பிஎஸ்6 வந்த அப்புறம் எல்லாமே மாறிடுச்சு! ரூ.10 லட்சத்திற்குள் எந்த டீசல் காரை வாங்குறதுனு குழப்பமா இருக்கா??
இந்தியாவில் பெட்ரோல் (Petrol) கார்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதாவது, டீசல் (Diesel) கார்களை காட்டிலும் பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதற்கு பிஎஸ்6 (BS6) மாசு உமிழ்வு விதிமுறை முக்கிய காரணம் ஆகும். ஏனெனில், டீசல் கார்களை பிஎஸ்6-க்கு ஏற்ப அப்கிரேட் செய்வது செலவுமிக்கதாக இருந்ததால், மாருதி சுஸுகி (Maruti Suzuki) போன்ற முன்னணி நிறுவனங்கள் டீசல் என்ஜின் ஆப்ஷன் உடன் கார்களை அறிமுகம் செய்வதை குறைத்தன.
இருப்பினும், டீசல் கார்களுக்கு என்றே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளதால், முடிந்தவரையில் டீசல் என்ஜின் ஆப்ஷனை கார்களில் வழங்க சில கார் கம்பெனிகள் முயற்சிக்கின்றன. டீசல் என்ஜின்களை உருவாக்குவதற்கு சற்று அதிகம் செலவாகிறது என்பது உண்மை தான் என்றாலும், இப்போது சில டீசல் கார்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக காரான நெக்ஸானின் ஸ்மார்ட் பிளஸ் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை (Ex-Showroom Price) கொண்டுள்ள நெக்ஸான் காரின் இந்த ஸ்மார்ட் பிளஸ் வேரியண்ட்டில் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெறலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் எஸ்யூவி காரான இதில் விலை குறைவான எம்.எக்ஸ்.2 (MX2) வேரியண்ட்டில் இருந்தே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் கிடைக்கிறது. இதனால், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் டீசல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero): மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. ஏனெனில், அந்த அளவிற்கு அதிக பயணிகளை அழைத்து செல்லும் அளவிற்கு பெரிய அளவிலான காராக பொலேரோ விளங்குகிறது. பொலேரோவை மட்டுமின்றி, பொலேரோ நியோ என்கிற மற்றொரு வெர்சனையும் ரூ.10 லட்சத்திற்குள் டீசல் என்ஜின் ஆப்ஷன் உடன் வாங்கலாம்.

கியா சொனெட் (Kia Sonet): கியா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி கார் சொனெட் ஆகும். இந்த காரின் எச்டிஇ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இருந்து ரூ.10 லட்சத்திற்குள் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனை வாங்கலாம். முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படும் சொனெட் காரில் பொருத்தப்படும் டீசல் என்ஜின் ஆனது சிறந்த எரிபொருள் திறனுக்காக பெயர் பெற்றதாக உள்ளது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): வென்யூ காரில் ரூ.10 லட்சத்திற்குள் டீசல் என்ஜின் ஆப்ஷனை ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. ஒரே கொரியன் கம்பெனி கார்கள் என்பதால், கியா சொனெட் காரில் பொருத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் தான் வென்யூ காரிலும் வழங்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): சற்று பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை எதிர்பார்ப்போருக்கு அல்ட்ராஸ் ஏற்றதாக இருக்கும். அல்ட்ராஸின் பியூர் வேரியண்ட்டில் இருந்து டீசல் என்ஜின் ஆப்ஷன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. மற்ற பிரபலமான டாடா கார்களை போன்று, அல்ட்ராஸும் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை கொண்டது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஒன்றை வாங்குவது என்றால், தோற்றத்தில் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பது மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்கள் மிக்கவை ஆகவும், பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கக் கூடியவை ஆகவும் இருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட கார்களின் விலைகள் யாவும் அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு (On-road) விலைகள் இன்னும் சில லட்சங்கள் அதிகமாக வரலாம்.


Click it and Unblock the Notifications









