வெறும் ரூ11,000 இருந்தா இந்த காரை இப்பவே புக் பண்ணலாம்! அப்படி இதுல என்ன இருக்கும்?

சிட்ரோன் நிறுவனம் தனது ஏர்கிராஸ் எக்ஸ் எஸ்யூவி காருக்கான புக்கிங்கை துவங்கியுள்ளது. இந்த காரை புக் செய்ய வெறும் ரூ11,000 டோக்கன் அட்வான்ஸ் செலுத்தினால் போதும். இதில் பல்வேறு அப்டேட்கள் வரவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் நிறுவனம் தனது கார்களில் எக்ஸ் வேரியன்டகளை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு மன்னர் பசால்ட் எக்ஸ் காரை அறிமுகப்படுத்திய நிலையில் தனது ஏர்கிராஸ் எக்ஸ் என்ற எஸ்யூவி காரை தற்போது அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கார் அடுத்த மாதம் அறிமுகம் ஆகும் என தெரிகிகிறது. இந்த காருக்கான புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. வெறும் ரூ11,000 முன்பணம் செலுத்த இந்த காரை புக் செய்து கொள்ளலாம்.

Citroen Aircross X Pre Bookings Open

இந்த காரில் பசால்ட் எக்ஸ் காரில் உள்ளதை போலவே அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அந்நிறுவனம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி புதிய கலர் ஆப்ஷன் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். சிட்ரோன் பசால்ட் எக்ஸ் காரை போலவே இந்த ஏர்கிராஸ் எக்ஸ் காரிலும் உட்புறத்தில் அதிகமான மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் குறித்த வெளியான டீசர் மூலம் பச்சை நிற கலர் ஆப்ஷன் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெயில் கேட் பகுதியில் எக்ஸ் பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி வெளிப்புறத்தில் வேறு மாற்றங்கள் இருப்பது போல தெரியவில்லை. கேபின் பகுதியில் முக்கியமான அப்டேட்கள் இடம் பெறும் என எதிர்பார்க்லாம். லெதர் மூலம் மூடப்பட்ட பாலிஷ்டு டேஷ் போர்டு வழங்கப்படும். இதற்காக சாஃப்ட் டச் மெட்டிரீயல் வழங்கப்படும். டுயல் டோன் கலர் தீம் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது.

Citroen Aircross X Pre Bookings Open

இது போக இந்த காரில் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், வெள்ளை நிற ஆம்பியன்ஸ் லைட்டில், எல்இடிஃபாக் லைட்டுகள், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், லேதரேட் அப்ஹோல்சரி, மற்றும் 360 டிகரி கேமரா ஆகிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் CARA என்ற இன்கார் ஏஐ அசிஸ்டென்ஸை கொண்டிருகு்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பசால்ட் எக்ஸ் காரிலும் இருக்கிறது. இது 52 மொழிகளில் வாய்ஸ் கமெண்ட்களை ஏற்றுக்கொள்ளும்.

இது சில கம்பிளக்ஸான டேட்டாக்களையும் கையாளும் உதாரணமாக ஆப்டிமல் நேவிகேஷன் ரூட், அருகில் உள்ள பெட்ரோல் பம்ப், எவ்வளவு தூரத்திற்கு இருக்கும் பெட்ரோலில் வாகனம் பயணிக்கும் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெறும். இது போன்ற பல தகவல்களை இந்த ஏஐ மூலம் பெற முடியும்.

Citroen Aircross X Pre Bookings Open

இந்த காரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதையும் காண முடியாது. அதே 1.2 லி 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் தான் இதில் இடம் பெறும் இது 81 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்டில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 108 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு மேனுவல் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சீட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ் கார் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம். சிட்ரோன் நிறுவனம் விற்பனை யுக்தியை மாற்றி மக்களின் கவனத்தை பெற விரும்புகிறது.இந்நிறுவனம் மிக வேகமாக அதன் யுக்தியை மாற்றி அதிக ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்களை திறந்தால் விற்பனை நிச்சயம் சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 16, 2025, 23:25 [IST]
English summary
Citroen aircross x pre bookings open new features colours
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X