10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கும்போது நிறைய பேர் இதை கவனிக்குறதே இல்ல!! சின்ன டெக்னாலஜி... பெரிய பலன்!
இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் கார்களில் கூட இன்-கேபின் (In-cabin) காற்று சுத்திகரிப்பான் வசதி இப்போது கிடைக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கியா நிறுவனத்தின் "ஸ்மார்ட் பியூர் ஏர் பியூரிஃபையிங் சிஸ்டம்" (Smart Pure Air Purifying System) ஆனது பிரத்யேகமான ஒன்றாகும். இந்த அம்சத்துடன் விற்கப்படும் கியா சொனெட் கார் பத்து லட்ச ரூபாய்க்குள் வருகிறது.
அதேபோன்று, டாடா மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களும் தங்கள் கார்களில் இதேபோன்ற காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை, கிட்டத்தட்ட இந்த பட்ஜெட்டில் வழங்குகின்றன. நவீன கார்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆரோக்கியமான பாதுகாப்பை அளிக்கிறது.

கியா சொனெட் (Kia Sonet): ஏற்கனவே கூறியதுபோல், கியா சொனெட் காரில், "ஸ்மார்ட் பியூர் ஏர் பியூரிஃபையிங் சிஸ்டம்" வசதி பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. சொனெட்டின் எச்டிகே+ (HTK+) மற்றும் அதற்கு மேலான வேரியண்ட்களில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
இது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. சொனெட்டின் HTK+ வேரியண்ட்டின் ஆரம்ப விலை தற்சமயம் ரூ.9.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். காற்று சுத்திகரிப்பான், ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (AQI) டிஸ்ப்ளே ஆனது காருக்குள் செண்டர் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட்டில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா நெக்ஸான் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் ஆகும். இதன் டாப் வேரியண்ட்களில் இன்-கேபின் காற்று சுத்திகரிப்பான் வசதி வழங்கப்படுகிறது. நெக்ஸானின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) கிடைக்கின்றன.
இருந்தாலும், தூசுக்களை கண்டறியும் சென்சார்களுடன் கூடிய காற்று சுத்திகரிப்பான் பொதுவாக டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ் (Fearless) வேரியண்ட்களில் இருந்தே கிடைக்கிறது. இந்த டாப்-ஸ்பெக் வேரியண்ட்களின் விலைகள் பத்து லட்ச ரூபாய்க்கும் சற்றே அதிகமாகும். காற்று சுத்திகரிப்பானின் டிஸ்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் காரின் உட்புற காற்றின் தரத்தை எளிதாகக் கண்காணிக்க முடியும்.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): ஹூண்டாய் வென்யூ தனது டாப் வேரியண்ட்களில் "ஆட்டோ ஹெல்தி ஏர் பியூரிஃபையர்" (Auto Healthy air purifier) என்கிற பெயரில் காற்று சுத்திகரிப்பான் வசதியை வழங்குகிறது. ஒருங்கிணைந்த காற்று சுத்திகரிப்பான் வசதியைப் பெற, வென்யூவின் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) (SX(O)) வேரியண்ட்டில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
நெக்ஸானை போலவே, வென்யூவிலும் காற்று சுத்திகரிப்பானை பெறும் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் சற்று அதிகமாக வருகின்றன. குறைந்தப்பட்சமாக, எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.50 லட்சமாக உள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், டீசல் மேனுவல் பவர்டிரெய்ன் கொண்ட வென்யூ வேரியண்ட்களில் இந்த காற்று சுத்திகரிப்பான் வசதி வழங்கப்படுவது இல்லை. இதன் மூலம் ஹூண்டாய் வென்யூ, ஆரோக்கியமான பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காற்று சுத்திகரிப்பான் ஆனது சற்று பிரீமியம் தரத்திலான வசதி ஆகும். இதனால்தான், 10 லட்ச ரூபாய்க்குள் கியா சொனெட் காரில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது; இந்த தொகுப்பில் பார்த்துள்ள மற்ற இரண்டு கார்களின் விலைகள் 10 லட்ச ரூபாயை சற்று தாண்டியுள்ளன. மேலும், இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications









