ரூ.2.8 லட்சம் சலுகை அறிவிச்சதுக்காக ஆவது இந்த காரை யாராவது வாங்குறாங்களானு பார்ப்போம்!
சிட்ரோன் (Citroen), உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் சி5 ஏர்கிராஸ் (C5 Aircross) கார் மூலமாக நுழைந்த சிட்ரோன் நிறுவனம், இந்திய சந்தையில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே எப்படியாவது, இந்தியர்களை கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை சிட்ரோன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஸ்டைலான தோற்றத்தில் புதியது, புதியதாக கார்களை அறிமுகம் செய்வதுடன், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது கார்களுக்கு அவ்வப்போது சலுகைகளையும் மறக்காமல் சிட்ரோன் நிறுவனம் அறிவித்து விடுகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் சிட்ரோன் நிறுவனம் அதன் அனைத்து கார்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.

அனைத்து சிட்ரோன் கார்களும் என சொல்ல முடியாது, ஏனெனில் இந்தியாவில் சிட்ரோன் விற்பனை செய்யும் விலைமிக்க காரான சி5 ஏர்கிராஸுக்கு மட்டும் எந்த சலுகைகளும் இந்த முறை அறிவிக்கப்படவில்லை. மற்ற சிட்ரோன் கார்கள் அனைத்திற்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மார்க்கெட்டில் நுழைந்து 3 வருடங்கள் நிறைவடைந்து 4வது வருடத்திற்குள் நுழைவதை கொண்டாடும் விதமாக சிட்ரோன் இந்த சலுகையை அறிவித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின்படி, அதிகப்படியான சலுகைகளை பெறும் சிட்ரோன் கார் என்றால், அது பசால்ட் (Basalt) ஆகும். டாடா கர்வ் (Tata Curvv) காருக்கு போட்டியாக கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகம் செய்த பசால்ட் காருக்கு சுமார் ரூ.2.8 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாடா கர்வ் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டதால், இந்தியாவின் முதல் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காராக விளங்கும் பசால்ட் காரில் ரூ.2.8 லட்சம் வரையிலான சலுகைகளை பெற வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் கடந்த 2024ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பசால்ட் காரின் மேக்ஸ் (Max) வேரியண்ட்டை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) உடன் வாங்க வேண்டும்.
பசால்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.32 லட்சத்தில் இருந்து ரூ.14.10 லட்சம் வரையில் உள்ளன. பசால்ட் காருக்கு அடுத்து அதிக சலுகைகளை பெற்றுள்ள சிட்ரோன் கார், சி3 (C3) ஆகும். 2022ஆம் ஆண்டில் சி5 ஏர்கிராஸ் என்கிற ரூ.30 லட்சம் விலை கொண்ட காரை அறிமுகம் செய்த பிறகு இந்தியாவிற்கென விலை குறைவான காரை அறிமுகம் செய்யும் முயற்சியாக களமிறக்கப்பட்டதே, சி3 ஆகும்.

ரூ.1.45 லட்சம் வரையிலான சலுகைகள் சி3 காருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு 2025ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட சி3 காரின் ஷைன் வேரியண்ட்டை வாங்க வேண்டும். இதன் எலக்ட்ரிக் வெர்சனான இசி3 எலக்ட்ரிக் காரின் 2023ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஸ்டாக்குகளுக்கு ரூ.40,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல், 2023இல் உருவாக்கப்பட்ட சிட்ரோன் ஏர்கிராஸ் காரை வாங்குபவர்களும் ரூ.65,000 வரையிலான சலுகைகளை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சி3 காரை தவிர்த்து, மற்ற கார்கள் அனைத்திற்கும் பழைய ஸ்டாக்குகளுக்கு தான் சிட்ரோன் நிறுவனம் சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. இதில் இருந்து பழைய ஸ்டாக்குகளை விற்று தீர்ப்பதாக தான் சிட்ரோன் நிறுவனம் இந்த சலுகைகளை அறிவித்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus) மற்றும் லாயலிட்டி போனஸ் (Loyalty Bonus) உள்ளிட்டவை அடங்குகின்றன.


Click it and Unblock the Notifications









