ரோல்ஸ் ராய்ஸ் எல்லாம் ஓரம் போ! இனி செஞ்சூரி பிராண்ட் காரை உலகமே திருப்பி பார்க்கப்போகுது!
டொயோட்டா நிறுவனம் ரோல்ஸ்ராய்ஸ் போல காஸ்ட்லியான சொகுசு கார்களை செய்ய செஞ்சூரி என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது.இந்த பிராண்டின் கீழ் சொகுசு மற்றும் அல்ரா லக்ஸரி வாகனங்கள் எல்லாம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே லெக்ஸஸ் என்ற பிராண்ட் இருக்கும் நிலையில் இந்த புதிய பிராண்ட் எதற்காக? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகளவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு என ஒரு பெயர் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் மாஸ் மார்கெட்டை கணக்கில் வைத்து முதலில் தங்கள் பிராண்டை புரோமோட் செய்துவிட்டனர். இது மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அந்த பிராண்டிற்கான தனித்துவத்தை அதன் கார்களில் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த பிராண்ட் தங்கள் அளவை தாண்டி புதிய காரை வடிவமைத்தால் அது அந்த பிராண்டின் இமேஜிற்கு பிரச்சனை ஏற்படும்.

இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்படியாக குறிப்பிட்ட செக்மெண்ட்களை கவர தனியாக ஒரு பிராண்டை உருவாக்குவார்கள். இது குறிப்பிட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் மற்றொரு பிராண்டாக வேலை செய்யும். மக்கள் மத்தியில் இந்த இரண்டு பிராண்டுகளும் ஒரே நிறுவனம் தான் என வெளிப்படையாக விளம்பரம் செய்ய மாட்டார்கள். புதிய பிராண்ட் முற்றிலும் குறிப்பிட்ட செக்மெண்டை கவர்வதற்காக வேலை செய்யும்.
இப்படியாக டொயோட்டா நிறுவனம் லெக்ஸஸ் என்ற பிராண்டை வைத்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் லெக்ஸஸ் கார்களுக்கு தாயகம் டொயோட்டா தான். டொயோட்டாவின் சொகுசு கார்கள் எல்லாம் இந்த பிராண்டில் தயாராகிறது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் அல்டரா லக்ஸரி செக்மெண்டிற்காக தற்போது செஞ்சூரி என்ற பிராண்டை உருவாக்குகிறது. இதில் உருவாக்கப்படும் முதல் காரின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த செஞ்சசூரி பிராண்டில் உருவாக்கப்படும் கார்கள் சர்வதேச அளவில் ரோல்ஸ் ராய்ஸ்,பென்ட்லி போன்ற பிராண்ட் கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் லெக்ஸஸ் பிராண்ட் தொடரும். அதில் தொடர்ந்து புதுமையான மற்றும் அதிக ஃபெர்பார்மென்ஸ் கொண்ட கார்கள் தயாராகும்.
இந்த செஞ்சூரி பிரண்ட் டொயோட்டாவின் தாயகமான ஜப்பானில்தான் உருவாக்கப்படுகிறது. இது பெரும் பணக்கார்களை குறி வைத்து சிறப்பான வடிவமைப்பு, தனித்துவமான டிசைன், அதிக கஸ்டமைசேஸஸ் என பல அம்சங்களும் மற்றும் தனித்து இயங்கும் பிராண்டாக செயல்படவுள்ளது. இந்த பிராண்டில் தயாரிப்படும் கார்கள் எல்லாம் உலகிலேயே தலை சிறந்த கார்களாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் டொயோட்டா நிறுவனம் இதுவரைவிற்பனை செய்யாதவிலையில் வாகனங்களை விற்பனை செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
டொயோட்டாவிடம் இந்த செஞ்சூரி பிராண்ட் போக லெக்ஸஸ் மட்டும் கிடையது. இது போக செய்யான், டைஹெட்சூ போன்ற பிராண்டுகள் எல்லாம் இருக்கிறது. இது டொயோட்டாவின் நேரடி கொள்கையிலிருந்து மாறுபட்ட வாகனங்களை தயாரிப்பதற்காக அந்த நிறுவனம் உருவாக்கிய பிராண்ட்கள் ஆகும். செய்யான் பிராண்ட் புதிய வாடிக்கையாளர்கள், இளைஞர்களை கவரும் கார்களை டார்கெட் செய்து தயாரிக்கிறது. டைஹெட்சூ பிாரண்டில் காம்பேக்டான, குறைந்த விலை கார்கள் தயாரிக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று ரோல்ஸ் ராய்ஸ் பிராண்ட் பெயரை கேட்டாலே காஸ்ட்லியான கார், பணக்காரர்கள் பயன்படுத்தும் கார் என சொல்கிறோம். ஒரு பிராண்ட் அதன் உரிமையாளர்களின் லைஃப்லைடைலை உருவாக்குகிறது. இந்நிலையில் டொயோட்டா மாஸ் மார்கெட் பிராண்டாக இருப்பதால் அதில் இப்படியான கார்களை தயாரிப்பது கடினம். இந்நிலையில் செஞ்சூரி பிராண்ட் உலகளவில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








