காரை பார்த்து எடை போடாதீங்க... சீனாவில் ஒவ்வொரு மிடில்-கிளாஸ் வீட்டிலும் இருக்கும் கார்!

பிஒய்டி (BYD), உலகளவில் பிரபலமான சீன எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, இந்திய மார்க்கெட்டில் நுழைந்த மிகவும் சில சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுள் ஒன்று. மத்திய அரசின் போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியே பிஒய்டி எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விளம்பரப்படுத்தி உள்ளதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.

பிஒய்டி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் அட்டோ 3 (Atto 3), சீல் (Seal), சீலயன் 7 (Sealion 7) மற்றும் இமேக்ஸ் 7 (eMax 7) என நான்கு எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுடன் 5வது பிஒய்டி எலக்ட்ரிக் காராக விரைவில் அட்டோ 2 (Atto 2) இந்திய மார்க்கெட்டில் இணைய உள்ளது.

byd atto 2 electric car spotted

இந்தியாவில் பிஒய்டி நிறுவனம் அறிமுகம் செய்த 2வது காரான அட்டோ 3 ரூ.25 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை காட்டிலும் விலை குறைவான பிஒய்டி எலக்ட்ரிக் காராக அட்டோ 2 அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேநேரம், விலைக்கு ஏற்ப அட்டோ 3 காரை காட்டிலும் அட்டோ 2 எலக்ட்ரிக் கார் அளவில் சற்று சிறியதாக இருக்கும்.

இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அட்டோ 2 எலக்ட்ரிக் கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் சாலை ஒன்றில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதும் மூடிய நிலையில் இருந்தாலும், இது அட்டோ 2 எலக்ட்ரிக் கார் என்பதை சில விஷயங்களை வைத்து அடையாளம் காண முடிகிறது.

byd atto 2 electric car spotted

முக்கியமாக, காரின் பின்பக்கத்தில் மேற்கூரையில் பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்பாய்லர் மற்றும் தனித்துவமான டிசைனிலான டெயில்லைட்கள், டெயில்கேட், பம்பர் மற்றும் ஒளி பிரதிப்பலிப்பான்கள் உள்ளிட்டவை இது அட்டோ 2 எலக்ட்ரிக் கார் என்பதை காட்டுகின்றன. இந்த சோதனை ஓட்டத்தில், பிஒய்டி அட்டோ 2 எலக்ட்ரிக் காருக்கு முன்பாக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) கார் ஒன்று செல்வதை காணலாம்.

அளவில் ஒரே மாதிரியாக இருப்பது மட்டுமின்றி, தோற்றத்திலும் பிஒய்டி அட்டோ 2 மற்றும் ஹூண்டாய் கிரெட்டா கார்கள் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதை காண முடிகிறது. அட்டோ 2 எலக்ட்ரிக் கார் ஆனது சீனாவில் 'யுவான் அப்' (Yuan Up) என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

byd atto 2 electric car spotted

டிசைனை பொறுத்தவரையில், அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் மினி வெர்சனாக விளங்கும் அட்டோ 2 அதற்கேற்ப ரக்டான தோற்றத்தை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் மெல்லியதான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டி.ஆர்.எல்-களை பெறும் அட்டோ 2 எலக்ட்ரிக் காரின் நீளம் 4,310மிமீ ஆகும். சீனாவில், யுவான் அப் எலக்ட்ரிக் காரில் 45.1 kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 380கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என சான்றளிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனாவில் குறைந்த விலையில் மக்கள் பலர் வாங்கும் காராக பிஒய்டி யுவான் அப் விற்பனை செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட அளவில் சிறியதான எலக்ட்ரிக் கார்களை இன்னும் சீக்கிரமாக இந்தியாவிற்கு பிஒய்டி நிறுவனம் கொண்டுவந்து இருக்கலாம். ஏனெனில், இவ்வாறான கார்களுக்கே நம் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Tuesday, July 29, 2025, 16:59 [IST]
English summary
China bound byd atto 2 electric car spotted in india ahead of launch
மேலும்... #byd #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X