வெறும் ரூ3.49 லட்சத்திற்கு புது காரா? இந்தியாவில் விற்கும் குறைந்த விலை கார்கள் இது தான்!

இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் வாகனம் வாங்குபவர்கள் குறைவான விலையில் வாகனங்களை வாங்க முடியும். இதனால் இன்று முதல் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் டாப் 5 கார்கள் குறித்த தகவல்கள வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மோடி அரசு இந்தியாவில் இன்று முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி சிறிய ரக கார்கள், மற்றம் பைக்குகளுக்க 28 சதவீதத்திற்கு பதிலாக 18 சதவீதமும், பெரிய ரக கார்கள் மற்றும் பைக்குகளுக்க 40 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இதுவரை விதிக்கப்பட்டு வந்த செஸ் வரி இதில் நீக்கப்படுகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது.

Cheapest Cars in India

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ

மாருதி நிறுவனத்தின் எஸ்-பிரெஸ்ஸோ கார் இ்நதியாவில் குறைந்த விலை காராக மாறியுள்ளது. இதற்கு முன்னர் ரூ4.26 லட்சம் தான் இந்த காரின் ஆரம்ப விலையாக இருந்தது. தற்போது ரூ76,000 குறைந்து ரூ3,49,900 புதிய விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியன்ட் ரூ6.11 லட்சமாக சிஎன்ஜி வேரியன்ட் இருந்தது. இது ரூ5.11 லட்சமாக குறைந்துள்ளது.

மாருதி ஆல்டோ கே10

மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே10 காரையும் குறைந்த விலை காராக நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறது. இதுவரை ரூ4.23 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையான இந்த கார் இனி ரூ3.69 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது இதன் டாப் வேரியன்ட் கார் ரூ6.20 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இனி ரூ5.31 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும்.

Cheapest Cars in India
ரெனால்ட் க்விட்

ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கார் தான் இந்தியாவிலேயே 3வது குறைந்த விலை காராக இருக்கிறது. இந்த காரின் பேஸ் வேரியன்ட் இதற்கு முன் ரூ4.69 லட்சமாக இருந்தது. இனி இந்த வேரியன்ட் ரூ4.29 லட்சமாக குறைந்துள்ளது. டாப் வேரியன்ட் ரூ6.44 லட்சமாக இருந்தது. இனி ரூ5.90 லட்சமாக குறைந்துள்ளது.

டாடா டியாகோ

டாடா நிறுவனத்தின் டியாகோ கார் தான் இந்தியாவில் 4வது குறைந்த விலை வாகனமாக இருக்கிறது. இந்த காரின் பேஸ் வேரியன்ட் இதுவரை ரூ4.99 லட்சமாக விற்பனையாகி வந்தது. இனி இது ரூ4.57 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும். இதன் டாப் வேரியன்ட் ரூ8.54 லட்சமாக விற்பனையானது. இனி இது ரூ7.82 லட்சமாக விற்பனையாகும்.

Cheapest Cars in India

மாருதி செலிரியோ

மாருதி நிறுவத்தின் செலிரியோ கார் தான் இந்தியாவில் 5 வது குறைந்த விலை காராக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கார் இதுவரை பேஸ் வேரியன்ட் ரூ5.64 லட்சமாக விற்பனையாகி வந்தது. இனி ரூ4.69 லட்சமாக விற்பனையாகும். அதே நேரம் டாப் வேரியன்ட்ரூ7.37 லட்சமாக விற்பனையாகி வந்தது. இனி ரூ6.72 லட்சமாக விற்பனையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிஎஸ்டியில் வந்துள்ள மாற்றத்தால் குறைந்த விலை கார் பாட்டியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சுமார் ரூ50,000 முதல் ரூ1 லட்சம் வரை வாகனங்கள் விலை குறைந்துள்ளதால் இந்த வாகனங்கள் நிச்சயம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் இதனால் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 22, 2025, 8:56 [IST]
English summary
Cheapest car in india after new gst
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X