கார்களில் இப்படிப்பட்ட சீட்கள் வழங்கப்படுவதே பலருக்கு தெரியாது! ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் அந்த ஒரு கார்!
இன்றைய கால மாடர்ன் கார்களில் பலரும் எதிர்பார்க்கும் அம்சமாக மாறி போன ஒன்று, வெண்டிலேட்டட் இருக்கைகள் (Ventilated Seats) ஆகும். இது வழங்கப்படும் கார்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர், இத்தகைய இருக்கைகளின் சிறப்பம்சங்களை பற்றி பார்த்துவிடுவோம். வெண்டிலேட்டட் இருக்கைகளின் முக்கியமான பயன் என்னவென்றால், அமரும் பயணிகளை அது எப்போதும் ஒரே அளவிலான உடல் வெப்ப நிலையில் வைத்திருக்கும்.
அதாவது, வெயில் காலத்தில் குளிர்ச்சியான காற்றையும், குளிர் காலங்களில் கதகதப்பாக சூடான காற்றையும் வழங்கும். இதற்கேற்ப இந்த வகை இருக்கைகளின் குஷின்களில் சிறு சிறு துளைகள் வழங்கப்படும் நிலையில், பெரும்பாலும் வெண்டிலேட்டட் இருக்கைகள் காரின் முன் இருக்கைகளாக தான் வழங்கப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க வெண்டிலேட்டட் இருக்கைகளை ரூ.10 லட்சத்திற்குள் பெறும் ஒரே கார் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மட்டுமே ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்யூவி (SUV) ரக கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் அடுத்த தலைமுறை ஜென்ரேஷனாக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
ஸ்டைலிஷான தோற்றம் மற்றும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த மஹிந்திரா எஸ்யூவி காரின் விலைமிக்க வேரியண்ட்களில் வெண்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. விலைமிக்க வேரியண்ட்களாக இருப்பினும், அவற்றில் சில வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.10 லட்சத்திற்குள்ளும், சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்திற்கு சில ஆயிர ரூபாய்கள் மட்டுமே அதிகமாகவும் உள்ளன.

வெண்டிலேட்டட் இருக்கைகள் இன்னமும் நம் இந்திய கார்கள் மார்க்கெட்டை பொறுத்தவரையில், சற்று பிரீமியம் தரத்திலான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதனாலேயே ரூ.10 லட்சதிற்குள் கிடைக்கும் கார்களில் பெரும்பாலும் இந்த வசதி வழங்கப்படுவது இல்லை. ஆனால், ரூ.10 லட்சத்திற்கு கூடுதலாக 1- 2 லட்சத்தை செலவழிக்க தயார் என்றால், இன்னும் சில கார்கள் வெண்டிலேட்டட் இருக்கைகள் உடன் கிடைக்கின்றன. அவற்றை இனி பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றான நெக்ஸானில் வெண்டிலேட்டட் இருக்கைகள் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன. அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அனைத்தும் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன.

டாடா பஞ்ச் இவி (Tata Punch EV): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் அளவில் சிறிய காரான பஞ்ச் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனாக பஞ்ச் இவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எலக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்களிலும் வெண்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. விலை குறைவான எலக்ட்ரிக் காராக இருப்பினும், வெண்டிலேட்டட் இருக்கைகள் உடன் கிடைக்கும் இந்த காரின் வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன.

ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq): ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் எஸ்யூவி கார், கைலாக் ஆகும். இந்த காரின் விலைமிக்க பிரிஸ்டீஜ் (Prestige) வேரியண்ட்களில் வெண்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. கைலாக் காரின் ஆரம்ப விலைகள் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே துவங்கினாலும், பிரிஸ்டீஜ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.89 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெண்டிலேட்டட் இருக்கைகளை பயன்படுத்தி பார்த்தவர்களுக்கு அதன் அருமை புரியும். சிறப்பான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதினாலேயே இந்த அம்சத்தை கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்குகின்றனர். இருப்பினும், ரூ.10 லட்சத்திற்குள் இந்த அதிநவீன வசதி உடன் காரை வாங்க விரும்புபவர்களுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









