சீன நிறுவனம் தயாரித்த கார பார்த்து ஊரே சிரிக்குது.. ரேஞ்ச் ரோவருக்கு சீக்கு வந்தத போலிருக்கு! விலை ரொம்ப கம்மி

இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் மிகவும் காஸ்ட்லியான கார் மாடலாக லேண்ட் ரேஞ்ச் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) இருக்கின்றது. இந்த காரை வாங்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருந்தாலும் அதன் அதீத விலை காரணமாக எட்டாக் கனியாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சீன நிறுவனம் ஒன்று இந்த கார் மாடலின் மினி வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் மாடலின் காப்பியடிக்கப்பட்ட வெர்ஷன் ஆகும்.

மிகவும் சிறிய உருவத்தையே அந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. அதாவது, மாருதி சுஸுகியின் ஆல்டோ (Maruti Suzuki Alto) காருக்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் மாடலின் ஸ்டைலை வழங்கியதைப் போல இருக்கின்றது. இதன் விலையும்கூட ஆல்டோ-வுக்கு இணையானதாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Chinese range rover clone

4 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையே அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது, 3.50 லட்சம் ரூபாக்கும் குறைவான விலையில் இந்த கார் சீனாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரை வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ரேஞ்ச் ரோவர் கார் மீது அதிக ஆசைக் கொண்டிருப்பவர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த கார் மாடலை சீன நிறுவனம் மிக கம்மியான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காரையே பிரபல யுட்யூப் சேனலைச் சேர்ந்தவர்கள் பிரத்யேகமாக இறக்குமதி செய்திருக்கின்றனர். சூப்பர் கார் ப்ளாண்டே யுட்யூப் சேனலைச் சேர்ந்தவர்களே இந்த காரை வாங்கி இருக்கின்றனர்.

Chinese range rover clone with real range rover

இறக்குமதி செய்யப்பட்ட வரி மற்றும் காரை வாங்கியது என மொத்தமாகவே அவர்கள் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்திருக்கின்றனர். சொல்லப்போனால் 1 கோடி ரூபாய் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் மாடலின் மினி வெர்ஷனை அவர்கள் 9 லட்ச ரூபாக்கும் குறைவான விலையில் வாங்கிவிட்டனர்.

சீன நிறுவனம் சிறிதும் மாற்றமின்றி அப்படியே ரேஞ்ச் ரோவர் கார் மாடலை பிரதிபலிக்கும் வகையில் தன்னுடைய இந்த கார் மாடலை தயார் செய்திருக்கின்றது. ஹெட்லைட், இனிடிகேட்டர், கிரில், பான்னெட், பம்பர் மற்றும் பக்கவாட்டு பேனல் டிசைன் என அனைத்திலும் ரேஞ்ச் ரோவர் காரை அப்படியே இந்த கார் மாடல் பிரதிபலிக்கின்றது.

ஆனால், அளவில் மட்டும் இவை அனைத்தும் சிறியவையாக உள்ளன. இதேபோல், ரேஞ்ச் ரோவர் கார் மாடலில் டோருடன் டோராக இருக்கக் கூடிய கை பிடிகளே இடம் பெற்றிருக்கும். ஆனால், இந்த காரில் வழக்கமான கார் கதவு கைப்பிடியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் சில வித்தியாசங்களை இந்த இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.

விலையை மிகவும் குறைவானதாக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த சிறிய மாற்றங்களைகூட சீன கார் உற்பத்தி நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. சீன நிறுவனங்கள் காப்பியடித்து கார்களை தயாரிப்பதில் கை தேர்ந்த நிறுவனங்களாக இருக்கின்றன. இதற்கு மிக சிறந்த கார் மாடலாக இந்த கார் மாடல் இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டூப்ளிகேட் வெர்ஷன் பலரையும் வாயடைக்கச் செய்திருக்கின்றது. இருப்பினும், ஒரு சிலர் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவருக்கு சீக்கு வந்த கார் மாடலை போல இது இருப்பதாக கூறி கிண்டலடித்தும், நகைத்தும் வருகின்றனர். ஆனால், சீன நிறுவனத்தின் இந்த கை தேர்ந்த காப்பியடிக்கும் திறன் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 8, 2025, 13:32 [IST]
English summary
Chinese range rover clone available for usd 4000 cheaper than base maruti alto
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+