அதற்காக மிகவும் விலையுயர்ந்தது என நினைத்துவிட வேண்டாம். ஐ20 காரின் அஸ்டா (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இருந்து டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது. இதன் விலை ஏறக்குறைய ரூ.10 லட்சமாக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுவரும் இந்த எஸ்யூவி காரின் எண்ட்ரீ-லெவல் எம்.எக்ஸ்1 வேரியண்ட்டை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது. இந்த திரை உடன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்ஃபோடெயின்மெண்ட் திரை மூலமாக பாடல்களை வீடியோவில் பார்ப்பதில் இருந்து, திரைப்படங்களை பார்ப்பது மற்றும் காருக்கு வெளிப்பக்கத்தில் வழங்கப்படும் கேமராக்கள் (Cameras) மூலம் பெறப்படும் காட்சிகளை காண்பது வரையில் பல விதங்களில் பயன்படுத்த முடியும் என்பதாலேயே இவ்வாறான பொழுதுபோக்கு திரைகளின் பயன்பாடு கார்களில் அதிகரித்துள்ளது. 10.25 இன்ச்சை காட்டிலும் பெரிய அளவிலான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரைகள் கூட விலையுயர்ந்த கார்களில் வழங்கப்படுகின்றன என்றாலும், ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களில் 10.25-இன்ச் திரை என்பதே பெரிய அளவிலானது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









