சீன அரசால் பெரிய பிரச்சனை இந்தியாவை நெருங்கிட்டு இருக்கு! கார், போன் உற்பத்தியை நிறுத்தும் சூழல்!

உலக ஆட்டோமொபைல் (Automobile) துறையில் ஒரு பிரச்சனை மெதுவாக நாளுக்கு நாள் பெரியதாகி கொண்டே வருகிறது. ஆனால், இது ஆட்டோமொபைல் துறையை சேர்ந்தவர்களை தாண்டி மக்கள் பலருக்கு தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் விளைவாக, இந்தியா உள்பட உலகளவில் வாகன உற்பத்தி குறைந்து வருவதுடன், இதன் காரணமாக வாகனங்களின் விலைகளும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன மாதிரியான பிரச்சனை நம்மை நெருங்கி வருகிறது? இதனால் அடுத்து என்னென்ன நடக்க போகிறது? இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) இதற்கு எடுக்க போகும் நடவடிக்கை என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மொபைல் போன் போன்ற சிறிய ரக எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து, ஆட்டோமொபைல் வாகனங்கள் மற்றும் பெரிய ஏவுகணைகள் வரையில் உற்பத்தி செய்ய உலகில் அதிகமாக கிடைக்கும் உலோகங்களில் இருந்து மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய உலோகங்கள் வரையில் தேவைப்படுகின்றன. உலகளவில் அரிதாக கிடைக்கக்கூடிய தனிமங்கள் ஏகப்பட்டவை உள்ளன.

restrictions on rare earth elements

இன்னும் சொல்லப்போனால், அத்தகைய தனிமங்கள் புதியது, புதியதாக உலகின் பல பகுதிகளில் இருந்து தொடர்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டு தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் உலகின் அரிதான தனிமங்களுள் நியோடிமியம் (Neodymium), டிசிப்ரோசியம் (Dysprosium), டெர்பியம் (Terbium) என்பனவும் அடங்குகின்றன.

மேற்கூறப்பட்ட 3 அரிதான தனிமங்கள் இன்றைய கால மாடர்ன் வாகனங்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களை இவை இல்லாமல் உற்பத்தி செய்யவே முடியாத சூழல் உள்ளது. ஏனெனில், இந்த தனிமங்களை கொண்டு தயாரிக்கப்படும் அதிவலிமைமிக்க நிரந்த காந்தகங்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கு அத்தியாவசியமானதாக விளங்குகின்றன.

இவ்வாறு, குறிப்பிட்ட தனிமங்களின் மீது அதிக தேவை ஏற்படும்போதுதான் எல்லா பிரச்சனையும் ஆரம்பமாகிறது. அதிலிலும், இவ்வாறு உலகிலேயே அரிதாக கிடைக்கக்கூடிய தனிமங்கள் என்றால் நாடுகளிடையே போர் கூட உருவாகக்கூடும். அப்படியொரு சூழலில்தான் நம் இந்தியா தற்போது உள்ளது என்பது பலருக்கு தெரியாத விஷயம் ஆகும். மேற்கூறப்பட்ட அரிதான தனிமங்கள் சீனாவில்தான் தற்சமயம் அதிகமாக கிடைக்கின்றன.

உலகின் வேறு பகுதிகளிலும் கிடைத்தாலும், இயற்கையாக பூமியில் கிடைக்கக்கூடிய இந்த தனிமங்களின் இருப்பு சீனாவில்தான் அதிகமாக உள்ளது. இதன் மூலமாகவே, எலக்ட்ரிக் வாகனங்களில் உலகின் அசைக்க முடியாத சக்தியாக சீனா உருமாறி வருகிறது. இந்த அரிதான தனிமங்களுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்து வெளிநாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்வதை குறைக்கும் முயற்சியாக சில கட்டுப்பாடுகளை ஏப்ரல் 4ஆம் தேதி சீன அரசு கொண்டுவந்தது.

restrictions on rare earth elements

இதனால், உலகின் ஏழு அரிய வகை தனிமங்கள் மற்றும் அவற்றின் மூலம் உருவாக்கப்படும் காந்தகங்களை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்ய சிறப்பு ஏற்றுமதி உரிமம் இருக்க வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) உற்பத்தி செய்வதில் தொய்வு ஏற்படும் என்பதை புரிந்துக் கொண்ட மாருதி சுஸுகி நிறுவனம் இதனை சமாளிக்க பல்வேறு வழிகளை கையாள போவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகின் அரிதான தனிமங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையினால் எங்களது சப்ளை செயின் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களது செயல்பாடுகளில் எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் இதற்கு பல்வேறு மாற்று தீர்வுகளை கொண்டுவருகிறோம். மெட்டீரியல்கள் கிடைப்பதில் ஏதேனும் இடையூறுகள் இனியும் ஏற்பட்டால் அனைத்து முதலீட்டாளர்களிடமும் இதுகுறித்து தெரிவிப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலீட்டாளர்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாருதி சுஸுகி நிறுவனம் இடையில் தனது வணிகத்தை சில காலத்திற்கு குறைத்து கொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க மாருதி சுஸுகி போன்ற மிக பெரும் கார்ப்பிரேட் நிறுவனங்கள் அரசாங்கத்தை நாடும் என்பதால், சீனா கொண்டுவந்துள்ள இந்த புதிய கட்டுப்பாடு மத்திய அரசாங்கத்திற்கு தான் பெரிய தலைவலி ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 13, 2025, 17:00 [IST]
English summary
Chinese restrictions on rare earth elements making maruti suzuki look for other solutions
மேலும்... #maruti suzuki #car production #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+