10 லட்ச ரூபாய் காரில் எல்இடி லைட் கூட இல்லாமல் வாங்குவதா... இதில் ஒரு காரை வாங்க பாருங்க!!

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் புதிய கார்களில், உயர் ரக வேரியண்ட்களில் எல்.இ.டி ஹெட்லைட்கள் (LED Headlights) மற்றும் டெயில்லைட்கள் (Taillights) தற்போது சாதாரணமாகிவிட்டன. உயர் ரக வேரியண்ட் என்றதும் அதிகமான விலை கொண்டது என நினைத்துவிட வேண்டாம்.

ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை (Ex-Showroom Price) கொண்ட கார்களில் கூட எல்இடி ஹெட்லைட்ஸ் & டெயில்லைட்ஸ் வழங்கப்படுகின்றன. இவை ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களாகவும், காம்பாக்ட் எஸ்.யூ.வி (Compact SUV) ரக கார்களாகவும், செடான் (Sedan) ரக கார்களாகவும் மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

10 lakhs rupee cars with led headlights and taillights

டொயோட்டா க்ளான்ஸா (Toyota Glanza): இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில், ஒரு சிறப்பான தேர்வாக இது உள்ளது. இதன் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் இருந்தே எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், அனைத்து வேரியண்ட்களிலும் எல்இடி டெயில்லைட்கள் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படும் நிலையில், க்ளான்ஸா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.39 லட்சம் முதல் தொடங்குகின்றன.

10 lakhs rupee cars with led headlights and taillights

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): டொயோட்டா க்ளான்ஸாவின் சகோதர மாடலான இது, மத்திய-நிலை டெல்டா வேரியண்ட்டில் இருந்து எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்களை பெறுகிறது. பலேனோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.99 லட்சம் முதல் துவங்குகிறது.

10 lakhs rupee cars with led headlights and taillights

மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis)): மாருதி சுஸுகி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகாத மிகவும் சில கார்களுள் ஒன்றான இக்னிஸின் உயர் ரக வேரியண்ட்களில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் (DRLs) இடம்பெறுகின்றன. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.35 லட்சம் முதல் ஆரம்பிக்கின்றன.

10 lakhs rupee cars with led headlights and taillights

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): இந்த டாடா ஹேட்ச்பேக் காரில் எல்இடி டி.ஆர்.எல்-கள் மட்டும் வழங்கப்படுகிறது. உயர் ரக வேரியண்ட்களில் எல்இடி டெயில்லைட்கள் கிடைக்கின்றன. அல்ட்ராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.30 லட்சம் முதல் தொடங்குகிறது. டாடாவில் பாதுகாப்புமிக்க கார்களுள் ஒன்றாக அல்ட்ராஸ் விளங்குகிறது.

10 lakhs rupee cars with led headlights and taillights

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): காம்பாக்ட் எஸ்யூவி கார் பிரிவில், குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஹூண்டாய் எஸ்யூவி கார், H-வடிவ எல்இடி டி.ஆர்.எல்-கள் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை உயர் வேரியண்ட்களில் பெறுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.13 லட்சம் முதல் தொடங்குகின்றன.

10 lakhs rupee cars with led headlights and taillights

டாடா பன்ச் (Tata Punch): டாடாவின் அளவில் சிறியதான எஸ்யூவி காரான பன்ச்சின் உயர் ரக வேரியண்ட்களில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டி.ஆர்.எல்-கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்படுகின்றன. பன்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.13 லட்சம் முதல் ஆரம்பமாகின்றன. பன்ச் இவி எலக்ட்ரிக் காரும் (Electric Car) ஃபுல்-எல்இடி விளக்குகளுடன் வருகிறது.

10 lakhs rupee cars with led headlights and taillights

மாருதி சுஸுகி ஃபிரான்ஸ் (Maruti Suzuki Fronx): இந்த காரின் உயர் ரக வேரியண்ட்களில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் பொருத்தப்படுகின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.85 லட்சம் முதல் தொடங்குகின்றன. மேலே கண்ட பலேனோவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஃபிரான்க்ஸ் ஆகும்.

10 lakhs rupee cars with led headlights and taillights

நிசான் மேக்னைட் (Nissan Magnite): இந்த ஜப்பானிய-ஸ்டைல் எஸ்யூவி காரின் உயர் ரக வேரியண்ட்களில் பை-எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளன. மேக்னைட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.00 லட்சம் முதல் ஆரம்பிக்கின்றன.

10 lakhs rupee cars with led headlights and taillights

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): இந்திய செடான் கார்கள் பிரிவில், சிறப்பாக விற்பனையாகும் ஒரே காரான டிசையரின் இசட்.எக்ஸ்.ஐ+ (ZXI+) வேரியண்ட்டில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் இடம்பெறுகின்றன. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.26 லட்சம் முதல் துவங்குகின்றன.

10 lakhs rupee cars with led headlights and taillights

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): இந்த ஹூண்டாய் செடான் காரின் உயர் ரக வேரியண்ட்களில் எல்இடி டி.ஆர்.எல்-கள் பொருத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் ஹெட்லைட்கள் முழுமையான எல்இடி-கள் அல்ல. அவ்ரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.98 லட்சம் முதல் ஆரம்பிக்கின்றன. டிசையர் அளவிற்கு இல்லையென்றாலும், அவ்ரா கார்களின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகவே உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எல்இடி விளக்குகளை பயன்படுத்துவதில் பலருக்கு பல விதமான கருத்துகள் உள்ளன. எல்இடி விளக்குகள் அதிக பிரகாசமாக இருப்பதாக சிலர் குற்றச்சாட்டு கூறுவதும் உண்டு. இருப்பினும், இந்திய கார்கள் மார்க்கெட் மெல்ல மெல்ல எல்இடி விளக்குகள் பக்கம் நகர்ந்து வருகிறது. ஆகையால், ரூ.10 லட்சத்திற்குள் குறைவான விலையில் வாங்கும் காரிலும் எல்இடி விளக்குகளை பெற முயற்சியுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 25, 2025, 5:00 [IST]
English summary
Cars with led headlights and taillights under 10 lakhs toyota glanza and maruti suzuki baleno
மேலும்... #projector headlight #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X