ரோல்ஸ் ராய்ஸ் மார்க்கெட்டை காலி பண்ண ரூ. 3.50 லட்சத்தில் மினி ரோல்ஸ் ராய்ஸ்.. தயார் செய்திருப்பது யார் தெரிமா?

உலக பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காட்சியளிக்கின்றது. ஆடம்பரத்திற்கும், தாராளமான இட வசதிக்கும் பெயர்போன ஓர் கார் மாடலே இது ஆகும். இதேபோல், அட்வான்ஸ்டு மற்றும் நவீன கால அம்சங்களையும் மிக தாராளமாக இந்த கார் மாடல் தன்னுள் கொண்டிருக்கும். இத்தகைய ஓர் கார் மாடலுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே சீன வாகன உற்பத்தி நிறுவனம் மினி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் மாடலை உருவாக்கி இருக்கின்றது.

சீன சந்தையில் மட்டுமே இந்த மினி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் விற்பனைக்குக் கிடைக்கும். இதையே துபாயைச் சேர்ந்த பெரும் பணக்கார யுட்யூபர் ஒருவர் சமீபத்தில் வாங்கி இருக்கின்றார். உண்மையான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சொகுசு கார் மாடலுடன் ஒப்பிட்டு பார்க்கும் நோக்கிலேயே இதனை அவர் பிரத்யேகமாக துபாயில் இறக்குமதி செய்திருக்கின்றது.

Rolls royce cullinan replica from china

தொடர்ந்து இரண்டு வாகனங்களையும் அருகருகே நிற்க வைத்து அவர் ஒப்பிட்டும் பார்த்திருக்கின்றார். பார்க்க ஒரே மாதிரியாக தென்பட்டாலும் இந்த சீன காரை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் குழந்தை என்றுகூட சொல்ல முடியவில்லை. அதேவேளையில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை காப்பியடித்து சீன நிறுவனம் இந்த காரை தயாரிக்கவில்லை என்றும் சொல்ல முடியவில்லை.

கிரில், ஹெட்லைட், பம்பர், பான்னெட் மற்றும் டோர் திறக்கும் விதம் என அனைத்திலும் கல்லின் காரை பிரதிபலிக்கும் வகையிலேயே சீன நிறுவனத்தின் கார் உள்ளது. இதன் வாயிலாக சீனர்கள் காப்பி அடித்து வாகனங்களை தயாரிப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றனர்.

ஆமாங்க, இதுபோன்று சீன வாகன உற்பத்தியாளர்கள் உலக புகழ்பெற்ற பிராண்டுகளின் தயாரிப்புகளை டூப்ளிகேட் செய்து தங்களின் வாகனங்களை தயாரிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் பலவற்றை அவர்கள் அரங்கேற்றி இருக்கின்றனர். அதேநேரத்தில், இந்த வாகனத்தை சீன நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைத்திருக்கின்றது.

அத்துடன், மிகவும் குட்டியான தோற்றத்தையும் இதற்கு வழங்கி இருக்கின்றனர். மிகவும் குட்டியான தோற்றத்தில் இந்த கார் இருந்தாலும் ஒரே நேரத்தில் 5 பேர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, பின் பக்க இருக்கையில் தாராளமாக 3 பேர் அமர முடியும் என துபாய் யுட்யூபரும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

Unboxing chinese rolls royce cullinan replica

மேலும், பிரீமியம் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களையும் மிக தாராளமாக இந்த கார் மாடல் தாங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார். அந்தவகையில், பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி துவாரங்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி, கவர்ச்சிகரமான டோர் பேனல்கள் மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவற்றை சீன நிறுவனம் இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

சீன சந்தையில் இந்த குட்டியான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் டூப்ளிகேட் கார் 4 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே விற்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. அதாவது, ரூ. 3.5 லட்சம் என்கிற விலையிலேயே அது சீனாவில் விற்கப்படுகின்றது. ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க வேண்டும் என்கிற கனவில் இருக்கும் ஏழை சீனர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Chinese rolls royce cullinan replica interior

இந்தியர்களால் இந்த காரை அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடியாது. இந்தியாவில் சீன நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய அளவில் தடை நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த காரை இறக்குமதி செய்யும்போது விலையைபோல இன்னொரு மடங்கு தொகையை நாம் வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று சீன நிறுவனத்தின் காப்பி வெர்ஷன் ஒன்றுகூட விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இதுமாதிரியான காப்பி வெர்ஷனை இந்தியாவில் விற்பனைச் செய்வது அவ்வளவு எளிதானதும் கிடையாது. பல்வேறு சிக்கல்களை அந்த தயாரிப்பு நாட்டில் சந்திக்க நேரிடும்.

FAQs
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை அதிக எண்ணிக்கையில் யார் பயன்படுத்துகின்றார்?

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை அதிக எண்ணிக்கையில் அம்பானி குடும்பமே பயன்படுத்தி வருகின்றது. அவர்களிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை எண்ண நம் கைகளில் உள்ள விரல்களே போதாது. அந்த அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையில் அவர்களிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ்-இன் கார் மாடல்கள் உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் எத்தனை பேர் வரை பயணிக்கலாம்?

சீனாவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் டூப்ளிகேட் கல்லினன் கார் மாடலை போலவே இதிலும் 5 பேர் வரை மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், மிக மிக அதிக இட வசதியுடன் இதில் பயணிக்க முடியும்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மாடலின் விலை எவ்வளவு?

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஆடம்பர கார் ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 12.25 கோடிக்கும் அதிகம் ஆகும்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Monday, March 17, 2025, 18:22 [IST]
English summary
Chinese rolls royce cullinan replica compared with original
மேலும்... #luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X