இதுக்காகவே 10 லட்ச ரூபாயில் இதில் ஒரு காரை வாங்கலாம்! இந்தியாவிலேயே மூன்றே 3 கார்கள் தான் விற்பனையில் இருக்கு!

ரியர்-வீல்-டிரைவ் (Rear-wheel-drive - RWD) சிஸ்டம் கார்களை ஓட்டியவர்களுக்கு தெரியும் அவை ஓட்டுவதற்கு எந்த அளவிற்கு ஜாலியானவை என்று. இந்தியாவில் நாம் வாங்கும் பெரும்பாலான கார்கள் முன்-சக்கர டிரைவ் சிஸ்டத்தை கொண்டவை ஆகும். ரூ.15 லட்சத்திற்கு மேல் கிடைக்கும் கார்களில் ஆல்-வீல்-டிரைவ் (All-wheel-drive) டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டம் பெரும்பாலும் விலையுயர்ந்த சொகுசு கார்களில் தான் வழங்கப்படுகின்றன. ஏனெனில், ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை காரில் வழங்க வேண்டுமென்றால், அதற்கேற்ப காரில் மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இதனால், காரின் விலை அதிகரிக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் மூன்றே மூன்று கார்கள் கிடைக்கின்றன.

rear-wheel-drive system cars

மஹிந்திரா பொலேரோ நியோ (Mahindra Bolero Neo): மார்க்கெட்டில் பிரபலமான மஹிந்திரா பொலேரோவை காட்டிலும் இது கொஞ்சம் வித்தியாசமானது. சில வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்த மஹிந்திரா டியூவி300 (TUV300) என்கிற காரை கேள்விப்பட்டு இருப்பீர்கள்... அதன் அப்டேட் வெர்சன் தான் பொலேரோ நியோ ஆகும்.

பொலேரோவுக்கு இருக்கும் வரவேற்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அதன் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. முரட்டுத்தனமான தோற்றத்தில், லேடார்-ஃப்ரேம் சேசிஸிலில் உருவாக்கப்படும் பொலேரோ நியோ கார் ஆனது ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்தில் இயங்கும் எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.9.97 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

rear-wheel-drive system cars

மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco): இது கார் கிடையாது; இது ஒரு சிறிய ரக வேன் (Van) ஆகும். இதனை பொருட்களை கொண்டு செல்வதற்கான கமர்ஷியல் வாகனமாகவும் வாங்கலாம். அதேநேரம், பயணிகளை அழைத்து செல்லும் வாகனமாகவும் வாங்கலாம். இதனாலேயே ஈக்கோவை இந்த லிஸ்ட்டில் பார்க்கிறோம்.

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கும் ஈக்கோ வாகனம் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் கிடைப்பதில்லை. இந்தியாவிலேயே குறைந்த விலையில் ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட 4-சக்கர பயணிகள் வாகனமாக விளங்கும் ஈக்கோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.70 லட்சத்தில் இருந்து ரூ.6.96 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

rear-wheel-drive system cars

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV): பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இது ஒரு எலக்ட்ரிக் கார் (Electric Car) என்பது. டெக்னிக்கலாக பார்க்கும்போது இதுவும் பின்-சக்கர-டிரைவ் சிஸ்டத்தில் இயங்கும் கார் ஆகும். இருப்பினும், எலக்ட்ரிக் கார் என்பதால் சற்று வித்தியாசப்படுகிறது. அதாவது, ஒட்டும்போது பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு இணையான டிரைவிங் பண்புகள் இல்லை.

இருப்பினும், ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் குறைந்த விலையில் எலக்ட்ரிக் காரை வாங்க விரும்புபவர்களுக்கு கோமெட் இவி ஏற்றதாக இருக்கும். வித்தியாசமாக இந்த எலக்ட்ரிக் கார் மட்டும் ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டம் உருவாக்கப் படுவதற்கு காரணம், கோமெட் இவி காரின் வடிவமைப்பு ஆகும். இரு கதவுகளை மட்டுமே கொண்ட கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.50 லட்சத்தில் இருந்து தற்சமயம் ஆரம்பிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனித்துவமான டிரைவிங் பண்பை கொண்ட காரை ஓட்ட விரும்புபவர்களுக்கு மேற்கூறப்பட்ட கார்கள் ஏற்றவையாக இருக்கும். இவை தற்சமயம் மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைப்பவை ஆகும். யுஸ்டு-கார் (Used-car) மார்க்கெட்டில் கார் வாங்க போகிறீர்கள் எனில், பழைய தலைமுறை டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா (Toyota Innova Crysta) அல்லது மஹிந்திரா தார் (Mahindra Thar) காரை ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வாங்கலாம்.

மற்றொருவரால் பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை வாங்கும்போது கவனமாக சோதிக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, மஹிந்திரா தார் போன்ற ஆஃப்-ரோடு (Off-road) வாகனங்களை செகண்ட்-ஹேண்டில் வாங்கும்போது இன்னும் அதிக கவனம் தேவை. கார் எந்த அளவிற்கு சிறப்பாக இருந்தாலும் சரி, யூஸ்டு காரை வாங்குவதற்கு முன் கண்டிப்பாக ஓட்டிப் பார்ப்பது அவசியமாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2025, 5:00 [IST]
English summary
Cars with rear wheel drive system under 10 lakh rupees mahindra bolero neo and maruti eeco
மேலும்... #auto news #drive #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X